For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து இணைந்து உருவாக்கியதுதான் 'ஐ.எஸ்.ஐ.எஸ்.'!: ஸ்னோடென்

By Mathi
Google Oneindia Tamil News

பாக்தாத்: இஸ்ரேல் நாட்டுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத இயக்கம் உருவாக்கப்பட்டதாக அமெரிக்காவை அலற வைத்துக் கொண்டிருக்கிற ஸ்னோடென் தெரிவித்துள்ளார்.

சிரியா மற்றும் ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் ஆயுதப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தனிநாடாக பிரகடனம் செய்துள்ளது. அதன் கலிபா (தலைவராக) அல் பாக்தாதி அறிவிக்கப்பட்டுள்ளார்

snowden

இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை இது தொடர்பாக ஈரானிய செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.எ.ஏவுக்கு ஸ்னோடென் அளித்த பேட்டி:

அமெரிக்க படைகளால் 2004ஆம் ஆண்டு தற்போதைய ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அல் பாக்தாதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்துதான் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் உருவாக்கப்பட்டது. அதாவது இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை உருவாக்கின.

இவ்வாறு ஸ்னோடென் கூறியுள்ளார்.

அண்மையில் மொசூல் மற்றும் கிர்குக் நகரங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் இஸ்ரேல் தயாரிப்பு ஆயுதங்களை பயன்படுத்தியதாக குர்திஷ் படையினரும் கூட தெரிவித்திருந்தனர்.

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். கடுப்பாட்டில் உள்ள பகுதியில் இஸ்ரேலிய மருத்துவமனை ஒன்றில்தான் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 283 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன..

மேலும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கூட அந்த மருத்துவமனையைப் பார்வையிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

English summary
Islamic State of Iraq and Greater Syria's (ISIS), which has created unrest in Iraq, is the joint creation of the intelligence agencies of three countries - Israel, the United States and the United Kingdom. ISIS leader Abu Bakr Al Baghdadi, who recently declared himself as the caliph of Muslims, took military training from the agencies of the three countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X