பிரிட்டன் முடிவால் இந்திய நிறுவனங்கள் மீதான தாக்கம் எப்படி இருக்கும்?
Subscribe to Oneindia Tamil
லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவானது சர்வதேச பொருளாதாரத்துக்கு கடுமையான சவாலாக இருக்கும். ஐரோப்பிய உள்நாட்டு உற்பத்தியான ஜி.டி.பிஇல் பிரிட்டனின் பங்கு 18%. பிரிட்டன் முடிவால் தம்முடைய பொருளாதாரத்தில் ஆறில் ஒரு பங்கை இழக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

இந்திய பொருளாதார வளர்ச்சியில், இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பில் ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்தும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போதைய பிரிட்டன்
- இங்கிலாந்தில் அமெரிக்கா, பிரான்ஸைத் தொடர்ந்து 3-வது பெரிய முதலீடு செய்துள்ள நாடு இந்தியா.
- இங்கிலாந்தில் மட்டும் 800 இந்திய நிறுவனங்கள் வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகின்றன.
- ஐரோப்பிய சந்தையை இலக்காக கொண்டு செயல்படும் இந்திய நிறுவனங்கள், இங்கிலாந்தை மையமாக கொண்டுதான் செயல்படுகின்றன.
- பிரிட்டனில் மட்டும் சுமார் 1 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பை இந்திய நிறுவனங்கள் உருவாக்கி தந்துள்ளன.
- ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதால் இந்திய நிறுவனங்கள் தங்களது வர்த்தக வியூகங்களை மாற்றி அமைக்க வேண்டிய தருணம்.
- பிரிட்டனில் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பிற நாடுகளுக்கான ஏற்றுமதிக்கான கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டிய கட்டயாம் ஏற்பட்டுள்ளது.
- பிரிட்டனில் இருந்து இந்திய நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் இடம்பெயரலாம்.
- பிரிட்டனின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர், டாடா மோட்டார்ஸுக்கு சொந்தமானது. அண்மையில் வெளியான ஒரு ஆய்வறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறினால் 10 ஆண்டுகள் முடிவில் இந்நிறுவனத்தின் ஆண்டு லாபத்தில் 1 பில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்படுமாம்.
- 2016-வது நிதி ஆண்டில் இந்தியா- பிரிட்டன் இடையே 14.02 பில்லியன் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதால் இந்த வர்த்தகத்தில் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்கிறார் டெல்லி ஜே.என்.யூ. பொருளாதார பேராசிரியர் பிஸ்வஜித் தார்.
- 2007-ம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பிரிட்டன் வெளியேறுவதால் பிரிட்டனுடன் தனியாக, ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனியாக ஒப்பந்தங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
- பிரிட்டனில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான செலவினங்கள் அதிகரிக்கும். ஐரோப்பிய ஒன்றியத்திலும் பிரிட்டனிலும் தனித்தனியே தலைமை அலுவலகங்கள் அமைக்க வேண்டியதிருக்கும்.
More From
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications