பட்டினி கிடந்தே நாம் சாக போகிறோம்.. ஏதாவது செய்யுங்க.. ஷெபாஸ் ஷெரீப்புக்கு பாகிஸ்தானில் நெருக்கடி
இஸ்லாமாபாத்: சிந்து நதி நீர் நெருக்கடியை நாம் தீர்க்காவிட்டால் நாம் பட்டினி கிடந்தே சாகப் போகிறோம். சிந்து நதி நீர் படுகைதான் நம் உயிர்நாடி. 10-ல் ஒன்பது பேர் சிந்து நதியை நம்பியே உள்ளோம். எனவே இது ஒரு தண்ணீர் குண்டு போன்றது என்று பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சையது அலி ஜாபர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் பலரும், இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஷெபாஸ் ஷெரீப்பிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்களாம்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. பாகிஸ்தானின் 80 சதவீதம் விவசாயம் சிந்து நதி நீரை நம்பியே உள்ளது. சிந்து நதி நீரை நிறுத்தினால் பாகிஸ்தான் பெரிய அளவிலான இழப்பை சந்திக்கும். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தாத வரை இந்த அதிரடி தொடரும் என்று இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது.

ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓடாது
இதனால், அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறது. இந்த நிலையில்தான், இந்தியாவுக்கு தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக 4 கடிதங்களை பாகிஸ்தான் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் மிகப்பெரிய தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டு இருப்பதாகவும், இதனால் நம்பிக்கை இழந்த நிலையில் அந்த நாடு தவிப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சொல்லப்போனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய பிறகும் அந்த நாடு சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக கடிதம் எழுதியிருக்கிறது. ஆனால், இந்தியாவோ தனது நிலைப்பாட்டை பாகிஸ்தானிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அதாவது, பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒன்றாக செய்ய முடியாது என்றும் , ரத்தமும் தண்னீரும் ஒன்றாக ஓடாது என்றும் இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது.
4 கடிதங்கள் அனுப்பிய பாகிஸ்தான்
சிந்து நதி நீர் ஒப்பந்தமானது நம்பிக்கை மற்றும் நட்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது எனவும், பாகிஸ்தான் இதற்கு எதிராக செயல்பட்டு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்தது. இதனால்தான் பாகிஸ்தானை வழிக்கு கொண்டு வர சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது என இந்தியா முடிவு செய்து. இந்தியாவுக்கு பாகிஸ்தான் எழுதிய நான்கு கடிதங்களும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்தே அமைந்து இருந்தது.
பாகிஸ்தான் நீர்வளத்துறை அமைச்சகம் இந்த கடிதத்தை எழுதியிருக்கிறது. மத்திய ஜல் சக்தி அமைச்சகத்திற்கு பாகிஸ்தானின் நீரவளத்துறை கடிதத்தை அனுப்பியதாம். இந்த கடிதத்தை ஜல்சக்தி அமைச்சகம் வெளியுறவு துறைக்கு அனுப்பி வைத்து இருக்கிறது.
பட்டினி கிடந்தே சாக போகிறோம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் நிலை குலைந்த பாகிஸ்தான், இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயராக இருப்பதாக தொடர்ச்சியாக கூறி வருகிறது. பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் பலரும், இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஷெபாஸ் ஷெரீப்பிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்களாம். பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சையது அலி ஜாபர் கூறியதாவது: -
நீர் நெருக்கடியை நாம் தீர்க்காவிட்டால் பட்டினி கிடந்தே நாம் சாக போகிறோம். சிந்து நதி நீர் படுகைதான் நம் உயிர்நாடி. நமக்கு வரும் தண்ணீரில் நான்கில் மூன்று பங்கு வெளிநாட்டில் இருந்தே வருகிறது. 10-ல் ஒன்பது பேர் சிந்து நதியை நம்பியே உள்ளோம். எனவே இது ஒரு தண்ணீர் குண்டு போன்றது. நமக்கு முன்னாள் தொங்கி கொண்டு இருக்கிறது. இதனை உடனே செயலிழக்க செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications