35 உடல்களை பார்த்தோம்.. புகைப்படம் எடுக்க முடியவில்லை.. பாக்.கில் இந்திய தாக்குதலின் நேரடி சாட்சி!
பாகிஸ்தானில் இந்தியா நடத்திய விமானப்படை தாக்குதலில் 35 பேர் வரை பலியானதை நேரில் பார்த்ததாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
Recommended Video

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்தியா நடத்திய விமானப்படை தாக்குதலில் 35 பேர் வரை பலியானதை நேரில் பார்த்ததாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
கடந்த வாரம் பாகிஸ்தானில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் உள்ளே புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. மொத்தம் பாலகோட் உள்ளிட்ட 3 இடங்களில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.
ஆனால் இதில் யாரும் பலியாகவில்லை. வெறும் மரம் மட்டுமே விழுந்தது, இந்தியா பொய் சொல்கிறது என்று பாகிஸ்தான் அரசு கூறியது. இதற்கு எதிர்க்கட்சிகளும் ஆதாரங்களை கேட்டது.

உள்ளே விடவில்லை
இதுகுறித்து தாக்குதல் நடந்த பாலகோட் உள்ளிட்ட மூன்று பகுதிகளுக்கு அருகில் இந்திய எல்லையில் வசிக்கும் மக்கள் பேட்டியளித்துள்ளனர். இவர்கள் பேட்டியில், இந்த தாக்குதல் நடந்ததும் அந்த பகுதியை பாகிஸ்தான் ராணுவம் சுற்றிவளைத்துவிட்டதாக கூறியுள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் சம்பவ இடத்திற்கு வேகமாக வந்தது. அதன்பின் அங்கு மக்கள் யாரையும் விடவில்லை.

35 பேர் 12
இதில் எங்களுக்கு தெரிந்தே 35 பேர் பலியானார்கள். அவர்கள் அங்கு முகாமிட்டு தங்கி இருந்தனர். அதில் 12 பேர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள். சிலர் முன்னாள் ராணுவ வீரர்கள். இவர்கள்தான் இந்திய விமானப்படை தாக்குதலில் பலியானது.

ஆம்புலன்ஸ் மூலம்
இவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அங்கிருந்த யாரும் மொபைல் போன் பயன்படுத்தவில்லை. அதனால் யாரும் அங்கிருந்த உடல்களை புகைப்படம் எடுக்க முடியவில்லை. இதனால்தான் புகைப்படம் வெளியாகவில்லை, என்றுள்ளனர்.

முக்கியமானவர்கள்
இதில் முன்னாள் பாகிஸ்தான் உளவுத்துறை ஐஎஸ்ஐ அதிகாரி சலீம் பலியானதாக கூறப்படுகிறது. அதேபோல் முன்னாள் ராணுவ அதிகாரி சரார் சாக்ரி காயம் அடைந்தார். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் முப்தி மெயின், உசான் காணி ஆகியோரும் பலியானதாகவும் கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications