Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்தால்.. காத்திருக்கும் "பொறி" என்ன நடக்கும்.. தாக்கு பிடிக்குமா?

Subscribe to Oneindia Tamil

அல் அவிவ்: இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருகிறது. வான்வழி தாக்குதல் மூலம் காசா நகரை உருக்குலைத்து வரும் இஸ்ரேல், தரைவழி தாக்குதலுக்கும் தயாராக உள்ளதாக தெரிகிறது. இஸ்ரேல் ராணுவம் காசா நகருக்குள் நுழைந்தால்.. அதன் முன் இருக்கும் சவால்கள் என்னவென்று பார்க்கலாம்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 7-வது நாளாக நீடித்து வருகிறது. காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் கடந்த சனிக்கிழமை திடீர் தாக்குதலை நடத்தினர். எதிர்பாராத இந்த தாக்குதலால் ஒரு நொடி அதிர்ந்து போன இஸ்ரேல், பின்னர் பதில் நடவடிக்கையாக காசா நகரம் மீது குண்டு மழை பொழிந்தது. இஸ்ரேலின் பதில் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தின் காஸா, மேற்கு கரை பகுதிகளை நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

What will happen if Israel forces enter Gaza: 5 challenges ahead

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரால் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஒழிக்கப்படும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இதன்படி, காசா மீது இஸ்ரேல் ராணுவம் சரமாரி வான்தாக்குதலை தொடுத்து வருகிறது.

இஸ்ரேல் போர் விமானங்களின் இடைவிடாத குண்டுமழையால் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. வானுயர்ந்த கட்டிடங்கள் தரைமட்டம் ஆகி வருகின்றன. இதனிடையே வான்வழி தாக்குதலுடன் காசா மீது தரைவழி தாக்குதலையும் தொடுக்க இஸ்ரேல் தயராகி வருகிறது. இதற்காக எல்லை பகுதியில் 3 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களை இஸ்ரேல் நிலை நிறுத்தியுள்ளது.

காசாவுக்குள் தரை வழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராக உள்ளது. இதற்காக எல்லையில், ஆயுத தளவாடங்களுடன் தயாராக உள்ளார்கள். இஸ்ரேல் அரசு உத்தரவிட்ட மறுநொடியே காசாவுக்குள் நுழையும் திட்டத்துடன் ராணுவ வீரர்கள் காத்து இருக்கிறார்கள். ஆனால் காசாவுக்குள் நுழைவது அவ்வளவு எளிதானது இல்லை. காசாவுக்குள் நுழைந்து விட்டால் இஸ்ரேல் வீரர்களுக்கு கடுமையான 5 சவால்கள் காத்து இருக்கிறது. அது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

1. காசா முனையில் உள்ள கட்டிடங்கள் மிகவும் நெருக்கமானவை. அதிக அளவிலான மக்கள் குறுகிய இடத்தில் வசிப்பதால் போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் கட்டிடங்கள் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக அமைந்து இருக்கும். தெருக்களும் மிகவும் குறுகலானவை. இதனால், இஸ்ரேல் ராணுவ வீரர்கள் காசா முனைக்குள் ராணுவ வாகனங்களையும் டாங்கிகளையும் எடுத்து செல்வது அவ்வளவு எளிது கிடையாது. அது மட்டும் இன்றி வான்வழி தாக்குதல்களால் சேதம் அடைந்த கட்டிடங்கள் குப்பைகளாக சாலைகளில் கிடப்பதால் இஸ்ரேல் ராணுவம் நுழைந்த உடனே இந்த சவாலை சந்திக்க வேண்டியிருக்கும்.

2. சிறிய இடமாக இருக்கும் கசாவில் பல இடங்களில் வைக்கப்பட்டு இருக்கும் கண்ணி வெடிகள் இஸ்ரேல் படையினருக்கு பெரும் சவாலாக இருக்கும். இஸ்ரேல் படையினர் முன்னேறி செல்லும் முன்பாக அந்த பகுதியில் கண்ணி வெடி இல்லை என்பதையும் அவை செயல் இழக்க வைக்கப்பட்டதையும் உறுதி செய்ய வேண்டியிருக்கும். அதேபோல், உயரமான கட்டிடங்கள் பலவற்றை கொண்ட காசா முனையில் எந்த பகுதியில் இருந்து ஸ்னைப்பர் தாக்குதல் நடத்தப்படும் என்பதை கண்டுபிடிப்பதே மிக கடினம். ஏனென்றால் கட்டிடங்கள் அளவில் சிறியதாக இருப்பதோடு, ஜன்னல்களும் இருளாக காட்சி அளிக்கும்.

3. சிரியா மற்றும் உக்ரைனில் நடைபெற்ற போர்கள் காட்டுவது என்னவென்றால் இயந்திர துப்பாக்கிகளுடன் கூடிய ராணுவ வீரர்களை சிறிய எண்ணிக்கை மட்டுமே கொண்டிருந்த எதிர் படைகள், ஏவுகணை எதிர்ப்பு டாங்கிகள் மற்றும் ராக்கெட் புரொபெல்லட் குண்டுகள் மூலாமாக கடுமையாக தாக்கியிருந்தது. இது இஸ்ரேலுக்கு ஒரு சவாலாக இருக்கலாம்.

4. ஹெலிகாப்டர் மூலமாக காசாவுக்குள் வீரர்களை இறக்குவதும் கொஞ்சம் ஆபத்தானதாக இருக்கும். ஏனெனில் காசாவிடம் MANPADS என்ற பாதுகாப்பு அமைப்பு உள்ளது. ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தால் ஆர்.பிஜி குண்டுகள் மூலம் தாக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், கடந்த 1993 ஆம் ஆண்டு மோகடிசு நகரில் தாழ்வாக பறந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருந்தன.

5. தரைவழி தாக்குதலை முன்னெடுத்தால் மருத்துவமனை, பள்ளிகள் உள்ளிட்டவை சேதம் அடைவது மற்றும் அப்பாவி பொதுமக்கள் பலியாவது ஆகியவற்றை கட்டுப்படுத்துவது இஸ்ரேலுக்கு மிகப்பெரும் சவாலாக அமையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+