உயிருக்கு போராடும் போப் பிரான்சிஸ்.. ஏதாவது விபரீதமானால் அடுத்து என்ன ஆகும்? வாடிக்கன் சொல்வது என்ன
வாடிகன் நகரம்: கத்தோலிக்க கிறிஸ்துவ மத தலைவராகக் கருதப்படும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இப்போது உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு எதிர்பார்க்காத வகையில் எதாவது நடந்தால் அடுத்து என்ன நடக்கும்.. என்ன மாதிரியான சடங்குகள் பின்பற்றப்படும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
உலகிலேயே அதிக மக்கள் பின்பற்றும் மதமான கத்தோலிக்க கிறிஸ்துவ மத தலைவராக வாடிகன் நகரில் உள்ள போப்பாண்டவர் கருதப்படுகிறார். இப்போது போப் பிரான்சிஸ் அந்த பதவியில் இருக்கிறார்.

போப் பிரான்சிஸ்
இருப்பினும், கடந்த சில நாட்களாகவே அவரது உடல்நிலை மோசமாகவே இருக்கிறது. இரட்டை நிமோனியா மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக அவர் போராடி வருகிறார். மேலும், அவருக்குச் சிறுநீரக சிக்கலுக்கான அறிகுறிகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
88 வயதான அர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் உடல்நிலை மோசமாக இருக்கும் சூழலில், அவரால் போப் ஆண்டவர் பதவியில் தொடர முடியாமல் போனால் என்ன நடக்கும்! ஒருவேளை எதிர்பாராத சம்பவம் நடந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம். ஒரு போப் இறக்கும் போது, interregnum எனப்படும் இடைக்கால காலத்திற்குள் வாடிக்கன் நுழைகிறது.. போப்பின் மரணம் முதல் புதிய தலைவர் தேர்வாகும் வரையிலான காலத்தை இதுபோல குறிப்பிடுவார்கள்.
என்ன நடக்கும்?
முதலில் வாடிக்கன் நகரின் சொத்து மற்றும் வருவாய் நிர்வாகி போப்பின் மரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். அதாவது அவர் போப்பின் அருகே சென்று போப்பின் பெயரை மூன்று முறை அழைப்பார். அதற்குப் பதில் இல்லை என்றால் மட்டுமே போப் மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்படும். முன்பு போப்பின் நெற்றியில் சிறிய வெள்ளி சுத்தியலை வைத்துத் தட்டுவார்கள். ஆனால், இந்த நடைமுறையை 1963 உடன் நிறுத்திவிட்டார்கள்.
போப்பின் மரணம் உறுதி செய்யப்பட்ட உடன் அது தொடர்பாக உலகெங்கும் உள்ள தேவாலயங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள தேவாலயங்கள் துக்கத்தில் தங்கள் மணிகளை ஒலிக்கும்.. தொடர்ந்து போப்பாண்டவரின் குடியிருப்பு பூட்டப்படும். பிறகு அவரது ஆட்சியின் முடிவைக் குறிக்கும் வகையில் போப்பின் மோதிரத்தையும் முத்திரையையும் அழிக்கப்படும். அதன் பிறகே பொதுமக்களுக்கு இது தொடர்பாகத் தெரிவிக்கப்படும். பிறகு இறுதிச் சடங்கும் துக்க காலம் பின்பற்றப்படும்.
எப்போது நடக்கும்?
.
போப்பின் இறுதிச் சடங்குகள் அவர் இறந்த 4-6 நாட்களுக்குள் நடக்க வேண்டும். தேவாலயத்தில் ஒன்பது நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. போப் பொதுவாக செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுவார். இருப்பினும், மரணத்திற்கு முன்பு வேறு ஒரு இடத்தில் அடக்கம் செய்ய அவர் விருப்பம் தெரிவித்தால்.. அதற்கேற்ப உடல் அடக்கம் செய்யப்படும்.
உடல்நிலை மோசமானால் என்ன ஆகும்?
ஒருவேளை போப் உயிரிழக்கவில்லை.. ஆனால், செயல்பட முடியாத அளவுக்கு அவரது உடல்நிலை மோசமாகிவிட்து என்றால் என்ன செய்வார்கள் எனக் கேட்கலாம். இதுபோன்ற காலங்களில் மூத்த கர்தினால்கள் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வார்கள். ஆனால், முக்கிய முடிவுகளுக்கு போப்பின் அனுமதி தேவை. அது தாமதம் ஆகலாம். இதுபோன்ற சூழல்களில் போப் தானாக முன்வந்து ராஜினாமா செய்வதே ஒரே வழியாகும்.
கடந்த 600 ஆண்டுக் கால வரலாற்றில் போப் பெனடிக்ட் மட்டுமே ராஜினாமா செய்துள்ளார். அவர் 2013ல் உடல்நலக் குறைவால் போப் பதவியில் இருந்து விலகினார். அப்போது அடுத்த போப் யார் என்பதைத் தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. சுமார் ஐந்து சுற்று வாக்கெடுப்புக்குப் பிறகு, போப் பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது தான் முதல்முறையாக முன்னாள் மற்றும் தற்போதைய போப் ஒரே நேரத்தில் வாடிகனில் வாழும் சூழல் உருவானது. தொடர்ந்து 2022 டிசம்பர் 31ம் தேதி போப் பெனடிக்ட் உயிரிழந்தார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications