"மர்ம நோய்.." அப்படியே கும்பலாக சரிந்த மாணவிகள்.. ஒரே நேரத்தில் 95 பேருக்கு கால்கள் முடங்கின! பகீர்
நைரோபி: பள்ளியில் படித்த சுமார் 95 மாணவிகளுக்கு திடீரென ஒரே நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர்களின் கால்கள் முடங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நவீனக் காலத்தில் நாம் மருத்துவ அறிவியலில் பல மடங்கு முன்னேறி இருக்கிறோம். இதன் காரணமாகவே சராசரி ஆயுள் கணிசமாக அதிகரித்துள்ளது. வரும் காலங்களிலும் மனித ஆயுள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கு மருத்துவத் துறையில் நாம் அடைந்த வளர்ச்சியே காரணமாகும்.
அதேநேரம் இந்த காலகட்டத்தில் புதிது புதிதாகப் பல நோய்கள் கிளம்பி வருகின்றன. இது நமக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதற்கு உதாரணமாக கொரோனாவை சொல்லலாம். கடந்த 2019இல் பரவ தொடங்கிய கொரோனா உலகின் அனைத்து நாடுகளையும் ஒரு வழி செய்துவிட்டது.

பகீர் சம்பவம்: அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் ஆப்பிரிக்க நாடான கென்யாவில் நடந்துள்ளது. கென்யாவில் உள்ள செயின்ட் தெரசாஸ் எரேகி பெண்கள் உயர்நிலைப் பள்ளி படிக்கும் 95 மாணவிகளை திடீரென மர்ம நோய் ஒன்று தாக்கியுள்ளது. இதனால் அத்தனை மாணவிகளின் கால்களும் முடங்கியது. அவர்களால் நடக்கவே முடியவில்லையாம்.
இதையடுத்து பள்ளிக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், நோய்க்கான சரியான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. கென்யா இது குறித்துத் தொடர்ந்து விசாரிக்கிறது. கடந்த புதன்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள 95 மாணவிகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கால்கள் முடக்கின: இதனால் அந்த பள்ளிச் சிறுமிகளால் நடக்கக் கூட முடியவில்லை. அவர்களின் கால்கள் செயலிழந்துள்ளது. மேலும், மாணவிகளுக்கு வலிப்பும் ஏற்பட்டுள்ளது. எதனால் அவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோயின் தீவிர தன்மை என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், திடீரென ஒரே நேரத்தில் இத்தனை பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்த அந்நாட்டு அரசு விசாரணையில் இறங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் ஆய்வுக்காகக் கென்யா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கே நோயின் தன்மை மற்றும் தோற்றம் குறித்து அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரியச் சிகிச்சை தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பகீர் வீடியோ: இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகிறது. அதில் நடக்கவே முடியாத நிலையில் இருக்கும் மாணவிகள் தள்ளாடியபடி நடந்து செல்வது தெளிவாகப் பதிவாகியுள்ளது. முதலில் 80 மாணவிகள் இதனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட நிலையில், பின்னர் இந்த எண்ணிக்கை 95ஆக உயர்ந்துள்ளது.
அங்குள்ள பல மருத்துவமனைகளில் இவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பக்கட்ட சோதனைகளில் அந்த மாணவிகளின் உடலில் எலக்ட்ரோலைட்கள் அதிகமாக இருப்பது தெரிகிறது. இது அவர்களுக்குத் திரவ இழப்பு ஏற்பட்டதைக் காட்டுகிறது. இந்த மர்மமான நோய்க்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இந்த நோய்ப் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது... இது மற்றவர்களுக்குப் பரவுமோ என்பது போன்ற கோணங்களில் ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications