Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிமிஷா பிரியா தூக்கில் இருந்து தப்பவே முடியாதாம்? ஏமன் ‛கிசாஸ்’ சட்டத்தால் சிக்கல்.. ரூல்ஸ் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சானா: கேரளாவை சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு கொலை வழக்கில் ஏமனில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் தற்போது அது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நிமிஷா பிரியாவின் கொன்றதாக கூறப்படும் தலால் அப்தோ மஹ்தி குடும்பத்தினரிடம் ரத்த பணம் வழங்க சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வரப்படுகிறது. ஆனால் அவரது குடும்பத்தினர் ரத்தப்பணத்தை ஏற்கவில்லை. இதற்கிடையே தான் நிமிஷா பிரியாவுக்கு ஏமனின் ‛கிசாஸ்' சட்டப்பிரிவு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் தூக்கு தண்டனையில் தப்பிக்க முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது. இந்த ‛கிசாஸ்' பிரிவு என்பது என்ன? நிமிஷா பிரியாவுக்கு எப்படி எமனாக மாறி உள்ளது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. கடந்த 2008 ம் ஆண்டில் தனது 19 வயதில் நர்சிங் வேலை தேடி ஏமன் நாட்டுக்கு சென்றார். அதன்பிறகு ஏமன் நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து கிளினிக் நடத்தினார். இதற்கிடையே தான் தலால் அப்தோ மஹ்தியை கொன்ற குற்றச்சாட்டில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். கடந்த 2020ம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

nimisha priya yemen

நிமிஷா பிரியாவின் பாஸ்போர்ட்டை தலால் அப்தோ மஹ்தி வைத்து கொண்டு கொடுக்க மறுத்துள்ளார். இதையடுத்து பாஸ்போர்ட்டை கைப்பற்ற அவர் மயக்க ஊசி செலுத்தி உள்ளார். இதில் ஓவர் டோஸ் ஆனதால் தலால் அப்தோ மஹ்தி இறந்ததாக கூறப்பட்டது. இந்த வழக்கில் கைதான நிமிஷா பிரியாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இன்று அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் கிராண்ட் முஃப்தி என்று அழைக்கப்படும் காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் ஏமன் தலைநகர் சனாவை கைப்பற்றி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுதி தரப்பு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தற்காலிகமானது தான். மீண்டும் நிமிஷா பிரியாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது.

இருப்பினும் நிமிஷா பிரியாவை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை அவரது குடும்பத்தினர் எடுத்து வருகின்றனர். ஏமனை பொறுத்தமட்டில் கொலை வழக்கில் கைதாகும் நபர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க ரத்தப்பணம் வழங்க வேண்டும். இதனை இறந்தவரின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டால் தண்டனையில் இருந்து தப்பிக்கலாம். அதன்படி நிமிஷா பிரியா தரப்பில் ரூ.11 கோடி வரை வரை ரத்த பணம் கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால் கொலையான தலால் அப்தோ மஹ்தி குடும்பத்தினர் அந்த பணத்தை ஏற்கவில்லை. இதனால்நிமிஷா பிரியா எப்போது வேண்டுமானாலும் தூக்கு மேடைக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. தற்போது தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் குடும்பத்தினர் தரப்பில் தலால் அப்தோ மஹ்தி குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.

இதற்கிடையே தான் தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்தெல்ஃபத்தா மஹ்தி தனது முகநூல் பக்கத்தில், ‛‛நிமிஷா பிரியாவை தூக்கில் போட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நிமிஷா பிரியா செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது. நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். இந்த விஷயத்தில் ஊடகங்கள் குற்றவாளியை ஒரு பாதிக்கப்பட்டவர் போலச் சித்தரிக்கிறது. இதனை ஊடகங்கள் கைவிட வேண்டும்.

இன்று நடக்கும் சமரச முயற்சிகள் பற்றிய பேச்சு ஒன்றும் புதியதோ அல்லது ஆச்சரியமானதோ இல்லை.பல ஆண்டுகளாக இந்த மத்தியஸ்த முயற்சி நடந்து வருகிறது. இது இயற்கையானது தான். ஆனால் எந்த அழுத்தங்களும் எங்களை மாற்றவில்லை. எங்களின் கோரிக்கை தெளிவாக உள்ளது. அது கிசாஸ் (Qisas). வேறு எதுவும் இல்லை'' என்று காட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் நிமிஷா பிரியாவுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் மரண தண்டனை ஒத்திவைத்தது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், ‛‛இப்போது மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. இப்படி நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அனைத்து சமரசங்களையும் நாங்கள் ஏற்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக மரண தண்டனையை ஒத்திவைத்தியவர்களுக்கு இது நன்றாக தெரியும். மரண தண்டனையை ஒத்திவைத்தாலும் கூட எங்களின் நிலைப்பாடு மாறாது. நீதியை மறக்க முடியாது. கடவுளின் உதவியுடன் எவ்வளவு காலமானாலும் ‛கிசாஸ்' மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

இந்த பதிவு மற்றும் பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ள ‛கிசாஸ்' என்ற வார்த்தை தான் தற்போது கவனம் பெற்றுள்ளது. ‛கிசாஸ்' விதி பயன்படுத்தப்படும் பட்சத்தில் நிமிஷா பிரியாவிற்கு நிச்சயம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும். அவரால் தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது. ஏனென்றால் ‛கிசாஸ்' என்பதும் கடவுளின் சட்டமாக ஏமனில் அழைக்கப்படுகிறது. அதாவது ஏமனில் இஸ்லாமிய ஷரியா சட்டங்கள் பின்பற்றப்படுகிறது. அதன் ஒரு பகுதியில் தான் ரத்தப்பணத்தை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டால் தூக்கு தண்டனை உள்பட பிற தண்டனை பெற்றவர்களால் விடுதலை பெற முடியும்.

மாறாக ‛கிசாஸ்' என்பது ரத்த பணம் முறைக்கு நேர் எதிரானது. அதாவது தவறு செய்தவர்கள் எப்படி பணம் கொடுத்து தண்டனையில் இருந்து விடுபட எப்படி ரத்தப்பண சட்டம் உள்ளதோ? அதேபோல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் குற்றவாளிக்கு நிச்சயம் மரண தண்டனையை உறுதி செய்யஇந்த ‛கிசாஸ்' சட்டம் உள்ளது. ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் கொலையான நபரின் குடும்பத்தினர் குற்றவாளியை பழிவாங்க வழிவகுத்து கொடுக்கிறது.

அதன்படி ஒருவர் கொலை செய்யப்பட்டால் அந்த குற்றத்தை செய்த நபரின் உயிரை பறிக்க இந்த ‛கிசாஸ்' உதவுகிறது. குரானில் இருக்கும் ‛‛கண்ணுக்கு கண்' என்ற கருத்தின் அடிப்படையில் ‛கிசாஸ்' விதிகள் இருக்கும் அதன்படி ஒரு குற்றத்தின் தன்மையை பொறுத்து அதேபோல் குற்றவாளிக்கு தண்டனை கொடுக்க இது உதவும். இது ஏமன் மட்டுமின்றி சவுதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான், சூடான், ஏமன், ஆப்கானிஸ்தான் (தாலிபான் ஆட்சியின் கீழ்) மற்றும் ஷரியா சட்டம் நடைமுறையில் உள்ள நைஜீரியாவின் சில பகுதிகளில் செயல்பாட்டில் உள்ளது. அரசாலேயே நேரடியாக அங்கீகரிக்கப்பட்டு இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.பொதுவாக இந்த Qisas என்பது கொலை அல்லது ஒருவருக்கு உடல் ரீதியாக கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய குற்றத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நிமிஷா பிரியா வழக்கை எடுத்து கொண்டால் இறந்த தலால் அப்தோ மஹ்தி குடும்பத்தினர் ரத்த பணம் பெற தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர். கிசாஸ் முறையில் தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று தலாலின் சகோதரர் கூறியுள்ளார். இதனால் நிமிஷா பிரியா தூக்கு தண்டனையில் இருந்து தப்பிப்பதில் பெரிய சிக்கல் நிலவுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+