இந்தியாவுக்கு தான் ஸ்கெட்ச்? சிறையில் இருந்து சதிகாரனை விடுவித்த வங்கதேசம்.. யார் இந்த பிண்டு? பகீர்
டாக்கா: வங்கதேசம் நம் நாட்டுடன் மோதலை தொடங்கி உள்ளது. இதற்கிடையே தான் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவனும், ஷேக் ஹசீனா பொதுக்கூட்டத்தில் கையெறி குண்டு அவரை கொல்ல முயன்ற சதிகாரனை வங்கதேச அரசு 18 ஆண்டுகளுக்கு பிறகு சிறையில் இருந்து விடுவித்துள்ளது. இதனால் இந்தியா, ஷேக் ஹசீனாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படும் சூழலில் சிறையில் இருந்த வெளியே வந்த சதிகாரன் அப்தஸ் சலாம் பிண்டு யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேச வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார். அதன்பிறகு அங்கு நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. இந்த இடைக்கால அரசு நாம் செய்த உதவிகளை மறந்து நம்முடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது.

வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல், எல்லையில் பதற்றம், சீனா, பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டு இணைந்து செயல்படும் நோக்கத்தில் முகமது யூனுஷ் செயல்பட்டு வருகிறார். இதனால் வங்கதேசம் - நம் நாடு இடையேயான உறவு என்பது இதுவரை இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.
இதற்கிடையே தான் ஷேக் ஹசீனாவை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர் மீது வங்கதேசத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் அவரை வங்கதேசத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் நம் நாடு அவரை திருப்பி அனுப்ப மறுத்துவிட்டது. நம்முடன் நட்புடன் செயல்பட்டு வந்த ஷேக் ஹசீனா தொடர்ந்து நம் நாட்டில் தங்கியுள்ளார். இது வங்கதேசத்தை கோபப்படுத்தி உள்ளது.
இதனால் நம் நாட்டுக்கு எதிராக அந்த நாட்டு அரசு பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக சார்க் கூட்டமைப்புக்கு உயிர் கொடுக்க பாகிஸ்தானுடன் சேர்ந்து வங்கதேசம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க தற்போது இன்னொரு திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்தியா மற்றும் ஷேக் ஹசீனாவுக்கு ஆபத்தாக பார்க்கப்படும் நபரை வங்கதேச அரசு சிறையில் இருந்து விடுவித்துள்ளது.
அந்த நபரின் பெயர் என்னவென்றால் அப்துஸ் சலாம் பிண்டு. இவர் பிஎன்பி கட்சியின் துணை தலைவராக உள்ளார். இவர் தன்காயில் 2(கோபால்பூர் - புயாபூர்) தொகுதியின் எம்பியாக கடந்த 1991 மற்றும் 2001 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு அவர் அமைச்சராகவும் செயல்பட்டார். கடந்த 2008 ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது 18 ஆண்டுகள் கழித்து அவர் விடுதலையாகி உள்ளார்.
இவர் நம் நாட்டுக்கு எதிரான தீவிரவாத செயலுக்கு ஆதரவு தெரிவித்து, ஷேக் ஹசீனாவின் பொதுக்கூட்டங்கள் மீது கையெறி குண்டு தாக்குதல் நடத்தியவர். கடந்த 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் ஆண்டு டாக்காவில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி பொதுக்கூட்டத்தில் கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 24 பேர் பலியாகினர். ஷேக் ஹசீனா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த வழக்கில் அவர் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு கடந்த 2018ல் ஜூடிசியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அதன்பிறகு அந்த தண்டனை வங்கதேசத்தின் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டார். மரண தண்டனையில் இருந்து தப்பிய அப்துல் சலாம் பிண்டு தொடர்ந்து சிறையிலேயே இருந்து வந்தார். கடந்த 2008 முதல் தொடர்ந்து சிறையில் இருந்த அவர் 18 ஆண்டுகளுக்கு பின் தற்போது விடுதலையாகி உள்ளார்.
அதேபோல் இந்த அப்துஸ் சலாம் பிண்டு எச்யூஜேஐ எனும் ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி (HuJI அல்லது Harkat - Ul - Jihad Al Islami) என்ற அமைப்புடன் தொடர்பில் உள்ளார். இந்த அமைப்பு என்பது நம் நாட்டுடன் மோதி வரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புடன் அப்துஸ் சலாம் பிண்டு நெருக்கமாக உள்ளார். இந்த அமைப்பு நம் நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு சதித்திட்டத்தை தீட்டி கொடுப்பது, இந்த அமைப்புக்கு ஆட்களை திரட்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயிற்சி வழங்குவது, பயங்கரவாத அமைப்புக்கு நிதி உதவி செய்வது உள்ளிட்ட சதி வேலைகளில் அப்துஸ் சலாம் பிண்டு ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் தான் வங்கதேசம் - நம் நாட்டுக்கு இடையே மோதல் வலுத்து வரும் சூழலில் அப்துஸ் சலாம் பிண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியா மற்றும் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். மேலும் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க மறுப்பதால் அப்துஸ் சலாம் பிண்டுவை வைத்து வங்கதேசம் நம் நாட்டை மிரட்டுகிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதனால் இந்தியா, வங்கதேசத்தில் நடக்கும் சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது.












Click it and Unblock the Notifications