அது வெறும் விபத்துதானா? ஈரான் விமான விபத்து பற்றி சந்தேகம் எழுப்பும் உக்ரைன் அரசு.. அதிரடி திருப்பம்
ஈரானில் நேற்று உக்ரைன் விமானம் வெடித்து சிதறி கீழே விழுந்தது வெறும் விபத்தாக இருக்க வாய்ப்பில்லை என்று உக்ரைன் அரசு சந்தேகம் தெரிவித்துள்ளது.
Recommended Video
டெஹ்ரான்: ஈரானில் நேற்று உக்ரைன் விமானம் வெடித்து சிதறி கீழே விழுந்தது வெறும் விபத்தாக இருக்க வாய்ப்பில்லை என்று உக்ரைன் அரசு சந்தேகம் தெரிவித்துள்ளது. ஈரானின் ஏவுகணை தாக்குதலால் இந்த விமானம் விழுந்து இருக்கலாம் சந்தேகிக்கப்படுகிறது.
ஈரானில் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் நேற்று அதிகாலை விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 170 பேரும் பலியானார்கள்.
டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து பஹ்ரைன் நோக்கி அந்த போயிங் 737 -800 விமானம் புறப்பட்டது. இந்த விமானம் உக்ரைன் அரசுக்கு சொந்தமான உக்ரைனியன் சர்வதேச ஏர்லைனர் விமானம் ஆகும்.

என்ன காரணம்
விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் இந்த விபத்து நடந்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்து இருக்கலாம் என்கிறார்கள். விமானத்தின் எஞ்சின் தீ பற்றி எரிந்து அப்படியே தரையை நோக்கி வேகமாக விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது .

கேள்விகள் சந்தேகம்
இந்த நிலையில் இந்த விமான விபத்து, சமயத்தில் விபத்தாக இருக்க வாய்ப்பில்லை என்று பலர் சந்தேகிக்கிறார்கள். இந்த விமான விபத்திற்கு, ஈரானில் நடந்து வரும் போருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகிக்கப்படுகிறது. ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஏதாவது அசம்பாவிதம் நடந்த இருக்குமா என்று கேள்விகள் எழுப்பப்படுகிறது.

தாக்குதல்
ஈரான் நேற்றுதான் ஈராக்கில் உள்ள அமெரிக்கா படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. விமானம் விழுந்ததும் இதே நேரத்தில்தான். இந்த தாக்குதல் காரணமாக உக்ரைன் விமானம் விழுந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த உக்ரைன் விமானம் விழும் நேரத்தில் எஞ்சினில் தீ பிடித்து இருந்தது. பாதி விமானம் விழும் முன்பே உடைந்து இருந்தது.

மோசம்
அதனால் இந்த விமான விபத்து ஏவுகணை தாக்கி நடந்து இருக்கலாம். அதனால்தான் எஞ்சினில் இருந்து தீ வந்து இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் இந்த விமான விபத்து தொடர்பாக அனைத்து விதமான வகையிலும் விசாரணை நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வோலோடைமர் தெரிவித்துள்ளார்.

சந்தேகம்
விமான விபத்து குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களை புறந்தள்ள முடியாது. அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். வெறும் விபத்து இன்று இதை விட்டுவிட முடியாது என்று கூறியுள்ளார். இதனால் அவருக்கும் இந்த விமானத்தில் சந்தேகம் இருப்பது உறுதியாகி உள்ளது.

என்ன ஆராய்ச்சி
இந்த விமான விபத்து தொடர்பாக தற்போது உக்ரைன் அரசு, கனடாவின் உதவியை நாட உள்ளது. பொதுவாக விமான விபத்து தொடர்பான ஆராய்ச்சிகள், விசாரணைகளை கனடா அரசுதான் அதிகமாக நடத்தும். அவர்களிடன் இதில் பலர் தொழில்நுட்ப பிரிவினர் உள்ளனர். அதனால் கனடா அரசிடம் உதவி கேட்க உக்ரைன் முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications