உன் தலையில் "தோட்டா" பாயும்! அடாவடி செய்த போலீஸ்.. அடுத்த நொடி பகீர்! பிரான்ஸ் பற்றி எரிய காரணமே வேற
பாரீஸ்: இளம் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் மிகப் பெரிய போராட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கே பல ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் இப்போது அமைதியற்ற ஒரு சூழல் நிலவி வருகிறது. அங்கே பல ஆயிரம் பேர் அமைதியற்ற முறையில் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் பல இடங்களில் கலவரம் ஏற்படும் நிலையில், அதைக் கட்டுக்குள் கொண்டு வர போலீசார் திணறி வருகின்றனர். இதனால் அங்கே ஒரு வித பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
போலீசார் குவிப்பு: பிரான்ஸ் நாட்டில் இளம்பெண் ஒருவரை போலீஸார் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து போராட்டம் தொடர்ந்து வருகிறது. நான்காவது நாளாக நடக்கும் வன்முறைப் போராட்டங்களைச் சமாளிக்க சுமார் 45,000 போலீசாரை குவித்துள்ளனர். மேலும், நிலைமை ரொம்பவே மோசமாகி வரும் நிலையில், கவச வாகனங்களையும் கூட பிரான்ஸ் இப்போது களமிறக்கியுள்ளது.

போராட்டம் அங்கே தீவிரமடைந்து வரும் நிலையில், பாரிஸ் புறநகரில் தொடரும் வன்முறை மற்றும் கலவரத்தை அடக்க போலீசாரும் பாதுகாப்புப் படையினரும் நாடு முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறை கலவரங்கள் நடந்த போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பிரான்ஸில் இல்லை. அவர் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார்.
இருப்பினும், அங்கிருந்து திரும்பிய பின்னர் உடனடியாக அவர் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சில கடுமையான கருத்துகளைத் தெரிவித்தார்.
காரணம் வேற: அங்கே பிரான்ஸ் நாட்டில் 17 வயதான நஹெல் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் ஆரம்பித்தது. இது பிரான்சின் குறைந்த வருமானம் கொண்டோர் வசிக்கும் பகுதி மற்றும் குறிப்பிட்ட இனத்தவர் வசிக்கும் புறநகர்ப் பகுதிகளில் போலீசார் நடந்து கொள்ளும் விதம் குறித்து மக்கள் ஏற்கனவே கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்தச் சூழலில் இந்த டீன் ஏஜ் இளைஞரின் மரணம், மக்களின் ஒட்டுமொத்த கோபமும் வெடித்துச் சிதறத் தேவையான தீக்குச்சியாக அமைந்துவிட்டது.
இந்த இளைஞரின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. இதன் பின்னர் சற்று போராட்டங்கள் அங்கு ஓயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போராட்டம் உச்சத்தில் இருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த 45 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று அந்த இளைஞரின் உடல் அடக்கம் செய்யப்படும் நிலையில், அடுத்த சில மணி நேரம் ரொம்பவே முக்கியமானது என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தர்மான் தெரிவித்துள்ளார்.
போலீசார் குவிப்பு: முன்னதாக நேற்றைய தினம் அங்கே 40 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும், அதையும் தாண்டி 492 இடங்கள் சேதப்படுத்தப்பட்டன. 2000 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.. நாடு முழுக்க 3880 இடங்களில் தீ சம்பவம் பதிவானது. மேலும், வன்முறையைத் தடுக்க பிரான்ஸ் நாட்டில் பல இடங்களில் பேருந்து மற்றும் டிராம் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
என்ன நடந்தது: போக்குவரத்து விதிமீறலுக்காக நஹல் என்ற இளைஞரை போலீசார் நிறுத்தினர். அப்போது அவரை இரண்டு அதிகாரிகள் நிறுத்திய நிலையில், ஒருவர் துப்பாக்கியை எடுத்து நெற்றியில் வைத்துவிட்டார். இது தொடர்பான பகீர் வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், "உன் தலையிலேயே நிச்சயம் தோட்டா பாயப் போகிறது" என்று சொல்வதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
அப்போது அந்த இளைஞர் திடீரென காரை எடுத்துவிட்டுக் கிளம்பவே அந்த அதிகாரி சுட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கே போராட்டம் உச்சமடைந்தது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications