உலகத்தைப் புரட்டிப் போடக் காத்திருக்கும் சூரியப்புயல்... அஸ்தமிக்கப் போகும் பூமி!
நியூயார்க்: சூரியனில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைத் தாக்குதலால் பூமியின் தொலைத்தொடர்புகள் முற்றிலுமாக அஸ்தமிக்கும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனை எதிர்கொள்வது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமெரிக்கா முடுக்கிவிட்டுள்ளது.
மனிதன் ராக்கெட்டுகளில் ஏறி விண்ணைத் தாண்டி வானில் குடியேற நினைத்தாலும், எப்போதுமே இயற்கை புரிந்து கொள்ள முடியாததாகவே இருக்கிறது.
அந்தவகையில் எந்திரமயமான நம் வாழ்க்கையை முடக்கக் காத்திருக்கிறதாம் சூரியனால் உருவாகப் போகும் மின்காந்த அலைத் தாக்குதல்.

மின்காந்த அலைத் தாக்குதல்...
இன்னும் சில ஆண்டுகளில் அதாவது 2020 அல்லது 2022ம் ஆண்டுகளில் இந்தத் தாக்குதல் நடக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு பூமிக்கு இதே போன்ற ஆபத்து ஒன்று பூமியை அச்சுறுத்தியது. ஆனால், அப்போது அதிர்ஷ்டவசமாக பூமி அதிலிருந்து தப்பியது.

பூமி தப்புவது கடினம்...
ஆனால், இம்முறை இந்த ஆபத்திலிருந்து பூமி தப்புவது கடினம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்த மின்காந்த அலைத் தாக்குதல் நடக்க 12 சதவீதம் மட்டுமே வாய்ப்பிருப்பதாக கூறினாலும், தாக்குதல் நடந்தால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே தொடங்கி விட்டது அமெரிக்கா.

மிரட்டும் விஞ்ஞானிகள்...
இப்படி ஒரு தாக்குதல் நடந்தால் நிச்சயம் உலகம் தாங்காது என மிரட்டுகிறார்கள் விஞ்ஞானிகள். இதனால் அமெரிக்காவிற்கு மட்டும் 2.6 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள்.

1959ம் ஆண்டு தாக்குதல்...
ஏற்கனவே கடந்த 1959ம் ஆண்டு இதே போன்ற தாக்குதல் சம்பவம் ஒன்றை பூமி சந்தித்தது. அப்போது தொலைத்தொடர்புகள், மின்சார வசதி ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டன. மின்சார நிலையங்கள், டிரான்ஸ்பார்மர்கள் ஆகியவை தீப்பற்றி எரிந்து நாசமாயின.

பாதிப்பு பல மடங்காகும்...
அமெரிக்கா, மொரக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் இந்த தாக்குதலில் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. ஆனால், அப்போது இருந்ததைக் காட்டிலும் தற்போது தொழில்நுட்பம் மேலும் முன்னேறி விட்டது. இதனால் அப்போதை விட தற்போது பாதிப்பு மேலும் பல மடங்கு இருக்கும் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவே அழியும்...
அதிலும் குறிப்பாக மற்ற நாடுகளை அமெரிக்கா இந்த தாக்குதலால் பெரும் அழிவைச் சந்திக்கும் எனக் கூறப்படுகிறது. இதன் பாதிப்புகளை சரி செய்ய பல மாதங்கள் ஆகும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஆலோசனை...
எனவே முன்கூட்டியே அந்த மின்காந்த அலைத் தாக்குதல் எப்போது நடைபெறும் என்பதைச் சரியாக கணிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதோடு, அப்படிப்பட்ட நெருக்கடியான நிலையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் அது ஆலோசித்து வருகிறது. இதற்கென அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட துறைகளுடன் அமெரிக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.

அரோரா மோரியாலிஸிஸ்...
இத்தகைய மின்காந்த அலைத்தாக்குதல்கள் வழக்கமாக நார்வேக்கு மேலே வடக்கு திசையில் ஒளி வெள்ளமாக நடைபெறுவது வழக்கம் தான். இதனை அரோரா மோரியாலிஸிஸ் என்கிறார்கள். அதாவது வடதிசைவெளிச்சம் என இதற்கு பொருள்.

இருளில் மூழ்கும்...
இந்த மின்காந்த அலைத் தாக்குதல் நடந்தால் உலகம் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கும். அதுவும் சில நாட்கள் அல்ல, பல மாதங்கள். செல்போன் முதற்கொண்டு நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் எதையும் பயன்படுத்த முடியாது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவைகளைக் கூட பயன்படுத்த முடியாது. டிரான்ஸ்பார்மர்கள் எரிந்து போகும். மின் நிலையங்கள் பஸ்பமாகி விடும்.

தீவிர சிந்தனை...
எனவே, அத்தகைய நிலை ஏற்பட்டால் அதில் இருந்து எப்படி தப்புவது மற்றும் அதிலிருந்து எப்படி மீள்வது என்பது குறித்து தீவிரமாகச் சிந்தித்து வருகிறது அமெரிக்கா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications