650 அடிக்கு சுனாமி.. 9 நாட்கள் விடாமல் தொடர்ந்த நிலநடுக்கம்.. மிரண்ட ஆய்வாளர்கள்.. எங்கு தெரியுமா?
நூக்: கிரீன்லாந்து நாட்டில் கடந்தாண்டு மிகப் பெரியளவில் சுனாமி ஒன்று ஏற்பட்டுள்ளது. பெருங்கடலில் இருந்து தனித்து, செங்குத்தான பாறைகள் சூழ்ந்த இடத்தில் இந்த சுனாமி ஏற்பட்டதால் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும், அப்போது ஏற்பட்ட சுனாமி சுமார் 9 நாட்கள் நீட்டித்ததாகவும் அலைகள் சுமார் 650 அடி வரை உயர்ந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த உலகில் நம் அனைவரையும் விட வலிமையானது என்றால் இயற்கை தான். இயற்கை நினைத்தால் எவ்வளவு பெரிய கட்டுமானமாக இருந்தாலும் நொடிகளில் காலி செய்ய முடியும். நிலநடுக்கம், சுனாமியின் போது ஏற்படும் பாதிப்புகள் அதற்கு உதாரணம்.

சுனாமி எங்கே: அப்படி கடந்தாண்டு செப். மாதம் ஏற்பட்ட ஒரு மெகா சுனாமி குறித்த தகவல்களே இப்போது வெளியாகியுள்ளது. கிரீன்லாந்தின் டிக்சன் ஃப்ஜோர்ட் என்ற இடத்தில் ஏற்பட்ட ஒரு பெரிய நிலச்சரிவு மெகா சுனாமியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட நில அதிர்வுகள் கூட ஒரு வாரத்திற்கு மேல் நீட்டித்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த சுனாமி மற்றும் நில அதிர்வுகள் குறித்து இப்போது கிடைத்துள்ள புதிய தகவல்களை வைத்து SWOT எனப்படும் சர்வதேச நீர் மற்றும் பெருங்கடல் டோபோகிராஃபி என்ற அமைப்பு இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

9 நாட்கள்: அப்போது ஏற்பட்ட நில அதிர்வுகள் சுமார் 9 நாட்கள் நீடித்ததாக கூறப்பட்டுள்ள நிலையில், சுனாமியின் தனித்துவமான பண்புகள் மற்றும் தாக்கம் குறித்தும் பல புதிய தகவல்களை இந்த ஆய்வு நமக்குத் தருகிறது.
கிரீன்லாந்தின் டிக்சன் ஃப்ஜோர்ட் என்ற பகுதியில் அந்த மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்ட மறுநாள், அதாவது கடந்தாண்டு செப்டம்பர் 17ம் தேதி நீரின் அளவை இந்த ஸ்வாட் ஆய்வாளர்களைச் சேகரித்துள்ளனர். இதை நிலச்சரிவுக்கு முன்பு, அதாவது அக். 6ம் தேதி கடல் அமைதியாக இருந்த போது எடுக்கப்பட்ட தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துள்ளனர். அதில் நீர் மட்டம் மிகப் பெரியளவில் உயர்ந்துள்ளதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். அதிலும் குறிப்பாக டிக்சன் ஃப்ஜோர்ட்டின் தெற்கு பகுதியைக் காட்டிலும் வடக்கு பகுதியில் சுமார் 1.2 மீட்டர், அதாவது 4 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

பின்னணி: அப்போது சுமார் 25 மில்லியன் கன மீட்டர் (880 மில்லியன் கன அடி) பாறை மற்றும் பனிக்கட்டிகள் கடலில் விழுந்த போதே இந்த சுனாமி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சுமார் சுமார் 200 மீட்டர், அதாவது 650 அடி உயரத்திற்கு அலைகள் உருவாகி உள்ளன. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் இது நமது குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையைக் காட்டிலும் ஐந்து மடங்கு உயரமாகும்.
6000 அடி : டிக்சன் ஃப்ஜோர்ட் பகுதியைச் சுற்றிலும் 1,830 மீட்டர் (6,000 அடி) உயரத்திலும் மற்றும் சுமார் 540 மீட்டர் (1,772 அடி) ஆழத்திலும் செங்குத்தான பாறைகள் இருக்கும். இதனால் அந்த சுனாமி பாதிப்புகள் வெளியே வரவில்லை. அதேநேரம் செங்குத்தான பாறைகள் சுற்றிய பகுதி என்பதால் ராட்சத அலைகள் கட்டுக்குள் வரவே சுமார் 9 நாட்கள் ஆனது. அந்த 9 நாட்களும் அந்த அலைகள் ஒவ்வொரு 90 வினாடிகளுக்கு ஒரு முறையும் முன்னும் பின்னுமாக நகர்ந்துள்ளது..
இதன் விளைவாக அங்குச் சிறு நில அதிர்வுகளும் உருவாகியுள்ளன. இதைப் பல நூறு கிமீ தொலைவில் உள்ள நிலநடுக்கத்தைப் பதிவு செய்யும் கருவிகள் பதிவு செய்துள்ளன.












Click it and Unblock the Notifications