திடீரென பிங்க் கலர் பவுடரை வீசும் அமெரிக்க வீரர்கள்.. அடுத்த நொடி அணைந்த காட்டுத்தீ! அது எப்படி!
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது. கடந்த பல நாட்களாகவே அங்குக் காட்டுத்தீ மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே காட்டுத்தீயை அணைக்க அங்குள்ள தீயணைப்பு வீரர்கள் அதில் ஒருவித மர்ம பிங்க் பவுடரை வீசி செல்கிறார்கள். இந்த பிங்க் பவுடர் என்ன. இது எதற்குப் பயன்படும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது. பல நாட்களாக இந்த காட்டுத்தீ தொடர்ந்து பரவும் சூழலில், இதனால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ:
இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அமெரிக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள். குறிப்பாக காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ஹெலிகாப்டரில் சென்று, பிங்க் கலரில் ஒரு பவுடரை அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் வீசி வருகிறார்கள். எதற்காக இப்படி பிங்க் நிற பவுடரை வீசுகிறார்கள். இதற்குப் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த பிங்க் கலர் பவுடரை Phos-Chek என்று அழைப்பார்கள்.. 1960கள் முதலே தீயைக் கட்டுப்படுத்த அமெரிக்காவில் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள். பெரிமீட்டர் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த கெமிக்கல் தான் உலகெங்கும் தீயைக் கட்டுப்படுத்த அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எல்லாம் ஓகே இது ஏன் பிங்க் கலரில் இருக்கு.. வேற கலரில் எல்லாம் இருக்காதா என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.
பிங்க் கலர் காரணம்:
உண்மையில் பிங்க் கலருக்கு பின்னால் ஒரு மிக முக்கிய காரணம் இருக்கிறது. இது தொடர்பாக பெரிமீட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் கூறுகையில், "இதை வேண்டுமென்றே தான் பிங்க் நிறத்தில் வடிவமைத்துள்ளோம். ஏனென்றால் தீ வேகமாகப் பரவும் போது, தீயணைப்பு வீரர்களுக்கு இதை எங்குப் பயன்படுத்தினோம் என்பது தெளிவாகத் தெரிய வேண்டும். இதனால் தான் பிங்க் நிறத்தில் அதை வடிவமைத்துள்ளோம்" என்றார்.
இதை நேரடியாகக் காட்டுத்தீயில் போட மாட்டார்கள். மாறாக அதற்குச் சற்று தள்ளி உள்ள பகுதிகளில் வீசிவிடுவார்கள். இது ஆக்சிஜனை கட் செய்வதால் தீ மேற்கொண்டு பரவ முடியாமல் அணைந்து போகும். அதாவது காட்டுத்தீ எந்தப் பக்கம் பரவும் என்பதைக் கணக்கிட்டு, சற்று தூரத்தில் உள்ள மரங்கள் மீது இதை வீசிவிடுவார்கள். இது ஆக்சிஜனை கட் செய்வதால் தீ மெல்ல அணைந்துவிடும்.
உள்ளே இருப்பது என்ன:
இந்த பிங்க் பவுடரில் பிரதானமாக அம்மோனியம் பாலிபாஸ்பேட் உள்ளிட்ட உப்புகள் தான் இருக்கும். இவை கடுமையான சூழல்களிலும் தீயைக் கட்டுப்படுத்த உதவும். மேலும், தண்ணீர் சீக்கிரம் ஆவியாகும். ஆனால், இது நீண்ட நேரம் நின்று தீயை அணைக்கும். காடு, மலை உள்ளிட்ட கரடுமுரடான நிலப்பரப்பில் தீ பரவும் போது, அதை அணைக்க இது பெரியளவில் பயன்படும்.
பிரச்சினைகள்:
அதேநேரம் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது வேகமாகக் காற்று வீசும் இடங்களில் இதை வீசுவது கடினம். காற்று அடிக்கும் போது, நாம் ஒரு இடத்தில் குறி வைத்தாலும் ஹெலிகாப்டரில் வந்து வீசும் போது அது வேறு இடத்தில் விழலாம். இதனால் தீயை அணைப்பதில் பயன் தராமல் இது போகும்.
மேலும், இவை முழுக்க முழுக்க கெமிக்கலால் ஆனது. இதனால் வேறு சில ஆபத்துகளும் உள்ளது. அதாவது இந்த கெமிக்கல் மரங்களில் வழும் போது, இது காடுகளின் இயற்கை சூழலைப் பாதிப்பதாகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் சிலர் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக அங்கு நீதிமன்றத்திலும் கூட வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications