1 கோடி பேரை கொல்ல முடியாது.. ஆப்கானிஸ்தானை 1 வாரத்தில் மேப்பில் இருந்து அகற்றுவோம்.. டிரம்ப் திடுக்
ஆப்கானிஸ்தான் உடன் போர் வந்தால் ஒரே வாரத்தில் அந்த நாட்டை உலக வரைபடத்தில் இருந்தே நீக்குவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நியூயார்க்: ஆப்கானிஸ்தான் உடன் போர் வந்தால் ஒரே வாரத்தில் அந்த நாட்டை உலக வரைபடத்தில் இருந்தே நீக்குவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே சந்திப்பு நடந்தது. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பு பெரிய பிரச்சனையாகி உள்ளது.
காஷ்மீர் பிரச்சனை குறித்து இரண்டு நாட்டு அதிபர்களும் பேசிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் ஆப்கானிஸ்தான் பிரச்சனை குறித்தும் இரண்டு நாட்டு தலைவர்களும் இதில் பேசிக்கொண்டார்கள்.

என்ன சொன்னார்
ஆப்கானிஸ்தான் பிரச்சனை குறித்து பேசிய டிரம்ப், ஆப்கானிஸ்தான் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக சரி ஆகி வருகிறது, இந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் எங்களுக்கு உதவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்றுதான் எங்களுக்கும் ஆசை.

ஆனால் என்ன
ஆனால் ஆப்கானிஸ்தானில் இன்னும் தாலிபன் ஆதிக்கம் இருக்கிறது. முழுதாக தாலிபனுடன் எங்கள் பேச்சுவார்த்தை முடியவில்லை. அதனால்தான் நாங்கள் இன்னும் எங்கள் அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக் கொள்ளவில்லை. பாகிஸ்தான் மூலம் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மிக மோசம்
தாலிபன்களை பேச்சுவார்த்தை நடத்தாமல் எங்களால் சண்டையிட்டு அழிக்க முடியும். போர் என்று வந்தால் ஒரே வாரத்தில் ஆப்கானிஸ்தான் இல்லாமல் போகும். ஆப்கானிஸ்தான் உடன் போர் வந்தால் ஒரே வாரத்தில் அந்த நாட்டை உலக வரைபடத்தில் இருந்தே நீக்குவோம். ஆனால் அமெரிக்காவிற்கு அந்த எண்ணம் இல்லை.

முடியாது
எங்களுக்கு 1 கோடி பேரை கொல்லும் எண்ணம் எல்லாம் இல்லை. அதனால்தான் நாங்கள் பேச்சுவார்த்தையில் இறங்கி இருக்கிறோம். எல்லாம் சரியாக சென்றால் அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து முழுதாக விலக்கிக் கொள்வோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை.. 30 பேர் பலியானது எப்படி? பிரச்சனை ஏன்? எளிய விளக்கம் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications