தெருவில் பணம் கிடந்தால் எடுப்பேன், சாப்பிட்ட தட்டை கழுவி வைப்பேன்: பில் கேட்ஸ்
நியூயார்க்: தெருவில் 100 டாலர் நோட்டு கிடந்தால் அதை தான் நிச்சயம் எடுப்பேன் என்று உலக பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவர் பில் கேட்ஸ். அவருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் மூலம் ஏகப்பட்ட வருமானம் வருகிறது. அவர் தனது வருமானத்தில் பெரும் பகுதியை போலியோ ஒழிப்பு, எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரச்சாரம் உள்ளிட்டவைகக்காக செலவு செய்து வருகிறார்.

இந்நிலையில் பில் கேட்ஸிடம் ஆன்லைனில் கேள்வி கேட்கும் நிகழ்ச்சியில் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். தெருவில் 100 டாலர் நோட்டு கிடந்தால் அதை எடுப்பீர்களா என்று ஒருவர் பில் கேட்ஸிடம் ஆன்லைனில் கேட்டிருந்தார்.
அதற்கு பில் கேட்ஸ் அளித்த பதில் வருமாறு,
100 டாலர் நோட்டு தெருவில் கிடந்தால் அதை எடுத்து உரியவரிடம் கொடுக்க வேண்டும். பணத்தை தொலைத்தவர்கள் வருத்தத்தில் இருக்கலாம். ஆனால் நான் பணம் தெருவில் கிடப்பதை பார்த்தால் அதை எடுத்து பவுன்டேஷனுக்கு கொடுத்துவிடுவேன். ஏனென்னறால் 100 டாலரை வைத்து நிறைய பொருட்கள் வாங்கலாம் என்றார்.
பில் கேட்ஸ் தனது மனைவி மற்றும் தனது பெயரை சேர்த்து மெலின்டா கேட்ஸ் பவுன்டேஷனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒரு கேள்விக்கு பதில் அளித்த அவர் கூறுகையில், இரவு நேரத்தில் சாப்பிட்ட தட்டுகளை நானே கழுவி வைத்துவிடுவேன். அவ்வாறு செய்வது எனக்கு மனநிறைவை அளிக்கிறது. உங்களுக்கு மனநிறைவை அளிக்கும் விஷயங்களை நீங்கள் தாராளமாக செய்யுங்கள் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications