7 குழந்தைகளில் ஒருவருக்கு மனநல பாதிப்பு.. WHO வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்.. இந்த டேட்டாவை பாருங்க
ஜெனீவா: உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளில் 7 பேரில் ஒருவருக்கு மனநல பாதிப்பு இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த பாதிப்பு குழந்தைகளைக் கடந்து வளரிளம் பருவத்தில் உள்ள 14-17 சிறார்களிடமும் அதிகம் காணப்படுகிறது என்றும் WHO தெரிவித்துள்ளது.
ஆனால் இது குறித்து நாம் யாரும் அக்கறை கொள்வதில்லை என்றும் இப்படி ஒரு பாதிப்பு இருக்கிறது என்ற தெரிந்தாலும் நாம் அதற்கான சிகிச்சை வழங்குவதில்லை எனவும் WHO கூறுகிறது.

ஆக்கப்பூர்வமான உரையாடல்
ராஜராஜ சோழன், பொன்னியின் செல்வன், திரைப்பட கிசு கிசுக்கள் என எல்லாம் விவாதித்து முடித்தாகிவிட்டது. தற்போது நம்முடைய விவாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் குழந்தைகள், பிக்பாஸ் போன்றவற்றை நோக்கி நகர்ந்திருக்கிறது. இவையெல்லாவற்றையும் கொஞ்சம் நிதானமாக பார்த்துக்கொள்ளலாம். அதற்கு முன்னர் வாசகர்களாகிய நீங்கள் எப்படி இருக்கிறீர்? நான் எப்படி இருக்கிறேன் என்பது குறித்தும், நமது சமூகத்தின் எதிர்காலமாகிய குழந்தைகள் குறித்தும் சற்று நேரம் உரையாடுவோமா?

குழந்தைகள்/சிறார்கள்
ஆம் நண்பர்களே நான் மேலே குறிப்பிட்ட விவாதங்களை விட தற்போது உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் குறித்து உரையாடுவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததுதான். ஏனெனில் நான் ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல நம்மை சுற்றியிருக்கும் 7 குழந்தைகளில் ஒரு குழந்தை மனநல பாதிப்பை எதிர்கொண்டு வளர்ந்து வருகிறது. குழந்தைகள் மட்டுமல்ல சிறார்களும்தான். எனவே வேறெதை பற்றி பேசுவதைக் காட்டிலும் தற்போது இதைப் பற்றி பேசுவது மிகுந்த பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
இந்த பிரச்னைகள் அவர்களை மட்டும் பாதிப்பது கிடையாது. அவர்களை சுற்றியிருக்கும் என்னையும் உங்களையும் கூட பாதிக்கும். இது பிஞ்சு குழந்தைகளையும் சிறார்களையும் தற்கொலை நோக்கியும், தீராத நோய்களை நோக்கியும், இயலாமையை நோக்கியும் மெல்ல நகர்த்திக் கொண்டிருக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

சவால்
நாம் எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம் இந்த பிரச்னை அந்த குழந்தையை சார்ந்தது. அவர்கள் குடும்பத்தை சார்ந்தது. அவர்கள்தான் எங்கே தவறிழைத்திருக்கிறார்கள் என. ஆனால், இந்த உலகில் வாழும் எந்த ஒரு குழந்தையும் சரியான மனநலனுடன் வாழ வேண்டும் என்பது அவர்களுடைய அடிப்படை உரிமை. அந்த உரிமை பறித்த/கொடுக்காத சமூகமும், அரசும் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணமாகாதா என்ன? குறிப்பாக கொரோனா தொற்று காலகட்டதில் மனநலன் பிரச்னைகள் குழந்தைகளிடையே கணிசமான அளவில் அதிகரித்துள்ளது என்பது நமது முன் நிற்கும் மிகப் பெரிய சவால். இதற்காக நாம் என்ன செய்ய போகிறோம்?

சாமானியர்கள்
கொரோனா தொற்றால் முடங்கிய வாழ்வாதாரம் காரணமாக நாம் அதிக நேரத்தை குழந்தைகளுடன் செலவிடுகிறோம் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல. இதை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கும் எனக்கும் மாதம் லட்சக்கணக்கிலோ, கோடிக்கணக்கிலோ வருமானம் கிடைப்பதில்லை. நாம் சாமானியர்கள்தான். கொரோனாவால் வேலையிழப்பு, வருமானம் இழப்பு, கடன் தொல்லை, வீட்டு வாடகை, உணவு, போதுமான அளவு ஊதியம் இல்லாதது ஆகியவற்றுடன் போராடிய/போராடிக்கொண்டிருக்கிற நாம் எப்படி குழந்தைகளுடன் சந்தோஷமாக இருந்துவிட முடியும்.

கொரோனா
இவையனைத்தும் நம்மை தாக்கியது போல நமது குழந்தைகளையும் தாக்கியுள்ளது. எனவே கொரோனா நமக்கு எந்த நல்ல விஷயத்தையும் செய்துவிடவில்லை.
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் இப்போது என்ன செய்வது என கேட்கிறீர்களா? நானும் அதையேதான் தேடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் உலக சுகாதார அமைப்பு இதற்கான தீர்வு குறித்து எழுதியுள்ளதை படித்தேன். அதை உங்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன். ஆங்கிலத்தில் வேண்டுபவர்கள் www.unicef.org/on-my-mind தளத்திற்கு சென்றும் படித்துக்கொள்ளலாம்.

என்ன செய்யலாம்?
முதலில் புறக்கணிப்புகளை நாம் நிறுத்த வேண்டும். குழந்தைகளும், சிறுவர்களும் அவர்கள் வயதுக்கு உரியவர்கள் என்பதை நாம் உணர வேண்டும். எல்லாவற்றையும் சரியாக செய்ய அவர்கள் வளர்ந்த மனிதர்கள் அல்ல. நாமும் கூட பல நேரங்களில் தவறு செய்யும்போது குழந்தைகள் செய்வது வெறும் பிழைகள்தான். அதேபோல அவர்களின் இயலாமையை வைத்து கேலி செய்வதை நாம் முடிந்தால் இந்த கட்டுரையை வாசிக்கும்போதே கூட கைவிட்டுவிடுவது நல்லது.

உரையாடல்கள்
அவர்களுக்கு மனநலம் மற்றும் உளவியல் ஆதரவு தேவைப்படுகிறது எனில் நாம் அவர்களுக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும். நேர்மறையாக பேசுவது, அதுபோல நடந்துகொள்வதன் மூலம் குழந்தைகளும் விரைவில் இம்முறையை பழகிக்கொள்ளும். இது அவர்களின் மன வலிமையை ஏற்படுத்தும். பள்ளிகளிலும், குழந்தைகள்/சிறார்கள் பழகும் கூட்டத்தினரும் பாதுகாப்பானவர்கள்தான் என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அதேபோல பாதுகாப்பற்ற சூழலில் அவர்கள் இருக்கிறார்கள் எனில் அதனை வெளிப்படையாக அவர்கள் கூறுவதை நாம் வரவேற்க வேண்டும். இது உரையாடல்கள் மூலமாகதான் சாத்தியமாகும்.
இவ்வாறு செய்வதன் மூலம் நாம் நம்பிக்கையான, நேர்மறையான எதிர்காலத்தை உருவாக்க முடியும். வாருங்கள் இணைந்து பயணிப்போம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications