நம்பிக்கையில்லா தீர்மானம் ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வோம் - பாகிஸ்தான் மக்கள் கட்சி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் ரத்து செய்துள்ளது ஜனநாயகத்துக்கு எதிரானது என பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவால் பூட்டோ சர்தாரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான் கானின் மோசமான அணுகுமுறையே காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்த எதிர்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடக்கிறது.

கடைசி பந்து வரை ஆடுவேன்

கடைசி பந்து வரை ஆடுவேன்

இந்த நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தால் அதற்கு முன்னதாக தாமாகவே முன்வந்து பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் ராஜினாமா செய்வார் என தகவல் வெளியானது. ஆனால், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானோ கடைசி பந்து வரை நின்று ஆடுவேன் என தெரிவித்தார்..

பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு

பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு

இதனை தொடர்ந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வேன் என அறிவித்தார். வெளிநாட்டு சதி காரணமாகவே தன்னை பிரதமர் பதவியிலிருந்து அகற்ற சிலர் துடிப்பதாக இம்ரான் கான் குற்றம்சாட்டினார். நம்பிக்கையில்லா தீர்மானம் காரணமாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வன்முறை வெடிக்க வாய்ப்புகள் இருப்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம்

நம்பிக்கையில்லா தீர்மானம்

342 இடங்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 172 எம்.பிக்களின் ஆதரவு இம்ரான் கானுக்கு தேவை. ஆனால், அவரது அரசே கூட்டணிகளின் உதவியுடன் ஆட்சிக்கு வந்த நிலையில், கூட்டணி கட்சிகளும், தெஹ்ரிக் கட்சிகளின் எம்.பிகளுமே இம்ரான் கானுக்கு எதிராக நிற்பதால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் வெற்றிபெறுவதற்கான சாத்தியம் குறைவாகவே பார்க்கப்பட்டது.

ஆனால் இதை சமாளிக்க தன்னிடம் மேலும் ஒரு திட்டம் உள்ளதாக கூறினார் இம்ரான் கான். இந்தநிலையில் இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. அப்போது பேசிய பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பவாத் உசேன், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாக குற்றம்சாட்டினார். இதனை ஏற்ற பாகிஸ்தான் துணை சபாநாயகர், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்தார்.

இம்ரான் கான் கருத்து

இம்ரான் கான் கருத்து

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், "ஒவ்வொரு பாகிஸ்தானியும் சபாநாயகரின் முடிவை வரவேற்பார். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னால் வெளிநாட்டு சதி இருக்கிறது. யார் ஆட்சி செய்ய வேண்டும் என மக்கள் முடிவு செய்வார்கள். அந்நிய சக்திகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் ஊழல்வாதிகள் நாட்டை ஆளக்கூடாது. நான் ஏற்கனவே குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். பாகிஸ்தானில் அரசை கலைத்து விட்டு புதிதாக தேர்தலை நடத்த வலியுறுத்தி உள்ளேன்." என்றார்.

 பாகிஸ்தான் மக்கள் கட்சி எதிர்ப்பு

பாகிஸ்தான் மக்கள் கட்சி எதிர்ப்பு

பாகிஸ்தான் துணை சபாநாயகரின் முடிவுக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பே நடத்தாமல் நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாகிஸ்தான் சபாநாயகர் ரத்து செய்து இருப்பது ஜனநாயகத்துக்கே எதிரானது. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற மாட்டோம். எங்கள் வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற படியேறி இருக்கிறார்கள். பாகிஸ்தானின் அரசியலமைப்பை பாதுகாக்க அனைத்து நிறுவனங்களையும் அழைக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+