"லண்டன் பிளான்.." வசமாக சிக்கிய இம்ரான் கான்.. என்ன செய்வார்! பாகிஸ்தானில் உண்மையில் என்ன நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சுற்றி அங்கே மிக பெரிய குழப்பமே நடந்து வருகிறது. இதனிடையே அங்கு வரும் காலத்தில் என்ன நடக்க வாய்ப்புள்ளது என்பது குறித்துப் பார்க்கலாம்.

இம்ரான் கான் கடந்தாண்டு பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் தொடர்ச்சியாகப் போராட்டங்களிலேயே ஈடுபட்டு வருகிறார். தற்போதுள்ள ஷெரீப் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் அவர், உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறார்.

 What is the Pakistan crisis and what will be Imran Khans future

அவருக்கு மக்கள் ஆதரவும் அதிகமாகவே இருக்கிறது. இந்தச் சூழலில் தான் இம்ரான் கான் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவர் இரண்டு நாட்களில் விடுதலை ஆனாலும் கூட, அதற்குள் அங்கே மிகப் பெரியளவில் போராட்டம் நடைபெற்றது. இதில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டது.

பாகிஸ்தான்: இப்படி பாகிஸ்தானில் மிகப் பெரிய ஒரு குழப்பம் நிலவுகிறது. பாகிஸ்தான் அரசு, ராணுவம் ஆகியவற்றை குறித்து வைத்து இம்ரான் கான் விமர்சித்து வருகிறார். இதால் அங்கே ஒருவித குழப்பமான சூழலே நிலவி வருகிறது. பாகிஸ்தானில் இப்போது என்ன சூழல் நிலவுகிறது. வரும் நாட்களில் நிலைமை அங்கே என்ன நடக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்துப் பார்க்கலாம்.

பாகிஸ்தான் மோசமான நெருக்கடியை எதிர்கொள்கிறது.. அங்கே அரசியல் குழப்பம் என்பது புதிது இல்லை என்ற போதிலும். பொருளாதார சவால்களை அந்நாட்டு அரசு எதிர்கொள்ளும் சூழலில் அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். இந்தச் சூழலில் தான் இம்ரான் கான் கடந்த மே 9ஆம் தேதி துணை ராணுவப் படையால் கைது செய்யப்பட்டார். அல் காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். கைதை தொடர்ந்து அங்கே மிகப் பெரிய போராட்டமும் வன்முறையும் ஏற்பட்டது.

அப்போது தான் இம்ரான் கான் கைதை சட்ட விரோதமானது என அறிவித்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் அவரை ஜாமீனில் விடுவித்தது. மேலும், இந்த வழக்கில் கைது செய்யவும் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

என்ன திட்டம்: இது குறித்து அந்நாட்டின் அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், "இப்போது பாகிஸ்தானில் நடப்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். போராடிய மக்கள் பாகிஸ்தான் ராணுவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாக். அரசு முடிவு செய்துள்ளது. அவர்கள் மீது ராணுவ நீதிமன்றங்களில் விசாரணை நடத்தப்படும். இது பொருத்தமற்ற ஒன்று..

 What is the Pakistan crisis and what will be Imran Khans future

ஏனென்றால் பாகிஸ்தான் நாட்டிற்கு அரசியலமைப்பு, நாடாளுமன்றம் நீதிமன்றங்கள் உள்ளன. அப்படியிருக்கும் போது போராடியவர்களை எப்படி ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்க முடியும். அரசியலமைப்பு இல்லாதபோதும், ரத்து செய்யப்பட்டாலோ மட்டுமே இதைச் செய்ய முடியும். எனவே இது மிகவும் விசித்திரமானது. இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது" என்றார்.

அதேநேரம் சுவாரஸ்யமாக, பாகிஸ்தானில் தற்போது ராணுவ நீதிமன்றங்கள் இல்லை. ராணுவச் சட்டம் கீழ் எந்தவொரு குடிமகனையும் விசாரிக்கக் கூடாது கட்டுப்பாட்டுடன் அந்நாட்டின் ராணுவ நீதிமன்றங்கள் மூடப்பட்டன. 2014இல் பெஷாவரில் ராணுவ பள்ளி தாக்குதலுக்குப் பிறகு, 2015இல் ராணுவ நீதிமன்றங்கள் திறக்கப்பட்டன. அதில் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி மீது விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பலருக்கும் மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.

இப்போது அங்கே இருக்கும் சட்டப்படி சாதாரண போராட்டங்களில் ஈடுபடுவோரை ராணுவ நீதிமன்றம் மூலம் விசாரிக்க முடியாது. இந்த விதியை மாற்றி, குடிமக்களை விசாரிக்கும் வகையில் ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர பாக். அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது பெரிய ஆபத்தில் சென்று முடியும் என்றே அந்நாட்டு அரசியல் நோக்கர்கள் சாடுகின்றனர்.

3 ஆப்ஷன்கள் என்னென்ன: இது ஒரு பக்கம் என்றால் இம்ரான் கானை ஒழித்துக் கட்டவும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்போது மூன்று ஆப்ஷன்களை வைத்துள்ளனர்.

ஆப்ஷன் 1: ராணுவ நீதிமன்றங்கள் மூலம் இம்ரான் கான் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

ஆப்ஷன் 2: அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் சிறையில் வைக்கப்படுவார்.

ஆப்ஷன் 3: கட்சியைப் பிளவுபடுத்தி இம்ரான் கானை பலவீனப்படுத்துவது.

 What is the Pakistan crisis and what will be Imran Khans future

இதில் பெரும்பாலும் 3ஆவது ஆப்ஷன் தான் நடக்கும். ஏற்கனவே, இம்ரான் கான் கட்சியில் இருக்கும் அமீர் கியானி, மஹ்மூத் மௌல்வி, சஞ்சய் சக்வானி, கரீம் கபோல் போன்ற முக்கிய தலைவர்கள் கட்சியில் இருந்து பிரிந்து செல்லத் தொடங்கியுள்ளனர். இது பிடிஐ கட்சி விரைவில் பிளவுபடும் என்பதையே காட்டுகிறது.

ராணுவச் சட்டம் மற்றும் சிறைச்சாலையை எதிர்கொள்ளுங்கள் அல்லது நாடுகடத்தப்பட்டு லண்டனுக்குச் செல்லுங்கள் என்பதே இம்ரான் கானுக்கு தரப்பட்டுள்ள ஆப்ஷனாக இருக்கிறது. இது குறித்து அவர் நெருங்கிய கட்சித் தலைவர்களுடன் ஆலோசனையும் நடத்தி வருகிறாராம். முன்னதாக இம்ரான் கானுமே தன்னை ஒழித்துக் கட்ட லண்டன் பிளானை செயல்படுத்த முயல்வதாகச் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அங்கே ஐந்து முன்னாள் பிரதமர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இவர் ஆறாவது முன்னாள் பிரதமராகச் சேரவும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+