எபோலாவுக்கான மருந்து தற்போது இல்லை... 2015ல் கண்டுபிடிப்போம்: உலக சுகாதார நிறுவனம்
லண்டன்: உலகை அச்சுறுத்தி வரும் எபோலா நோயைக் குணப்படுத்தும் மருந்து அடுத்த ஆண்டுக்குப் பின் தான் கண்டுபிடித்து வினியோகிக்க இயலும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேகமாகப் பரவி வருகிறது ஆட்கொல்லி நோயான எபோலோ. இந்நோய்க்கு இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நோய்ப் பரவலைத் தொடர்ந்து உலக சுகாதார அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் பிரகடனப் படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்நோய்க்கு அமெரிக்கா மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அம்மருந்து மூலம் எபோலா நோய்த்தாக்குதலுக்கு ஆளான இரண்டு பேரை அமெரிக்கா குணமாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால், எபோலாவால் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள நைஜீரியாவிற்கு அம்மருந்தை அமெரிக்கா தர மறுத்து விட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ‘எபோலா' வைரஸ் நோயை கட்டுப்படுத்த தற்போது சக்தி வாய்ந்த மருந்து எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் உதவி டைரக்டர் ஜெனரல் மேரி- பால்கினி கூறியதாவது:-

இங்கிலாந்து கம்பெனி...
உயிர்க்கொல்லி நோயான எபோலாவை கட்டப்படுத்தி குணப்படுத்த கூடிய மருந்தை தயாரிக்க இங்கிலாந்தைச் சேர்ந்த கிளாகோஸ்மித் கிலைன் என்ற மருந்து கம்பெனி முன்வந்துள்ளது.

மாப்பயோ பார்மசூடிகல்...
இதற்கான பரிசோதனை அடுத்த மாதம் (செப்டம்பர்) தொடங்கப்பட உள்ளது. தற்போது ‘மாப்பயோ பார்ம சூடிகல்' என்ற நிறுவனமும் மருந்து தயாரித்துள்ளது.

பரிசோதனை...
அதை ‘எபோலா' வைரஸ் நோயால் ஆப்பிரிக்காவில் பாதிக்கப்பட்ட 2 அமெரிக்கர்கள் மற்றும் குரங்குகளின் உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.

கூட்டம்...
இதற்கிடையே உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டம் மேரி-பால் கினி தலைமையில் நடக்கிறது. அதில் உலகின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர்.

முடிவு...
அந்த கூட்டத்தில் இந்த மருந்தை எபோலா வைரஸ் நோயாளிகளுக்கு செலுத்துவது குறித்து முடிவு செய்யப்படுகிறது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications