மூச்சு முட்டும் மருத்துவமனைகள்! சீனாவில் நிலை ரொம்பவே மோசம்.. என்ன காரணம்! இந்தியாவிற்கு ஆபத்து?
பெய்ஜிங்: சீனாவில் இத்தனை காலம் கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் இப்போது மின்னல் வேகத்தில் பரவுகிறது. இந்தியா போன்ற நாடுகளிலும் இதை நிலை ஏற்படுமா என்று மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே நம்மை வைத்துச் செய்தது என்றால் அது கொரோனா வைரஸ் தான். உலகின் பெரும்பாலான நாடுகளில் இப்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.
ஆனால், சீனாவில் நிலைமை அதற்கு நேர்மாறாக உள்ளது. இத்தனை காலம் அங்கு கொரோனா பாதிப்பு பெரியளவில் இல்லாத நிலையில், இப்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதே நிலை மற்ற நாடுகளிலும் ஏற்படுமா என்ற சந்தேகமும் பலரும் எழுந்துள்ளது.

சீனா
சீனாவில் இத்தனை காலம் மிகக் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தது. உலகின் மற்ற நாடுகள் அனைத்தும் கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளும்படி சொல்லிவிட்டார்கள். ஆனால், சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி தான் நடைமுறையில் இருந்தது. இதன் படி ஒரு சிலருக்கு கொரோனா வந்தாலே அங்கு லாக்டவுன் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும். இருப்பினும், இதற்கு அங்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இந்த ஜீரோ கோவிட் திட்டத்தை வாபஸ் பெறுவதாக சமீபத்தில் சீனா அறிவித்து.

கட்டுப்பாடுகள்
உலகின் மற்ற பகுதிகளில் இருந்து சீனா வேறுபட்டது. ஏனென்றால், அங்கு இதுநாள் வரை மிக கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் வைரஸ் பாதிப்பை ஓரளவுக்கு அவர்கள் கட்டுப்படுத்தியே வைத்திருந்தனர். இருப்பினும், இந்த ஜீரோ கோவிட் கொள்கைகளுக்கு எதிராக அங்கு நாடு முழுக்க போராட்டம் நடத்தினர். இன்னும் சிலர் சீன அதிபரை பதவி விலகவும் கூட வலியுறுத்தினர். அழுத்தம் அதிகரித்ததால் ஜீரோ கோவிட் கொள்கையை வாபஸ் பெற்றது. அதேநேரம் இந்த கட்டுப்பாடுகளை விலக்கிய சில நாட்களிலேயே புதிய அலை ஏற்பட்டுவிட்டது.

ஜீரோ கோவிட்
பெரும்பாலான நாடுகள் கொரோனாவுடன் வாழ பழக சொன்ன போதும், சீனா சீனா ஆரம்பத்தில் இருந்தே ஜீரோ கோவிட் திட்டத்தை பின்பற்றிறது. லேசானா கொரோனா வழக்குகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. சிறு கொரோனா பாதிப்புகளுக்கு கூட ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். 2.5 கோடி மக்களை கொண்ட சீனாவின் பொருளாதார தலைநகராக அறியப்படும் ஷாங்காயில் மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் சீனாவால் கொரோனாவை கட்டுப்படுத்த முயன்றது.

பரவ என்ன காரணம்
இது இத்தனை காலம் எந்தளவுக்கு வெற்றியை தந்ததோ அதே அளவு பிரச்சினையாகவும் மாறியுள்ளது. இந்த கடுமையாக கட்டுப்பாடுகளால் பெரும்பாலான சீன மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. இதனால், அவர்களுக்கு தடுப்பாற்றலும் இல்லை. ஒமிக்ரான் போன்ற கொரோனா வகைகள் மின்னல் வேகத்தில் பரவும் திறன் கொண்டது. தென் கொரியா, ஹாக்காங் பகுதிகளிலும் ஜீரோ கொரோனா திட்டம் திரும்பப் பெற்ற போது, கடந்த பிப். மாதம் இதே நிலைமை தான் நிலவியது. இப்போது சீனாவிலும் அதே பிரச்சினை தான். ஓமிக்ரான் லேசான பாதிப்பையே பெரும்பாலும் ஏற்படுத்தும் என்றாலும் முதியவர்கள் இதனால் ஈஸியாக உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

கொரோனா வேக்சன்
சீனாவில் இதுவரை 200 கோடிக்கும் அதிகமான வேக்டின் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், முதியவர்கள் அதிகம் இந்த வேக்சினை எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், சீனாவில் வெளிநாட்டு வேக்சின்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. அந்நாட்டு ஆய்வாளர்கள் உருவாக்கிய சினோவாக் மற்றும் சினாபார்ம் வேக்சின் தான் பயன்படுத்தப்பட்டது. இந்த இரண்டிற்கும் பெரியளவில் தடுப்பாற்றல் இல்லை என்பது சர்வதேச ஆய்வாளர்களின் கருத்து. அத்துடன் ஓமிக்ராந் இரட்டை டோஸ் போட்டவர்களையும் எளிதாக பாதிக்கும். இவை எல்லாம் சேர்த்துதான் சீனாவில் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்க காரணமாக உள்ளது.












Click it and Unblock the Notifications