பயங்கரம்.. 1000 பேர் தங்கியிருந்த தியேட்டரை குண்டு வீசி தகர்த்து.. அவர்கள் கதி? உக்கிரத்தில் உக்ரைன்

1000 பேர் தஞ்சமடைந்த தியேட்டர் மீது நடத்தப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உயிரை காப்பாற்றி கொள்ள, ஒரு தியேட்டரில் 1000 பேர் தஞ்சமடைந்த நிலையில், அந்த தியேட்டர் மீதே குண்டை வெடித்து தகர்த்துள்ளனர் ரஷ்ய படையினர்.. இதில் எத்தனை அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்? அவர்கள் என்ன ஆனார்கள்? என்று தெரியவில்லை.. இதனால் உக்ரைனில் பதற்றம் அதிகரித்தபடியே உள்ளது.

உக்ரைன் மீது கடந்த சில நாட்களாகவே தாக்குதலை தீவிரமாக நடத்தி கொண்டிருக்கிறது ரஷ்யா.. மேலும் அந்நாட்டின் முக்கிய நகரங்களையும் கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது..

அந்த வகையில், உக்ரைனின் தெற்கு பகுதியான மரியபோல் நகரை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளன. இதையடுத்து அந்த பகுதிகளில் தாக்குதலையும் மும்முரப்படுத்தி உள்ளது..

 பட்டினி - பசி

பட்டினி - பசி

எனவே, அங்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாமல் பயத்திலும் பதட்டத்திலும் தவித்து வருகின்றனர்.. அவர்களுக்கு அங்கு குடிக்க தண்ணீர்கூட இல்லை.. மின்சாரம் கூடஇல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.. போரை இப்போதைக்கு நிறுத்துவது போல தெரியவில்லை.. யாரும் எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் ரஷ்யா அடங்கவில்லை.. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் அழுத்தத்தை தந்துவிட்டன.. ஆனாலும் அதை கண்டுகொள்ளாத ரஷ்யா, தாக்குதலை அதிகப்படுத்தி கொண்டே போகிறது.

தியேட்டர்

தியேட்டர்

இந்நிலையில்தான் ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது.. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்திருந்த ஒரு தியேட்டரை ரஷ்ய படை குண்டு வீசி தகர்த்துள்ளனர்... இந்த தியேட்டர் மரியுபோல் நகரில் உள்ளது.. இதில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்று தெரியவில்லை... தியேட்டர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அவர்கள் எல்லாரும் எங்கே இருந்தார்கள் என்றும் தெரியவில்லை..

தியேட்டர்

தியேட்டர்

இந்த தியேட்டரில் பல சிறுவர்களும் அடக்கமாம்.. இத்தனைக்கும் தாக்குதல் நடத்திவிடக்கூடாது என்பதற்காகத்தான், "குழந்தைகள்" என்று ஒரு போர்டில் கொட்டை எழுத்தில் எழுதி தியேட்டர் வாசலில் வைத்திருந்துள்ளனர்.. அந்த எழுத்தையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ரஷ்ய மொழியில் எழுதியுள்ளனர்.. அப்படி இருந்தும் இந்த கோர தாக்குதல் நடந்துள்ளது.. இதனால் உக்ரைன் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.. இந்த தாக்குதலுக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளது...

உயிரிழப்பு

உயிரிழப்பு

இதையெல்லாம் நாங்கள் மறக்க மாட்டோம் என்று கோபத்தில் கர்ஜித்துள்ளது. மரியுபோல் நகரில் போர் தொடங்கியது முதல் இதுவரை 2400 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தியேட்டர் குறித்த செயற்கைக் கோள் படத்தை அமெரிக்காவின் மக்ஸார் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது... ஆனால் இதற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது.. இந்த தாக்குதலில் ஈடுபட்டு தாங்கள் இல்லை என்கிறது..

Recommended Video

    India-விற்கு America எச்சரிக்கை | வரலாற்றுப்பிழை செய்து விட வேண்டாம்! | Oneindia Tamil
     சுருண்டு விழுந்தனர்

    சுருண்டு விழுந்தனர்

    ஆனால் மரியுபோல் தியேட்டர் தாக்குதலுக்கு முன்பும், தாக்குதலுக்கு பிறகும் எடுக்கப்பட்ட போட்டோக்கள் இடம்பெற்றுள்ளன.. இதை தவிர தாக்குதல் வீடியோவும் டெலிகிராமில் வெளியிடப்பட்டுள்ளது.. இதேபோல இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது.. உக்ரைனின் வடக்கு நகரமான செர்னிகிவ் பகுதியில் சாப்பாடு வாங்குவதற்காக பொதுமக்கள் வரிசையில் நின்றிருந்தனர்.. அங்கேயும் புகுந்துவிட்டது ரஷ்ய படை.. அந்த தாக்குதலில் 10 பேர் சுருண்டு விழுந்து இறந்துள்ளதாக கூறப்படுகிறது... இப்போது அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றத்தில் உக்ரைன் கதிகலங்கி போயுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+