For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானம் வெடித்து கடலில் விழப் போகிறது: அழுத விமானியால் கலங்கிய பயணிகள்

By Siva
Google Oneindia Tamil News

பாரிஸ்: குரோஷியாவில் இருந்து பிரான்ஸுக்கு சென்ற விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்தபோது விமானம் கடலில் விழப் போகிறது என்று விமானி அழுகையுடன் தெரிவித்தது பயணிகளை பீதி அடைய வைத்தது.

குரோஷியாவில் உள்ள ஸ்பிளிட் நகரில் இருந்து யூரோப் ஏர்போஸ்ட் நிறுவனத்தின் போயிங் விமானம் 737 பிரான்ஸில் உள்ள நான்டஸ் நகருக்கு கிளம்பியது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து என்ஜினில் தீப்பிடித்தது. தீப்பிடித்த உடன் விமானி அழுது கொண்டே பயணிகளிடம் விமானம் வெடிக்கப் போவதாகவும், கடலில் விழப் போவதாகவும் அதற்கு தயாராக இருக்குமாறும் கூறியதால் பயணிகள் பீதி அடைந்தனர்.

'Weeping pilot' warned passengers to prepare for explosion

ஆனால் விமானி திறமையாக செயல்பட்டு விமானத்தை இத்தாலியின் வெனிஸ் நகரில் அவசரமாக தரையிறக்கிவிட்டார்.

இது குறித்து பயணி ஒருவர் கூறுகையில்,

விமானத்தின் என்ஜினில் தீ பிடித்த பிறகு வெனிஸில் அவசரமாக தரையிறக்கும் முன்பு எங்களை லைப்ஜாக்கெட்டை அணியுமாறு கூறியதும் நாங்கள் பயந்துவிட்டோம் என்றார்.

English summary
Passengers of French Boeing 737 Europe Airpost flight got scared after a weeping pilot asked them to get ready for an explosion and a sea crash.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X