ஹமாஸ்க்கு எதிரான போர் முடிந்த பிறகு காசாவை ஆட்சி செய்ய போவது யார்? இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பதில்
டெல் அவிவ்: காசாவை ஆட்சி செய்யவோ, ஆக்கிரமிக்கவோ நாங்கள் முயற்சிக்கவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அதேவேளையில் காசாவிற்கு சிறப்பான எதிர்காலத்தை அளிக்க முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7 ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. காசா முனையில் இருந்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்த தாக்குதலில் திக்குமுக்காடிப்போன இஸ்ரேல், சுதாரித்துக் கொண்டு பதில் நடவடிக்கையை ஆரம்பித்தது. ஒருமாதத்தை கடந்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நடைபெற்று வருகிறது.

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல், வான், தரை என முப்படைகளை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் மட்டும் இதுவரை 10 ஆயிரத்து 800-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல்- ஹமாஸ் போரால் காசாவில் மிகவும் மோசமான மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல், காசாவுக்கு வழங்கி வந்த மின்சாரம், எரிபொருள், குடிநீர் ஆகியவற்றை நிறுத்தியுள்ளது.
இதனால் காசாவில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காசாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் அங்கே ஆயுதங்கள், ஏவுகணைகள், உணவு மற்றும் மருத்துவப் பொருட்களைக் குவித்து வருகிறது. அது மட்டும் இன்றி பல கி.மீட்டர்களுக்கு ஹமாஸ் அமைப்பினர் வைத்து இருக்கும் சுரங்க பாதைகள் மூலம் இஸ்ரேல் படை மீது கொரில்லா தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறதாம்.
இதனால், போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதனால், காசா மற்றும் இஸ்ரேல் என இரு இடங்களிலுமே பதற்றம் நிறைந்தே காணப்படுகிறது. இதனிடையே, காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்க கூடாது என்று அமெரிக்கா கூறி வருகிறது. கசாவை சுற்றி வளைத்து இருக்கும் இஸ்ரேலின் அடுத்த கட்ட மூவ் என்ன என்பதை இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளே உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இந்த நிலையில், இது குறித்து முதல் முறையாக மவுனம் கலைத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசாவை ஆக்கிரமிக்கும் திட்டம் தங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெஞ்சமின் நெதன்யாகு மேலும் கூறுகையில், காசாவை நிர்வகிக்கும் எண்ணமோ ஆக்கிரமிக்கும் எண்ணமோ எங்களிடம் இல்லை. நானால், காசாவிற்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை கொடுக்க நினைக்கிறோம்.
முடக்கப்பட்டுள்ள அந்த பிராந்தியத்தை அனைத்து படைகளையும் வெளியேற்றிவிட்டு மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டும். காசாவில் ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும். சிவில் அரசாங்கத்தை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது" என்றார். எனினும், அரசாங்கத்தை யார் அமைப்பார்கள் என்பது குறித்து தெளிவாக எதையும் குறிப்பிடவில்லை. முன்னதாக கடந்த மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்னி பிளிங்கன், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் குறித்து பேசுகையில், காசா முனையில் கட்டுப்பாட்டைபாலஸ்தீனம் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications