ஓமிக்ரான் கொரோனா வைரஸை அப்படி எல்லாம் சாதாரணமாக நினைக்காதீங்க... உலக சுகாதார அமைப்பு வார்னிங்
ஜெனிவா: ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது; ஓமிக்ரான் வைரஸை லேசானதாக நினைத்துவிடக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பரவல் மிக மிக அதிகமாக உள்ளது. டெல்டா வகை கொரோனா வைரஸைப் போல ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகமாக உள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு பல லட்சங்களை தாண்டியதாக பதிவாகி இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 100% அதிகரித்துள்ளது.

இந்தியாவிலும் அதிக பாதிப்பு
இந்தியாவிலும் ஒருநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து 1 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் மிக அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா கால கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசிகள், பூஸ்டர் தடுப்பூசிகள் போடுவதில் முன்னைவிட அதிகமாக முனைப்பு காட்டியும் வருகின்றன.

ஓமிக்ரான் பாதிப்பு
அதேநேரத்தில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முந்தைய உருமாறிய கொரோனா வைரஸ்களை விட ஓமிக்ரான் வைரஸால் ஏற்படும் பாதிப்பு குறைவானது எனவும் கூறப்பட்டு வருகிறது.

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
ஆனால் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இதனை நிராகரித்துள்ளார். இது தொடர்பாக டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது: டெல்டா வகை கொரோனா வைரஸை விட ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு குறைவு என தோன்றலாம். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்கின்றனர். ஆனால் ஓமிக்ரான் வைரஸை அவ்வளவு எளிதாக பார்க்கக் கூடாது.

ஓமிக்ரான் பாதிப்பால் உயிரிழப்பு
இதர உருமாறிய கொரோனா வைரஸ் ஏற்படுத்திய அதே பாதிப்புகளையே ஓமிக்ரான் வைரஸும் உருவாக்குகிறது. ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பால் பொதுமக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. சுனாமி போல தாக்கும் ஓமிக்ரான் உள்ளிட்ட புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் உலக நாடுகளின் சுகாதார கட்டமைப்புகளில் கடுமையான பாதிப்பை ஓமிக்ரான் வைரஸும் ஏற்படுத்துகிறது. இவ்வாறு டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications