வயநாட்டில் போட்டிக்கு போட்டி... பிரச்சாரத்தில் குதிக்கின்றனர், பிரியங்கா, ஸ்மிருதி இராணி
Recommended Video
வயநாடு: கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், பிரியங்கா காந்தி மற்றும் ஸ்மிருதி இராணி போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரத்தில் குதிக்க உள்ளனர்.
மூன்றாவது கட்டமாக வரும் 23 ஆம் தேதி கேரளாவில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி, பிரச்சாரங்கள் இன்னும் இரண்டு நாட்களில் ஓய உள்ளது. ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில், அவருக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி நாளை பிரச்சார பொதுக்கூட்டத்தில்
கலந்து கொள்ள உள்ளார்.

பிற மாநிலங்களில், பிரச்சாரத்தில் பிஸியாக இருப்பதால், வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு ஒரு முறை மட்டுமே வயநாட்டில் பிரச்சாரம் செய்த ராகுலால் மீண்டும் வர இயலவில்லை. இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக பிரியங்கா காந்தி, வயநாடு தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம்
செய்ய 2 நாள் பயணமாக நாளை வருகிறார்.
நிலம்பூர், மலப்புரம் ஆகிய 2 இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேச உள்ளார். அன்றிரவே அவர் கேரளாவில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.
இந்தநிலையில், பாஜக கூட்டணி வேட்பாளர் துஷார் வெள்ளாப்பள்ளிக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சுல்தான் பெத்தேரியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதனால் அந்த தொகுதியில் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications