அணு குண்டு வீசும் திட்டம்? தென் கொரியாவை எதிரி நாடாக அறிவித்த வடகொரியா! அரசியலமைப்பு சட்டம் மாற்றம்
பியோங்யாங்: வடகொரியா இப்போது தனது அரசியலமைப்பை மொத்தமாக மாற்றி எழுதியிருக்கிறது. தென்கொரியாவை எதிரி நாடு என்று குறிப்பிடும் வகையில் தனது சட்டத்தை வடகொரியா மாற்றி எழுதியுள்ளது. இதற்கு அணு குண்டை பயன்படுத்துவது உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இப்போது உலகில் தனித்து இருக்கும் ஒரு சில நாடுகளில் வடகொரியாவும் ஒன்று. அங்கு இப்போது சர்வாதிகார ஆட்சியை இருக்கும் நிலையில், அது உலக நாடுகளில் இருந்து தனித்தே உள்ளது.

அழிப்பு: அதேநேரம், தென் கொரியா உடன் ஒரு காலத்தில் வடகொரியாவுக்குச் சாலை மற்றும் ரயில் இணைப்புகள் இருந்தன. அது பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தாலும் அது அங்கேயே இருந்து வந்தன. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ரயில் மற்றும் சாலை கனெக்ஷனை வடகொரியா அழித்துள்ளது.
எதிரி நாடு: இது நடந்து இரண்டு நாட்களில் வடகொரியா தனது அரசியலமைப்பையும் மாற்றி இருக்கிறது. அதில் தென் கொரியாவை முதல் முறையாக "ஒரு எதிரி நாடு" என்று குறிப்பிட்டுள்ளது.. இத்தனை நாட்கள் என்னதான் வடகொரியா, தென் கொரியா இடையே மோதல் இருந்தாலும் தென் கொரியாவை எதிரி நாடு என்று குறிப்பிடுவது இதுவே முதல்முறையாகும்.
அரசியலமைப்பைத் திருத்த வட கொரிய நாடாளுமன்றம் கடந்த வாரம் இரண்டு நாட்கள் கூடியது. அதாவது தென் கொரியாவை நாட்டின் பிரதான எதிரியாக அறிவிக்கவும், அமைதியான கொரிய ஒருங்கிணைப்பு என்ற இலக்கை அகற்றவும், வட கொரியாவின் இறையாண்மை வரையறுக்கும் வகையில் அரசியலமைப்பை மாற்ற அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் வலியுறுத்தினார். இதையடுத்து கடந்த வாரம் நாடாளுமன்றம் கூடி, அந்நாட்டின் அரசியலமைப்பு மாற்றி எழுதப்பட்டு இருக்கிறது.
என்ன காரணம்: இந்த அரசியலைப்பு மாற்றத்தை மனதில் வைத்தே தென்கொரியாவை இணைத்த சாலை மற்றும் ரயில் பாதை அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தென் கொரியாவை எதிரி நாடாக அறிவிக்க வேண்டும் என்றால் இதுபோன்ற எந்தவொரு பாதைகளும் இருக்கக் கூடாது என்றும் இதன் காரணமாகவே அந்த பாதைகள் அழிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தான் வடகொரிய அதிபர் கிம் முதல்முறையாக அரசியலமைப்பை மாற்றி எழுதும் தனது யோசனையை முன்வைத்தார். இது உண்மையில் சர்வதேச வல்லுநர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் இதற்கு முன்பு வரை வடகொரிய அதிபராக இருந்தவர்கள் இரு கொரிய நாடுகள் இடையே அமைதியையே பேன விரும்பினார்கள். ஆனால் கிம் ஜான் இதில் இருந்து விலகிச் செல்கிறார்.
காரணங்கள்: இதன் காரணமாகவே கடந்த சில மாதங்களில், தென் கொரியாவுடனான நல்லிணக்கத்தைக் குறிக்கும் வகையில் வடகொரியாவில் இருந்த நினைவுச்சின்னங்கள் முழுமையாக இடித்து அகற்றப்பட்டன. திடீரென நடக்கும் இந்த மாற்றங்களுக்கு மூன்று காரணங்களும் சொல்லப்படுகிறது.
அணு ஆயுத பிளான்? முதலில் தென்கொரியாவால் எங்கு தனது ஆட்சிக்குப் பாதிப்பு வருமோ என்று கிம் ஜாங் அஞ்சுகிறார். ஒருவேலை மக்கள் தனது வாரிசு அரசியலுக்கு எதிராக கிளர்ந்து எழுந்துவிடுவார்களோ என்று அஞ்சி வடகொரிய இதை செய்யலாம். அல்லது தென்கொரியா மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வடகொரியா திட்டமிட்டு இருக்கலாம். தென்கொரியாவை எதிரி நாடு என்று வரையறுக்க இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
இன்னொரு முக்கிய காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது இப்போது வடகொரியா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அணுசக்தி சார்ந்த ஒப்பந்தங்களை அமெரிக்கா உடன் போட தென்கொரியா மூலமே செல்ல வேண்டி இருக்கிறது. இந்த நேரத்தில் தென்கொரியாவை எதிரி நாடாக அறிவித்து எல்லா உறவுகளையும் முறித்தால்.. நேரடியாக அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூட வடகொரிய அதிபர் கிம் நினைத்து இருக்கலாம் என்கிறார்கள்..
கடந்த கால உறவு: வடகொரியா தென்கொரியா இடையே கடந்த 2000களில் நல்லுறவு ஏற்பட்டது. அப்போது இரு நாடுகளையும் இணைக்கும் வகையில் சாலை மற்றும் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. 1050களில் நடந்த கொரிய போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே சாலை மற்றும் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டது அதுவே முதல்முறை. தென்கொரியாவே இந்த திட்டத்திற்குப் பெருமளவு நிதி அளித்திருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு சீரடைந்து வந்த நிலையில், வட கொரியாவின் அணுசக்தி திட்டங்களால் இந்த சாலை மற்றும் ரயில் பாதைகள் நிறுத்தப்பட்டன. இந்தச் சூழலில் தான் இதை இப்போது வடகொரியா முழுமையாக அழித்துள்ளன.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications