கலங்கும் இஸ்ரேல்! ஹமாஸ் வீசிய கிரனைட்! காதலி கண்களை பார்த்து, அடுத்த நொடி உயிர் தியாகம் செய்த இளைஞர்
அவிவ்: இஸ்ரேல் நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகச் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் அங்கே ஒரு காதல் ஜோடிக்கு நெஞ்சை உலுக்கும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
எந்தவொரு போர் என்றாலும் அதில் பாதிக்கப்படுவது அந்த நாட்டின் அப்பாவி பொதுமக்கள் மட்டுமே.. உலகப் போர் தொடங்கி உள்ளூரில் நடக்கும் போர் வரை பொதுமக்கள் மட்டுமே மிக மோசமாகப் பாதிக்கப்படுவார்கள்.

இந்த இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடக்கும் சம்பவமும் விதிவிலக்கு இல்லை. அப்படிதான் கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பல நூறு பேர் கொல்லப்பட்டனர். அப்போது அங்கே ஒரு காதல் ஜோடிக்கு நெஞ்சை உலுக்கும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இஸ்ரேல் ஜோடி: இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஐரீன் ஷாவிட் என்ற இளம்பெண் நெட்டா எப்ஸ்டீன் என்பவருடன் டேட்டிங் சென்றுள்ளார். முதல் டேட்டிலேயே எப்ஸ்டீனை அவருக்குப் பிடித்துப் போனது. ஏற்கனவே அந்த இளைஞரைக் காதலிக்கவும் தொடங்கிவிட்டதாக அந்தப் பெண் தனது தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த உறவு மோசமாக முடிந்துவிடுமோ அவர் அஞ்சினார். அவரது அச்சப்பட்டது போலவே மோசமாகவே முடிந்துள்ளது. ஆனால், அந்த பெண் அதிகபட்சம் பிரேக்அப் நடக்கும் என யோசித்தார். ஆனால், அதையெல்லாம் தாண்டி மிக மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
முதல் டேட்டிங் பிறகே இருவரும் காதலிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்கள் காதல் ஊரே பொறாமைப்படும் அளவுக்கு இருந்தது. பிறகு ஒரு நாள் தனது காதலி ஷாவிட்டை பார்த்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி எப்ஸ்டீன் கேட்டுள்ளார். இதற்காகவே இத்தனை காலம் காத்திருந்த ஷாவிட் மறுநொடியே ஓகே சொன்னார். இருவரும் புது வாழ்க்கையை ஆரம்பிக்க டும் டும் டும்பிற்கு தாரான நிலையில், அப்போது தான் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது.
உயிரிழப்பு: கடந்த அக். 7ஆம் தேதி நடந்த காதலில் பலர் உயிரிழந்த நிலையில், இவர்கள் காதலும் அன்று மறைந்து போனது. 22 வயதான ஷவித் என்ற இந்த இளம்பெண்ணால் அன்று நடந்த சம்பவத்தில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. அவரது காதலன் எப்ஸ்டீன் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தார். இருவரும் சென்று கொண்டிருந்த போது திடீரென ஹமாஸ் படை கையெறி குண்டை வீசியுள்ளது.
தன்னை நம்பி வந்த பெண்ணை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என நினைத்து அந்த இளைஞர் நொடியும் யோசிக்காமல் அந்த கிரணைட் மீது பாய்ந்துள்ளார். இதில் தனது காதலியை அவர் வெற்றிகரமாகக் காப்பாற்றினாலும் அவர் உடல் துண்டு துண்டாகப் போனது. இந்தச் சம்பவம் ஷாவிட் வாழ்க்கையை உலுக்கிப் போட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து அவரால் மீளவே முடியவில்லை.
வேதனை: "எல்லாம் நொடிகளில் நடந்து முடிந்துவிட்டது. நான் உயிர் வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவர் தனது உயிரைத் தியாகம் செய்துள்ளார்" எனச் சொல்லும் போது அவரது கண்ணீர் அவராலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. ஷாவிட் மேலும் கூறுகையில், "அவர் எனக்காக உயிரிழந்துள்ளார். அவர் நினைத்திருந்தால் அப்போது என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால், என்னைக் காப்பாற்றவே உயிரிழந்துள்ளார். நான் அவரை மிஸ் செய்கிறேன். அவரது முத்தங்களை மிஸ் செய்கிறேன். அவரது காதலை மிஸ் செய்கிறேன்" என்கிறார்.
கடந்த அக். 7ஆம் தேதி இருவரும் பட்டம் விடும் திருவிழாவுக்குச் செல்ல இருந்தனர். அப்போது காலை 6.30 மணிக்கே ரெட் அலர்ட் எச்சரிக்கை வந்துள்ளது. இருப்பினும், எல்லையில் அவ்வப்போது ரெட் அலர்ட் வரும் என்பதால் அவர்கள் பெரிதாக அச்சப்படவில்லை. ஆனால், காலை 8 மணிக்கு ஹமாஸ் ஊடுருவல் காரணமாக மொத்தமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடு முழுக்க இருந்த லைட்களை ஆப் செய்துவிட்டு அமைதியாக இருந்துள்ளனர்.
உயிர்த் தியாகம்: கொஞ்ச நேரத்தில் அங்கே நிலைமை மோசமடைய தொடங்கியுள்ளது. தொலைதூரத்தில் துப்பாக்கிச் சூடு நடக்கும் சத்தங்கள் கேட்டுள்ளன. இதில் எப்ஸ்டீனின் பாட்டி, அடுத்து அவரது சகோதரர் உயிரிழந்துள்ளார். காலை 11 மணியளவில் ஜன்னலை உடைத்துக் கொண்டு ஹமாஸ் பயங்கரவாதிகள் உள்ளே வந்துள்ளனர். இந்த ஜோடி ஓடிச் சென்று பெட் ரூமில் ஒளிந்து கொண்டனர். ரூம் ரூமாக சல்லடை போட்டுத் தேடிய ஹமாஸ் வீரர்கள், பெட் ரூமில் இவர்கள் இருவரும் இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டனர்
மொத்தம் மூன்று கிரானைட் கை எறி குண்டுகளை உள்ளே போட்டுள்ளனர். அப்போது ஷாவிட்டை ஒரு நொடி பார்த்த எப்ஸ்டீன் சற்றும் யோசிக்காமல் அந்த கிரானைட் மீது பாய்ந்துள்ளான். மூன்று கிரானைட்களும் தனது உடலுக்குக் கீழ் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். இது எப்ஸ்டீன் ராணுவத்தில் கற்ற டிரிக் ஆகும். அதாவது கிரானைட் குண்டுகள் வந்தால், இப்படி அதன் மீது பாய்ந்தால் மற்றவர்களைக் காக்க முடியும். தனது காதலியைக் காக்க நொடியும் தாமதிக்காமல் அதன் மீது பாய்ந்துள்ளார் இவர்.
ரொம்ப சோகம்: இந்த ஜோடி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொள்ள இருந்தனர். ஷாவிட் தனது திருமண உடையைக் கூட வாங்கியிருந்தார். ஆனால், இந்த ஜோடிக்கு இப்படியொரு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. தனிமையில் தவிக்கும் ஷாவிட் முடிந்தவரை இயல்பு நிலைக்கு வரப் பார்க்கிறார். ஆனால், அவரால் அந்த வேதனையில் இருந்து வெளியே வர முடியவில்லை.












Click it and Unblock the Notifications