திடீரென குண்டு வீசிய அமெரிக்கா - ஜப்பான்..கொதித்த கிம் ஜாங் உன்.. போருக்கு தயாராகும் வடகொரியா?
பியாங்யாங்: வடகொரியா - தென்கொரியா இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. இந்நிலையில் தான் திடீரென்று தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் போர் விமானங்கள் வடகொரியா அருகே குண்டு வீசியதால் கிம்ஜாங் உன் கடும் கோபமடைந்து 3 நாடுகளுக்கும் கடும் வார்னிங்கை கொடுத்துள்ளார். இதனால் வடகொரியா - தென்கொரியா இடையேயான மோதல் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
வடகொரியாவும், தென்கொரியாவும் அண்டை நாடுகளாக உள்ளன. நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கு எப்படி பிரச்சனை உள்ளதோ? அதேபோல் வடகொரியா, தென்கொரியா இடையே பிரச்சனை இருக்கிறது. இருநாடுகள் இடையே தொடர்ந்து சண்டை நிலவி வருகிறது.

இதில் வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். இவர் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். அமெரிக்காவை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். வடகொரியாவிடம் அணுஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்ளன. இது அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி தென்கொரியா ரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ராணுவ வீரர்கள், ஆயுதங்களை வடகொரியா வழங்கி உள்ளது. சீனா, ரஷ்யா ஏற்கனவே அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நாடுகளாகும். இதனால் அந்த நாடுகளுடன் வடகொரியா நெருக்கமாக செயல்பட்டு வருவது அமெரிக்கா தனக்கான பெரும் அச்சுறுத்தலாக பார்க்கிறது.
மாறாக தென்கொரியாவை எடுத்து கொண்டால் அது அமெரிக்கா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. அமெரிக்கா தொடர்ந்து தென்கொரியாவுக்கு உதவி வருகிறது. வடகொரியாவை மிரட்ட தென்கொரியாவை அமெரிக்கா பயன்படுத்தி வருவதாக கிம் ஜாங் உன் பலமுறை குற்றம்சாட்டி உள்ளார். அமெரிக்கா தவிர தென்கொரியா ஜப்பானுடன் நல்ல உறவில் இருந்து வருகிறது. ஜப்பானும் தென்கொரியாவுக்கு பக்கப்பலமாக இருந்து வருகிறது.
மேலும் வடகொரியாவை மிரட்டும் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய 3 நாடுகளும் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தான் சமீபத்திய போர் ஒத்திகையால் வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் கடும் கோபமடைந்துள்ளார்.
அதாவதுதென்கொரியாவின் ஜெஜூ தீவு பகுதியில் போர் ஒத்திகை நடந்தது. இந்த போர் ஒத்திகையில் அமெரிக்காவின் பி-52எச் போர் விமானம், தென்கொரியாவின் கேஎப்-16, ஜப்பானின் எப்-2 போர் விமானங்கள் டம்மி இலக்குகளை குண்டு வீசி தகர்த்தன.
அமெரிக்காவின் சக்தி வாய்ந்த போர் விமானங்களுள் ஒன்றான பி-52எச் போர் விமானம் வடகொரியாவுக்கு பக்கத்தில் கொண்டு செல்லப்பட்டது இதுவே முதல் முறையாகும். அதுமட்டுமின்றி இது தங்களுக்கு விடுக்கப்பட்ட நேரடி மிரட்டல் என்று கிம் ஜாங் உன் நினைக்கிறார்.
இதனால் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பாவின் கூட்டு பயிற்சி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு கடும் சிற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கு வடகொரியா கடும் மிரட்டல் விடுத்துள்ளது. இதுதொடர்பாக வடகெரியா சார்பில், ‛‛அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் என எந்த அச்சுறுத்தலையும் சமாளிக்கும் ராணுவ நடவடிக்கைக்கு வடகொரியா தயார் நிலையில் இருக்கிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது வடகொரியா - தென்கொரியா இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.
-
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது?











Click it and Unblock the Notifications