ஜெர்மன் விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய துணை விமானி யார்?: பின்னணி என்ன?
பாரீஸ்: ஜெர்மன்விங்ஸ் விமானத்தை திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கி 149 பேர் பலியாக காரணமாக இருந்த துணை விமானி லிபிட்ஸ் எதற்காக அவ்வாறு செய்தார் என்று தெரியவில்லை.
ஸ்பெயினில் இருந்து ஜெர்மனி சென்ற லுப்தான்ஸாவின் கிளை நிறுவனமான ஜெர்மன்விங்ஸ் விமானம் பிரான்ஸில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 150 பேர் பலியாகினர். இந்நிலையில் விமானத்தை அதன் துணை விமானியான ஜெர்மனியைச் சேர்ந்த ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28) திட்டமிட்டே விபத்துக்குள்ளாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

லுபிட்ஸுக்கு தீவிரவாதிகள் யாருடனும் தொடர்பு இல்லை. இருப்பினும் அவர் ஏன் இவ்வாறு செய்தார் என்று தெரியவில்லை. ஜெர்மனியின் பிரான்க்பர்ட் அருகே உள்ள மோன்டாபாரைச் சேர்ந்தவர் லுபிட்ஸ்.
அவர் பதின்வயதில் விமானி உரிமம் பெற்றுவிட்டார். 2008ம் ஆண்டு அவர் லுப்தான்ஸாவின் விமானி பயிற்சி படிப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 11 மாத பயிற்சியில் அவர் இடையே வெளியே சென்று பிறகு பல தேர்வுகளில் தேர்ச்சி பெற்று மீண்டும் பயிற்சியில் சேர்ந்துள்ளார். அவர் எதற்காக பயிற்சியின் இடையே வெளியேறினார் என்று தெரியவில்லை.

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள லுப்தான்ஸா மையத்தில் பயிற்சி பெற்றுள்ளார். 2013ம் ஆண்டு பயிற்சியில் தேரிய அவர் ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்.
லுபிட்ஸ் தான் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக தனது மகளிடம் தெரிவித்தார் என ஒரு பெண் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். லுபிட்ஸ் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்திருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications