ஸ்கெட்ச் போட்டு தூக்கும் கூலிப்படை! உக்ரைனில் குதித்த செச்சென்யா அதிபர்! புடினின் இடதுகை! யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் செச்சென்யா களமிறங்கி உள்ளது. இந்த நிலையில் செச்சென்யா அதிபர் ரம்சான் கட்ராவ் இந்த போரில் களமிறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் நேரடியாக போரில் தலையிடும் பட்சத்தில் அது போரின் முடிவுகளை அப்படியே மாற்றும் வாய்ப்பு உள்ளது.. அதோடு கடுமையான சேதங்களையும் உக்ரைன் தரப்பிற்கு இது ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.. யார் இந்த ரம்சான்.. ஏன் அவர் இப்போது கவனம் பெறுகிறார் என்று பார்க்கலாம்!

உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக செச்சென்யா களமிறங்கி உள்ளது. இந்த செச்சென்யா என்பது ரஷ்யாவின் ஆளுகைக்கு கீழ் இருக்கும் பகுதியாகும். தனி நாடு என்று கூறப்பட்டாலும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் நாடாகவே செச்சென்யா வலம் வந்து கொண்டு இருக்கிறது.

தங்கள் நாட்டு படையை ரஷ்யாவிற்கு ஆதரவாக செச்சென்யா அனுப்பி உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் இந்த படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

யார் இவர்?

யார் இவர்?

இந்த நிலையில்தான் செச்சென்யா அதிபர் ரம்சான் நேரடியாக இந்த போரில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மார்ச் 14ம் தேதி செச்சென்யா அதிபர் ரம்சான் வெளியிட்ட வீடியோவில், தான் இப்போது உக்ரைன் தலைநகர் கீவில் இருப்பதாக கூறினார். ஆனால் இவரின் இருப்பிடம் இப்போதும் பல சந்தேகங்கள், குழப்பங்கள் நிலவி வருகின்றன. இதற்கு முன்பே ரஷ்யாவிற்கு ஆதரவாக 2008ல் ஜார்ஜியா போரிலும் அதன்பின் 2014 உக்ரைனில் கிரிமியாவை பிடிக்க ரஷ்யா செய்த போரிலும், சிரியா போரிலும் செச்சென்யா ரஷ்யாவிற்கு ஆதரவாக குதித்தது.

கொலைகாரர்

கொலைகாரர்

இந்த போரில் எல்லாம் ரஷ்யாவின் கை ஓங்க காரணமாக இருந்தது செச்சென்யா மற்றும் அதன் அதிபர் ரம்சான்தான் என்பது குறிப்பிடத்தக்கது. செச்சென்யா படை வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமானவர்கள், நுணுக்கமான போர் திறன்கள் கொண்டவர்கள். கடுமையாக தாக்க கூடியவர்கள். எதிரி நாட்டு படைகளை புதிய விதங்களில் சுற்றி வளைத்து தாக்க கூடியவர்கள் என்ற பெயர் பெற்றவர்கள். அதிலும் செச்சென்யா அதிபர் ரம்சான் மிகவும் மூர்க்கமான குணம் கொண்டவர்.

ரஷ்ய ஆதரவு

ரஷ்ய ஆதரவு

இவரே ஒரு வகையில் கூலிப்படையை சேர்ந்தவர் என்ற புகார் உள்ளது. ரஷ்ய அதிபர் புடின் கை காட்டும் ஆட்களை தீர்த்து கட்டும் நாடுதான் செச்சென்யா.. அதன் அதிபர்தான் ரம்சான் என்ற புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. 2007ல் ரம்சானின் அப்பா அகமது கொலை செய்யப்பட்ட பின் செச்சென்யா அதிபராக ரம்சான் பதவி ஏற்றார். முதல் செச்சென்யா போரில் ரஷ்யாவிற்கு எதிராக 1994ல் போரிட்டு 1996ல் அதற்கு விடுதலை பெற்று தந்தார். அதன்பின் ரஷ்யாவுடன் சேர்ந்து தன்னுடைய நண்பர்களையே எதிர்த்து போரிட்டு 2000ல் செச்சென்யாவை மீண்டும் ரஷ்யாவின் ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்தார்.

 பலர் கொலை

பலர் கொலை

அப்போதில் இருந்து ரம்சானின் கட்டுப்பாட்டில் செச்சென்யா இருக்கிறது. ரம்சான் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். தன்னுரையை அரசியல் எதிரிகளை அடுத்தடுத்து கொன்றதாக இவர் மீது புகார்கள் உள்ளன. பலரை கடுமையாக கொடுமைப்படுத்தி கொன்றதாகவும், எதிர்க்கட்சி தலைவர்களை கூலிப்படையை வைத்து தாக்கியதாகவும், ரஷ்யாவிற்கு எதிராக பேசுபவர்களை வீடு புகுந்து கொன்றதாகவும் செச்சென்யா அதிபர் ரம்சான் மீதும், அவருக்கு நெருக்கமானவர்கள் மீதும் புகார் உள்ளது.

செச்சென்யா

செச்சென்யா

செச்சென்யாவின் ராணுவ தளபதிகள் வரை பலரை கொன்றதாக இவர் மீது புகார்கள் உள்ளன. 2 015ல் புடினை எதிர்த்த செச்சென்யாவின் எதிர்க்கட்சி தலைவர் போரிஸ் கொலை செய்யப்பட்டதிற்கு பின்பு கூட செச்சென்யா அதிபர் ரம்சான் இருப்பதாக புகார்கள் உள்ளன. புடினுக்காக எதையும் செய்ய கூடிய நபர்தான் ரம்சான். இதை அவரே பல இடங்களில் சொல்லி இருக்கிறார். புடினின் அடியாள் இவர்.. அவரின் பூகிமேன் இவர் என்று உலக நாடுகள் பல இவரை விமர்சனம் செய்துள்ளன.

 செச்சென்யா ரஷ்யா

செச்சென்யா ரஷ்யா

இதற்கு கைமாறாக செச்சென்யாவிற்கு தொடர் பொருளாதார உதவிகளை ரஷ்யா செய்து வருகிறது. செச்சென்யாவின் பட்ஜெட்டில் 87 சதவிகித பட்ஜெட் நேரடியாக ரஷ்யாவில் இருந்து வருகிறது. ரம்சானுக்கு தனிப்பட்ட வகையிலும் ரஷ்யா நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில்தான் உக்ரைனில் ரஷ்யா சார்பாக செச்சென்யாவின் 12 ஆயிரம் போர் வீரர்களும் அதன் அதிபர் ரம்சானும் களமிறக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கொலை செய்ய திட்டம்

கொலை செய்ய திட்டம்

இவருக்கு பல டாஸ்க் கொடுத்து புடினே இவரை களமிறக்கி இருக்கலாம் என்று ராய்டர்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் அதிபரை கொல்வது, உள்நாட்டு போரை தொடங்குவது, ராணுவ கிளர்ச்சியை ஏற்படுத்துவது போன்ற பணிகளை செச்சென்யா அதிபர் ரம்சான் செய்யும் வாய்ப்புகள் உள்ளன. அதற்காகவே ரஷ்ய அதிபர் புடின் இவரை அங்கு அனுப்பி இருக்கிறார் என்று புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. போரில் இவரின் திடீர் வருகை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+