3வது உலகப்போரா? இஸ்ரேல்-ஹமாஸ் படை பலம் என்ன? பிளஸ்-மைனஸ் இதுதான்! ஆதரவு நாடுகள் எவை?
இஸ்ரேல்: காசா நகருக்குள் நுழைந்து ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்த முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் தான் இந்த தாக்குதல் நடத்தினால் யார் வெற்றி பெறுவார்கள்? இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படை வீரர்களின் எண்ணிக்கை, ஆயுத பலம் மற்றும் இருதரப்புக்கான நட்பு நாடுகள் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
பாலஸ்தீனத்தின் ஒருபகுதியாக காசா உள்ளது. இங்கு ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதனை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட பல மேலை நாடுகள் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. இந்நிலையில் தான் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் தொடங்கி நடந்து வருகிறது.

கடந்த 7 ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் 7 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்திய நிலையில் இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இது தான் தற்போது போராக மாறியுள்ளது. இன்றுடன் 11வது நாளாக போர் நடந்து வருகிறது.
ஒட்டுமொத்த காசா நகரையும் கைப்பற்றும் நோக்கில் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. வான்வெளி தாக்குதலை தொடர்ந்து காசா நகரை முற்றுகையிட்டு தாக்குதலை தொடங்க தயாராகி வருகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே மிகப்பெரிய அளவில் துப்பாக்கி சண்டை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை இந்த போரில் இருதரப்பையும் சேர்த்து 3 ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் 10,888க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தான் காசாவில் இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்த தயாராகி வரும் நிலையில் 3வது உலகப்போர் வெடிக்கிறதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏனென்றால் ஹமாஸ் அமைப்புக்கும் பல இஸ்லாமிய நாடுகள் ஆதரவாக உள்ளன. சுதந்திரமான பாலஸ்தீன நாடு அமைய வேண்டும். இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் என அந்த நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மாறாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரிட்டன், இஸ்ரேல், நியூசிலாந்து, பாரகுவா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இந்த நாடுகளும் கூட அமைதியை தான் விரும்புகின்றன. போரை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தி வருகின்றன.
இருப்பினும் இஸ்ரேல் காசாவில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்துவதில் ஆர்வமாக இருக்கின்றது. இதற்கிடையே தான் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பின் படை பிரிவுகளின் வலிமை குறித்தும் இருதரப்புக்கும் ஆயுத உதவிகள் செய்யும் நாடுகள் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி ஹமாஸ் படையை விட இஸ்ரேல் ராணுவம் மிகவும் வலிமையுடன் இருப்பது தெரியவந்துள்ளது. ஏனென்றால் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு உள்ளது. அதோடு அமெரிக்கா ராணுவ உதவிகளையும் வழங்க தொடங்கி உள்ளது.
இஸ்ரேல் படை பலம்: மேலும் இஸ்ரேலின் பாதுகாப்பு படையில் மொத்தம் 1 லட்சத்து 69 ஆயிரத்து 500 வீரர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 26 ஆயிரம் வீரர்கள் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். மற்றவர்களின் விமானப்படை, கப்பற்படையில் பணியாற்றி வருகின்றனர் என ஐஐஎஸ்எஸ் எனும் பிரிட்டனின் சர்வதேச ஸ்ட்ரட்டிஜிக் ஆய்வு நிறுவனம் (IISS) தெரிவித்துள்ளது. மேலும் கட்டாய ராணுவ பணி அமலில் உள்ளதால் அந்த வகையில் பயிற்சி பெற்று தனியாக 4 லட்சம் பேர் உள்ளனர். தற்போது போர் தொடங்கி உள்ளதால் இதில் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர இஸ்ரேலிடம் ஏவுகணை தாக்குதலை தடுக்கும்‛அயர்ன் டோம்' உள்பட பல உயரிய தொழில்நுட்பம் சார்ந்த பாதுகாப்பு அமைப்புகள் பாதுகாப்புத்துறையில் உள்ளன. அதோடு சுமார் 1,300 டாங்கிகள், பிற கவச வாகனங்கள், 345 போர் விமானங்கள், பீரங்கி, ஆளில்லா விமானங்கள் மற்றும் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை இஸ்ரேல் வைத்துள்ளது. மேலும் அணுஆயுதங்களும் இஸ்ரேல் வசம் இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா போர் கப்பல்கள்: இதுதவிர இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பது என்பது மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 2028 ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேலுக்கு ஆண்டுக்கு 3.8 பில்லியன் டாலர்களை அமெரிக்கா ராணுவ உதவிக்காக வழங்கி வருகிறது. மேலும் வெடிமருந்துகள் 2 விமானம் தாங்கிய போர்க்கப்பல்களை அமெரிக்க கிழக்கு மத்திய கடலில் நிறுத்தி உள்ளது. மேலும் உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான USS Gerald Ford மற்றும் USS Eisenhower ஆகியவை ஹமாஸை மட்டுமின்றி ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புகளை எச்சரிக்கும் வகையில் உள்ளன.
ஹமாஸ் படைபலம்: மறுபுறம் ஹமாஸ் அமைப்பை எடுத்துக்கொண்டால் அதுவும் சமீபகாலமாக அதிக ஆயுதங்களை குவித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பின் படைப்பிரிவான அல்-கஸ்ஸாம் அமைப்பில் 15,000 பேர் உள்ளதாக ஐஐஎஸ்எஸ் கூறியுள்ளது. ஆனால் அரேபிய நாட்டு ஊடகங்களின் கணக்குப்படி இந்த படைப்பிரிவில் மொத்தம் 40 ஆயிரம் பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹமாஸ் படையினர் ஈரான், சிரியா, லிபியா நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட ஆயுதங்களை வைத்துள்ளனர். மேலும் சீனா மற்றும் பிற நாடுகளில் இருந்து கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட பிற துப்பாக்கிளை பெற்று வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஹமாஸ் படையினரே வெடிபொருட்கள் தயாரித்து வைத்துள்ளனர். அதோடு ட்ரோன்கள், கன்னிவெடிகள், ஏவுகணைகள், கையெறி குண்டுகள், மோட்டார் குண்டுகளையும் கைவசம் வைத்துள்ளனர். இருப்பினும் அதன் எண்ணிக்கைகள் குறித்த விபரம் இன்னும் வெளியாகவில்லை.

ஹிஸ்புல்லா: அதோடு ஈரான் ஆதரவு பெற்ற போராளிக்குழுவான லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லாவின் ஆதரவு ஹமாஸ் படைக்கு உள்ளது. இந்த குழுவும் இஸ்ரேலை எதிர்த்து போரிட தயாராக இருப்பதாக கூறியுள்ளது. அதன்படி பார்த்தால் 2021ம் ஆண்டு நிலவரப்படி ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவில் 1 லட்சம் பேர் உள்ளதாக ஐஎன்எஸ்எஸ் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் தரப்பில் 50 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மத்திய கிழக்கு நாடுகள் நிபுணர் இவா கவ்லோரிடிஸ் கணிப்பின்படி ஹிஸ்புல்லாவில் 20,000 பேர் உயர்ரக ஆயுதங்களை கையாளும் திறன் பெற்றுள்ளதாகவும், 50 ஆயிரம் பேர் ஈரானில் 3 மாதம் பயிற்சி பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த குழுவில் தாக்குதலுக்காக 1,50,000 ராக்கெட்டுகள், 2,00,000 ஏவுகணைகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரான்: இதுதவிர ஹமாசுக்கு ஆதரவாக ஈரான் உள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமீர்-அப்துல்லா வெளிப்படையாக இஸ்ரேலை எச்சரித்துள்ளார். மேலும் இஸ்ரேல் தனது படைகளை காசாவுக்குள் கொண்டு சென்றால் மோதல் தீவிரமாகும் என்பதை தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஹமாசுக்கு ஈரானும் ஆதரவாக படைகளை இறக்கலாம் என கூறப்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் என்பது ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக மாறும்.
யாருக்கு வெற்றி: மேலும் காசாவில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கினால் அது அந்த நாட்டுக்கு எளிமையான விஷயமாக இருக்காது. ஏனென்றால் ஹமாஸ் தீவிரவாதிகள் கையெறி குண்டுகள், கன்னி வெடிகள் வைத்துள்ளன. இது இஸ்ரேல் படைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இதனை கண்டுபிடித்து பாதுகாப்பாக தாக்குதல் நடத்துவது என்பது இஸ்ரேலுக்கு பெரிய சவாலாக இருக்கும். இஸ்ரேல் படை பலம் என்பது ஹமாசை விட பல மடங்கு அதிகமாக இருந்தாலும் கூட இந்த அச்சுறுத்தல் என்பது அந்த நாட்டுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த போரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது என விபரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
-
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு!












Click it and Unblock the Notifications