"நோ செக்ஸ்.." கால்பந்து உலக கோப்பை! இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லையாம்.. கத்தார் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்
கத்தார்: கால்பந்து உலகக் கோப்பை நாளை தொடங்க உள்ள நிலையில், அங்கு இருக்கும் சில வினோதமான விதிமுறைகள் குறித்துத் தெரிந்து கொள்வோம்.
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இந்தாண்டு கால்பந்து உலகக் கோப்பை கத்தாரில் நடைபெறுகிறது.
நாளை தொடங்கும் இந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கிறது. ஒட்டுமொத்த உலகமே இந்த கால்பந்து உலகக் கோப்பை மீது தான் ஆர்வமாக உள்ளது.

உலகக் கோப்பை
நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் கத்தார் ஈக்வடார் அணிகள் பலபரீட்சை நடத்துகிறது. பொதுவாகவே உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என்றால் அது பார்டி, பப் என கொண்டாட்டம் மிகுந்ததாகவே இருக்கும். ஆனால், தீவிர இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான கத்தாரில் உலகக் கோப்பைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக மைதானங்களில் பீர் விற்பனைக்குக் கூட கட்டுப்பாடுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளன.

கட்டுப்பாடு
கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளைக் காண கத்தாருக்கு உலகெங்கும் பல்வேறு நாடுகளில் இருந்து ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். இருப்பினும், போட்டி அமைப்பாளர்கள் ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மதுபானம், போதைப்பொருள், உடலுறவு, ஆடைக் கட்டுப்பாடு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், வெளிநாட்டு ரசிகர்கள் உள்ளூர் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை மதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

ஆடைகள்
உடலைக் காட்டிக் கொள்வது போலக் குறைந்த அளவு ஆடைகளை அணிந்தால், ரசிகர்களுக்கு பைன் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. எனவே, போட்டியைக் காண வரும் வெளிநாட்டு ரசிகர்கள் ஆடை விவகாரத்தில் கவனமாகவே இருக்க வேண்டும். கத்தாரில் அதிக வெப்பம் நிலவினாலும் கூட, உடலை வெளிப்படுத்தும் குறைந்த அளவு ஆடைகளை அணிவதை முன்றிலுமாகவே தவிர்க்க வேண்டும்.

பெண்கள்
வெளிநாடுகளில் இருந்து கத்தாருக்கு வரும் பெண் ரசிகர்கள் இங்குள்ள கடுமையான முஸ்லீம் ஆடைக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. அங்குள்ள பெண்கள் புர்கா போன்ற ஆடையைக் கட்டாயம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. வெளிநாட்டு ரசிகைகள் இதுபோன்ற ஆடைகள் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை. இருப்பினும், வெளிநாட்டுப் பெண் ரசிகைகள் உடலை மறைக்கும் வகையில் ஆடையை அணிய வேண்டும்.

அனுமதி இல்லை
பெண் ரசிகைகளின் ஆடைகள் முழங்கால்கள் வரை மறைப்பது போல இருக்க வேண்டும். ஸ்லீவ்லெஸ் டேங்க் டாப்ஸ் மற்றும் இரட்டை அர்த்த வாசகங்கள் கொண்ட டாப்ஸ்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை. ஆண்கள் தங்கள் மேலாடைகளை முழுவதுமாக கழற்றினால் அபராதம் விதிக்கப்படும். அவ்வளவு ஏன் சிறைத் தண்டனையைக் கூட அனுபவிக்க நேரிடும். பொது இடங்களுக்குச் செல்லும் போது இதுபோன்ற ஆடைகளை அணிய வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.

கட்டுப்பாடு
வெளிநாட்டினர் அனைவரும் பொது இடங்களுக்குச் செல்லும்போது தோள் மற்றும் முழங்காலையும் மறைக்க வகையில் அடைய அணிய வேண்டும். ஹோட்டல் கடற்கரைகள் மற்றும் நீச்சல் குளங்களில் நீச்சல் உடைகள் அனுமதி இருக்கிறது. இந்த ஆடை கட்டுப்பாடுகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்று வலியுறது்தப்பட்டு உள்ளது. அதேபோல மதுபானங்களுக்கும் கூட பாவ வரி என்ற வரியும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது.

கேமரா மூலம் கண்காணிப்பு
இது தொடர்பாக கத்தார் உலகக் கோப்பை தொழில்நுட்ப பிரிவின் தலைவர் நியாஸ் அப்துல்ரஹிமான் கூறுகையில், "எங்களிடம் அதிநவீன கேமரா உள்ளது. இதை வைத்து ஒவ்வொரு சீட்டில் அமர்ந்து இருப்பவரையும் கூட தனியாக ஜீம் செய்து பார்க்க முடியும். அவை அனைத்தையும் நாங்கள் ரெக்கார்ட் செய்வோம். யாராவது விதிகளை மீறியது உறுதியானால், அந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டும் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

நோ செக்ஸ்
அதேபோல ஆபாசப் படங்கள், செக்ஸ் டாய்களை கத்தாருக்குள் இறக்குமதி செய்யவும் அனுமதி இல்லை. மேலும், அந்நாட்டு சட்டப்படி திருமணமாகாத தம்பதிகள் உடலுறவு கொள்ள அனுமதி இல்லை. இந்த விதி இருக்கும் போதிலும், வெளிநாட்டு ஆண் மற்றும் பெண் ரசிகைகள் ஒரே ரூமை ஷேர் செய்து கொள்ள அனுமதிப்பதாக கத்தார் அறிவித்து உள்ளது. அதேநேரம், பன்றி இறைச்சி, பிற மத புத்தகங்களை கத்தாருக்கு எடுத்துச் செல்வதும் சட்ட விரோதமானது. அனைத்து உடைமைகளும் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் முறையாக ஸ்கேன் செய்யப்படும்.












Click it and Unblock the Notifications