அமெரிக்காவை விட்டு தள்ளுங்க.. இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமையை அள்ளி கொடுக்கும் ஐரோப்பிய நாடு
புக்கரெஸ்ட்: டிரம்ப் அதிபரான பிறகு வெளிநாட்டினர் அமெரிக்காவில் வாழ்வது மிகவும் கடினமான மாறி வருகிறது. டிரம்ப் தரப்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதேநேரம் இங்கு மற்றொரு அழகிய ஐரோப்பிய நாடு மிகக் குறைந்த நிபந்தனைகளுடன் நிரந்தரக் குடியுரிமையைக் கொடுத்து வருகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
டிராகுலாவின் தேசம் என்று அழைக்கப்படும் நாடு ருமேனியா.. ஐரோப்பாவில் உள்ள குட்டி நாடான இந்த ருமேனியா தான் இப்போது வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமைகளை அள்ளி கொடுக்கிறது.. இங்குள்ள பிரம்மாண்ட வரலாற்றுக் கோட்டைகள், பனி படர்ந்த மலைகள், மற்றும் மனதை மயக்கும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளுக்கு மத்தியில் வாழவும், பணியாற்றவும் விரும்புபவர்களுக்கு ஒரு அற்புத வாய்ப்பு கிடைத்துள்ளது.

ருமேனியா
இதற்காக ருமேனியா ஒரு நிரந்தரக் குடியுரிமை திட்டத்தை வழங்குகிறது. ஐரோப்பிய நாடுகளில் வசிப்போர் மட்டுமின்றி, இந்தியா உட்பட எந்தவொரு நாட்டை சேர்ந்தவர்களும் எளிதாக ருமேனியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற முடியும். நிரந்தரக் குடியுரிமை பெற்றுவிட்டால் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் ருமேனியாவில் வாழவும், பணியாற்றவும், படிக்கவும் முடியும்.
இருப்பினும், இதில் ஒரே ஒரு கட்டுப்பாடு மட்டுமே இருக்கிறது. அதாவது நீங்கள் நிரந்தரக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் முன்பு, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் ருமேனியாவிலேயே வசித்தும், பணியாற்றியும் இருக்க வேண்டும் என்பது மட்டுமே முக்கியமான நிபந்தனையாகும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
நீங்கள் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியைச் சேராதவராக இருக்க வேண்டும்.
ருமேனியாவில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். உரிய விசாவுடன் சட்டத்திற்கு உட்பட்டு வசித்திருந்தால், இந்தக் குடியுரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
உங்களுக்கு மாதம் குறைந்தபட்சம் 750 யூரோக்கள் (சுமார் ₹77,834) நிலையான மற்றும் சட்டப்பூர்வமான வருமானம் இருக்க வேண்டும்.
உரிய மருத்துவக் காப்பீடு, ருமேனியாவில் தங்க ஒரு வசிப்பிடம் இருக்க வேண்டும்.. அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
ருமேனிய மொழி ஓரளவுக்குத் தெரிந்திருக்க வண்டும்.
தேசியப் பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் இல்லாதவராக இருக்க வேண்டும்.
இந்த கண்டிஷன்களை பூர்த்தி செய்தாலே போதும் ஒருவர் ஈஸியாக நிரந்தரக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் மற்ற நாடுகளில் இருக்கும் கண்டிஷன்களை விட ருமேனியாவில் குறைவாகவே இருக்கிறது. எனவே, ஐரோப்பாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி
ருமேனியாவில் 5 ஆண்டுகள் இருந்த பிறகு, தேவையான அனைத்து ஆவணங்களையும் சேகரிக்க வேண்டும்.
செல்லுபடியாகும் பாஸ்போர்ட், தற்காலிகக் குடியுரிமை அனுமதி (விசா), தங்குமிடச் சான்று, வருமானச் சான்று, மருத்துவக் காப்பீட்டுச் சான்று ஆகியவை தேவைப்படும்.
ருமேனிய மொழியில் புலமைக்கான ஆதாரம் மற்றும் தேவைப்படும் கூடுதல் ஆவணங்களையும் ரெடியாக வைத்திருங்கள்..
இந்தியாவிலுள்ள ருமேனிய தூதரகத்தில் இந்த நிரந்தரக் குடியுரிமைக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்திற்கான நிர்வாகக் கட்டணமாக 14 யூரோக்கள் (சுமார் ₹1,447) செலுத்த வேண்டும். குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம். எனவே, அதற்கேற்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருக்கும்.
அடுத்து உங்கள் விண்ணப்பம் பிராசஸ் செய்யப்படும். இதற்கு ஆறு மாதங்கள் வரை ஆகலாம்.. ஆனால் இந்தக் கால அளவு மாறுபடலாம்.
விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், 5 முதல் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் நிரந்தரக் குடியுரிமை அட்டை உங்களுக்கு வழங்கப்படும். அதைப் புதுப்பித்துக் கொள்வதும் எளிது.
யாருக்கு பொருந்தும்?
இது ஒரு தனிநபர் ருமேனிய PRக்கு விண்ணப்பிக்கும் முறையாகும். அதேநேரம் குடும்பத்தினருக்கும் சேர்த்து விண்ணப்பிக்கும்போது, வேறு சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டி இருக்கும். மேலும், அதன் பிராசஸ் கூட வேறு!












Click it and Unblock the Notifications