வௌவாலால் இல்லையாமே.. முதன்முதலில் கொரோனா எதில் பரவியது தெரியுமா?.. ஷாக் ஆயிடுவீங்க.. கருமம்..!
முதன்முதலில் கொரோனாவைரஸ் எங்கே பரவியது என்ற தகவல் வெளியாகி உள்ளது
பெய்ஜிங்: கடந்த 2 வருடத்துக்கும் மேலாக உலக நாடுகளை திணற வைத்து கொண்டிருந்த கொரோனா குறித்த விஷயத்துக்கு இப்போது முடிவு தெரிந்துள்ளது..!
2 வருடத்துக்கு முன்பு உலகை ஆட்கொண்டது கொரோனா வைரஸ்.. முதலில் சீனாவின் மீன்மார்க்கெட்டில் தோன்றியதாக சொல்லப்பட்டது.. அதன்பிறகு மெல்ல மெல்ல உலக நாடுகளுக்கு பற்றி கொண்டுவிட்டது.
லட்சக்கணக்கான நபர்களை காவு வாங்கிவிட்டது. இது எந்த மாதிரியான தொற்று என்று ஆயிரக்கணக்கான அறிஞர்களும், விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், அதற்குள் கொரோனாவில் இருந்து வேறு வகையான திரிபுகள் பரவ ஆரம்பித்துவிட்டன.

ஆய்வுக்கூடங்கள்
இதனிடையே, சீனாவின் ஆய்வுக் கூடங்களில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பேரழிவை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு நிலவும் சூழலில், வைரஸ் உருவான இடம் குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன... கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்சகட்டத்தில் இருந்தபோது, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதனை சீனா வைரஸ் என்றே பெயர் சொல்லி பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்... இதற்கு சீனாவும் கொந்தளித்தது..

3 வகையான ஆய்வுகள்
இதேபோன்று சீனாவின் ஆய்வகங்களில் கொரோனா உருவாக்கப்பட்டதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் பரபரப்பாக சொல்லப்பட்டது. இதையடுத்து, இந்த கொரோனா உருவான இடம் குறித்து 3 வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன... இதில் 2 ஆய்வுகள், வூஹான் நகரில் உள்ள மார்க்கெட்டில் இருந்து பரவியதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல, உயிருடன் உள்ள பாலூட்டி ரக விலங்கில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஆதாரங்கள்
இதேபோன்று ஆய்வுக் கூடங்களில் கொரோனாவைரஸ் உருவாக்கப்பட்டதா அல்லது அங்கிருந்து பரவியதா என்ற கோணத்தில் இந்த ஆய்வுகள் கையாளப்பட்டன.. ஆனால், அதற்கான சான்றுகள், ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை... இனியும் ஆய்வுகள் நடந்து கொண்டுதானிருக்கிறது.. அந்த ஆய்வில் எந்த விலங்கில் இருந்து கொரோனா உருவானது என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. ஆரம்பத்தில் வவ்வாலில் இருந்து கொரோனா பரவியதாக செய்திகள் வந்தன..

நாய் வகை
ஆனால், இப்போது, சைனீஸ் ரக்கூன் என்ற நாயிடம் இருந்து பரவியிருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இன்னமும் இது தொடர்பான ஆராய்ச்சி நடக்கிறது என்றாலும் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வர முடியவில்லை.. ஆனால், இந்த கொரோனா எப்படி, எங்கே, யாரிடம் தோன்றியது என்பதை கண்டுபிடித்தால் மட்டுமே, அதை அழிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறார்கள் விஞ்ஞானிகள்.. ஆய்வுகளும் தொடர்கிறது..!












Click it and Unblock the Notifications