"நாம் எந்த மொழி பேசினாலும் சரி இந்தியர்கள் தான்.." பிரதமர் நரேந்திர மோடி பன்ச்.. ஆர்ப்பரித்த மக்கள்
கோபன்ஹேகன்: டென்மார்க் நாட்டில் இங்குள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் கலாசாரம், மொழி குறித்து பெருமிதம் தெரிவித்தார்
பிரதமர் நரேந்திர மோடி இப்போது மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக ஐரோப்பா நாடுகளுக்குச் சென்றுள்ளார். முதலில் ஜெர்மனி சென்று பிரதமர் மோடி பெர்லின் நகரில் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸை சந்தித்தார்.
அப்போது இரு நாடுகளுக்கும் இடையே மொத்தம் 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து பிரதமர் மோடி அங்கிருந்து டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனுக்கு வந்தடைந்தார்,

டென்மார்க்கில் பிரதமர் மோடி
பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கே சென்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் வரவேற்றார். இதையடுத்து இரு நாட்டுத் தலைவர்களும் டென்மார்க் பிரதமர் இல்லமான மரியன்போர்க்கிற்கு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள், இந்தோ-பசிபிக் நிவை மற்றும் உக்ரைன் விவகாரம் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

அன்பு & மரியாதை
பிரதமர் மோடி டென்மார்க் நாட்டிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். கோபன்ஹேகன் நகரில் இருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் உடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, "டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் இங்கு வந்துள்ளது அவர் இந்திய மக்கள் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் மரியாதைக்குச் சான்றாகும். டென்மார்க்கில் உள்ள இந்தியச் சமூகத்தின் அன்பான வரவேற்புக்கு நன்றி.

காலநிலை மாற்றம்
கடந்த ஆண்டு, டென்மார்க் பிரதமர் ஃபிரடெரிக்சன் இந்தியாவுக்கு வந்திருந்தார். இந்தியா-டென்மார்க் இடையேயான உறவு வலுப்படுத்துவதை இது காட்டுகிறது. இந்தியாவில் யூனிகார்ன் எனப்படும் அதிக முதலீடுகளைப் பெற்ற ஸ்டார்அப்களின் எண்ணிக்கையில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் வகையில் நமது வாழ்க்கை முறை இருக்க வேண்டும். சுற்றுச்சூழலில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.தேவைக்கேற்ப நமது நுகர்வு இருக்க வேண்டுமே தவிரத் தேவையற்ற நுகர்வை நாம் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

பொறுப்பு
பூமியைக் பாதுகாக்கும் தீர்வுகளைக் கண்டறிய உலக நாடுகள் இந்தியாவுக்கு வர வேண்டும். இந்தியாவுக்கு வந்து டென்மார்க் நண்பர்களில் இதில் உதவலாம். பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளை மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக எடுத்து வருகிறது. ஏனென்றால், கிரகத்தைக் காப்பாற்றும் பொறுப்பை பலதரப்பட்ட நிறுவனங்களின் மீது சுமத்தாமல், இது ஒவ்வொரு மனிதனின் பொறுப்பாக நாங்கள் பார்க்கிறோம்.

வெண்மைப் புரட்சி
வெண்மைப் புரட்சியின் போது டென்மார்க் இந்தியாவுடன் இருந்தது. இந்தியாவின் பசுமைப் புரட்சியிலும் கூட டென்மார்க் நாட்டின் உதவி அளப்பரியது. மின்சார இயக்கம், ஹைட்ரஜன், மறுசுழற்சி, நகரமயமாக்கல், கப்பல் போக்குவரத்து, அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையே ஏகப்பட்ட சாத்தியக்கூறுகள் உள்ளன" என்று கூறினார்.
Recommended Video

எந்த மொழியாக இருந்தாலும்
நாட்டில் இப்போது மொழிகள் குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், எந்த மொழியாக இருந்தாலும், நமது கலாசாரம் இந்தியன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை தான் இந்தியச் சமூகத்தின் பலம். எந்த மொழியாக இருந்தாலும் நமது கலாச்சாரம் இந்தியன் தான்.. ஒரே உலகம் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications