Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்று மாஸான மக்கள் தலைவன்! இன்று பெரும்பான்மை கூட இல்லை.. இம்ரான் கான் ராஜினாமா! என்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: "புதிய பாகிஸ்தான்" என்ற முழக்கத்தை முன் வைத்துக் கடந்த 2019இல் ஆட்சியைப் பிடித்த இம்ரான் கான், சில ஆண்டுகளில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த அரசியல் குழப்பம் இப்போது தான் சற்று ஓய்ந்துள்ளது. இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் இளைய சகோதரர் ஷெஸ்பாஸ் ஷரீப் அந்நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பாகிஸ்தான் நாட்டை பொருத்தவரை சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை அங்கு எந்த பிரதமரும் முழுமையாக 5 ஆண்டுகள் பதவியில் இருந்தது இல்லை. ஆட்சி கவிழ்ப்பு தொடங்கி பல்வேறு காரணங்களால் அந்நாட்டின் பிரதமர்கள் ஆட்சியை இழப்பது தொடர் கதையாகவே உள்ளது. இப்போது இம்ரான் கானுக்கும் அதே தான் நடந்துள்ளது. "புதிய பாகிஸ்தான்" என்ற முழக்கத்தை முன் வைத்துக் கடந்த 2019இல் ஆட்சியைப் பிடித்த இம்ரான் கான் இப்போது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

 இம்ரான் கான்

இம்ரான் கான்

வெறும் ஆண்டுகளுக்கு முன்பு செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக இருந்த இம்ரான் கானால் இப்போது பெரும்பான்மையைக் கூட நிரூபிக்க முடியவில்லை. இதற்கான காரணத்தைப் பார்க்கலாம். எவ்வித அரசியல் பின்புலம் இல்லாமல் கட்சியைத் தொடங்கிய இம்ரான் கான், கடந்த 2019இல் ஆட்சியைப் பிடித்தார். தேர்தல் காலகட்டத்தில் அவர் ஏகப்பட்ட வாக்குறுதிகளை முன் வைத்தார். ஆனால், அதை அவரால் நிறைவேற்ற முடியாத நிலையில், மிக விரைவிலேயே காட்சிகள் மாற தொடங்கியது.

 பெரும்பான்மை இழந்தார்

பெரும்பான்மை இழந்தார்

நாடாளுமன்றத்திற்கு உள்ளே கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெறத் தவறியதால் இம்ரான் கான் பெரும்பான்மை இழந்தார். அதேபோல நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் அவர் பாக். ராணுவத்தின் ஆதரவை இழந்தார். கடந்த 2019 தேர்தலில் பாக். ராணுவத்தின் உதவி உடனேயே இம்ரான் கான் பிரதமர் பதவிக்கு வந்ததாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், சில ஆண்டுகளிலேயே அவருக்கும் ராணுவத்திற்கும் இடையே பூசல்கள் அதிகரித்த நிலையில், இம்ரான் கானை அந்நாட்டு ராணுவம் சத்தமின்றி கைவிட்டதாகக் கூறப்படுகிறது.

 எதிர்க்கட்சிகள் போராட்டம்

எதிர்க்கட்சிகள் போராட்டம்

அதேபோல பொருளாதார சிக்கலும் கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தானை வாட்டி வதைத்து வருகிறது. விலைவாசி உயர்வுக்கு எதிராக அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் பெரியளவில் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் வேறு வழியின்றி, சர்வதேச சந்தைகளில் விலையேற்றம் இருந்த போதும், கடந்த பிப். மாதம் பெட்ரோல், டீசலை விலையைக் குறைப்பதாக இம்ரான் கான் அறிவித்தார். மேலும், வரும் ஜூன் மாதம் வரை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்றும் அவர் உறுதி அளித்தார்.

 பொருளாதார சிக்கல்

பொருளாதார சிக்கல்

இது போராட்டத்தைச் சமாளிக்க உதவினாலும் கூட அந்நாட்டின் பொருளாதாரத்தை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளியது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு சரிந்தது. பாகிஸ்தான் நாட்டில் இப்போது இருக்கும் பாதி பிரச்சினைகள் முந்தைய அரசுகளிடம் இருந்து வந்தது. மீதி பிரச்சினைகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டது என்கிறார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதார வல்லுநர் ஷாருக் வானி தெரிவித்தார்.

 இரு முக்கிய பிரச்சினை

இரு முக்கிய பிரச்சினை

பதவி ஏற்ற சில மாதங்களில், இம்ரான் கான் அரசு நிலைமை சமாளிக்க முயன்றதோ தவிரச் சீர்திருத்த நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. பணவீக்கம், உரத் தட்டுப்பாடு, பஞ்சாபில் உள்ளாட்சி நிர்வாகம் என அடுத்தடுத்து பல்வேறு பிரச்சினைகள் வந்து கொண்டே இருந்தது. அதிக பணவீக்கம் மற்றும் வேகமாகக் குறையும் அந்நிய செலாவணி கையிருப்பு ஆகியவை தான் இப்போது பாகிஸ்தான் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சினைகளாக உள்ளது.

 அந்நிய செலாவணி

அந்நிய செலாவணி

அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு சரிகிறது. இதனால் மேலும் பணவீக்கம் அதிகமாகிறது. இப்படியொரு இடியாப்ப சிக்கலில் இருக்கிறது பாகிஸ்தான் பொருளாதாரம். இம்ரான் கான் பிரதமராகப் பதவியேற்றது முதல் இந்த 3 ஆண்டுகள் பாகிஸ்தான் பங்குச்சந்தையிலும் பெரியளவில் ஏற்றம் இல்லை. இது அந்நாட்டின் மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கையின்மையைக் காட்டுவதாக உள்ளது.

 பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தான் ராணுவம்

இதைத் தாண்டி முக்கியமாக அவர் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவையும் இழந்துவிட்டார். எதிர்க்கட்சிகள் சற்றே முஷ்டியை முறுக்க தொடங்கி போதே, இம்ரான் கான் அரசுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம் என்றும் நடுநிலையான நிலைப்பாட்டை எடுப்போம் என்று பாக். ராணுவம் அறிவித்தது. ராணுவத்தின் துணை இல்லாமல் ஆட்சி நீடிக்காது என்பதை உணர்ந்த கூட்டணிக் கட்சிகளும் இம்ரான் கானை கைகழுவத் தொடங்கினர்.

மோதல்

மோதல்

கடந்த அக்டோபர் மாதம், பாக். ராணுவத்தின் உளவுப் பிரிவு தலைவராக லெப்டினன்ட்-ஜெனரல் ஃபைஸ் ஹமீதை நியமிக்க விரும்பினார். ராணுவத் தளபதி ஜெனரல் கமர் பஜ்வாயின் வேட்புமனுவை அவர் கண்டுகொள்ளவில்லை. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தொடங்கிப் பூசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இம்ரான் கான் ஆட்சியை இழக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

 ஆட்சி கவிழ்ப்பு

ஆட்சி கவிழ்ப்பு

இதற்கிடையே இம்ரான் கான் மேலும் ஒரு பரபர குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது தனது அரசுக்கு எதிராக அந்நிய நாடு ஒன்று சதி செய்வதாகக் குறிப்பிட்டார். பாகிஸ்தான் அரசியல் குழப்பத்திற்கு அமெரிக்கா தான் காரணம் என்றும் அவர் மறைமுகமாகச் சாடினார். ரஷ்யா போர் விவகாரத்தில் இம்ரான் கான் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த அமெரிக்கா, அவரது ஆட்சியைக் கவிழ்க்க முயல்வதாகக் குற்றஞ்சாட்டினார். இருப்பினும், இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

Recommended Video

    Pakistan-ல் நள்ளிரவில் நடந்த சம்பவம்.. Imran Khan-ஐ வளைத்த ராணுவம்.. என்ன நடந்தது?
     நம்பிக்கையில்லாத் தீர்மானம்

    நம்பிக்கையில்லாத் தீர்மானம்

    இந்தச் சூழலில் தான் இம்ரான் கான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் நீக்கப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பில் 342 பேர் கொண்ட சபையில் 174 உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்ததால் இம்ரான் கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+