Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்லாமியர்கள் தான் அதிகம்! ஆனாலும் சோமாலிலாந்தை தனிநாடாக அங்கீகரிக்க முஸ்லிம் நாடுகள் மறுப்பது ஏன்? பின்னணியில் இஸ்ரேல்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: 1991ம் ஆண்டில் இருந்தே சோமாலியாவில் இருந்து பிரிந்த சோமலிலாந்தை முதல் ஆளாக இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரித்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் உள்பட இஸ்லாமிய நாடுகள் பலவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சேமாலிலாந்தில் சன்னி இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள நிலையில் முஸ்லிம் நாடுகள் அங்கீகரிக்க மறுப்பதன் பின்னணி பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடாக சோமாலியா உள்ளது. இது இந்திய பெருங்கடலையொட்டி அமைந்துள்ளது. மறுபுறம் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா உள்ளது. இதுதான் இந்திய பெருங்கடல் மற்றும் செங்கடலை இணைத்து வருகிறது. இந்த ஏடன் வளைகுடாவையொட்டி சோமாலிலாந்து உள்ளது.

1991ல் சோமாலியாவிடம் இருந்து சோமாலிலாந்து பிரிந்து சுதந்திர நாடாக அறிவித்து கொண்டது. இங்கு சன்னி இஸ்லாமியர்கள் அதிகம் உள்ளனர்.

சோமாலிலாந்து தனி நாடாக அறிவித்து கொண்டு சோமாலியாவில் இருந்து தனித்து செயல்பட்டு வருகிறது. மொத்த மக்கள்தொகை 62 லட்சமாக உள்ளது. சோமாலிலாந்தின் தலைநகராக ஹெர்கெய்ஸா உள்ளது.

அதிபராக அப்திர் ரஹ்மான் முகமது அப்துல்லாஹி உள்ளார். இருப்பினும் சோமாலிலாந்தை யாரும் தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. அனைத்து நாடுகளும் சோமாலியாவின் ஒரு பகுதியாகவும், இன்னும் சில நாடுகள் தனி சுதந்திர பகுதியாகும் பார்த்து வருகின்றன.

இப்படியான சூழலில் தான் முதல் முதலாக சோமாலிலாந்தை தனி நாடாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அங்கீகரித்துள்ளார். இதுதொடர்பாக சோமாலிலாந்தின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும், கல்வி, மருத்துவம், விவசாயத்தும் உதவுவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இஸ்ரேல் என்பது யூதர்களின் நாடாகும். சோமாலிலாந்து சன்னி இஸ்லாமியர்கள் நிறைந்துள்ள நிலையில் நெதன்யாகுவின் இந்த நடவடிக்கை பேசும் பொருளாகி உள்ளது.

சோமாலிலாந்தின் தாய் நாடான சோமாலியாவில் தற்போது பல பிரச்சனைகள் உள்ளது. உள்நாட்டு மோதல், பசி, வறுமை, பட்டினி உள்ளது. ஆனால் சோமாலிலாந்து மக்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அங்கு உள்நாட்டு போர் இல்லை. இங்கிருந்து கால்நடை ஏற்றுமதி, தொலைதொடர்பு மற்றும் துறைமுக சேவைகள் மூலம் பணப்புழக்கம் உள்ளது.

சோமாலிலாந்தில் அமெரிக்கா, எத்தியோப்பியா, தைவான் உள்ளிட்ட நாடுகள் பிரதிநிதிகள் இருந்தாலும் தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. அதேபோல் தனி நாடாக அங்கீகரிக்காமல் எத்தியோப்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளும் இங்கு முதலீடு செய்கின்றன.

சர்வதேச அளவில் தனிநாடு அங்கீகாரம் இல்லாததால் சோமாலிலாந்துக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. இந்த அங்கீகாரம் இருந்தால் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற முக்கியமான அமைப்புகளை சோமாலிலாந்தால் அணுக முடியும்.

பல நாடுகளுடன் பெரிய அளவில் ஒப்பந்தங்கள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும். இஸ்ரேலை தொடர்ந்து பல நாடுகள் தங்களை அங்கீகரிக்கும் வாய்ப்புள்ளது என்பதால் சோமாலிலாந்து செம ஹேப்பியானது.

இந்நிலையில் தான் இஸ்ரேலின் நடவடிக்கையை பாகிஸ்தான் உள்பட மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கடுமையாக எதிர்த்துள்ளன. தற்போது வரை 30க்கும் அதிகமான இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலின் முடிவை ஏற்கவில்லை. அதுமட்டுமின்றி இஸ்ரேல் சோமாலிலாந்தை தனி நாடாக அங்கீகரிக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

முதற்கட்டமாக சோமாலிலாந்தை தனி நாடாக அங்கீகரித்தற்கு ஏயூ எனும் ஆப்பிரிக்க ஒன்றியமும், இஸ்லாமிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக ஓஐசி எனும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் நடவடிக்கை என்பது பிரிவினைவாதத்தை வளர்க்கும். இஸ்லாமிய மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் அமைதியை சீர்க்குலைக்கும் என்று வார்னிங் செய்துள்ளது. மேலும் சோமாலிலாந்தை தனி நாடாக அங்கீகரித்ததன் மூலம் சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் முழுமையாக மீறி உள்ளது என ஓஐசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம், ‛‛சோமாலியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பிராந்திய ஒருமைப்பாட்டை குறை மதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் பாகிஸ்தான் வன்மையாகக் கண்டிக்கிறது. சோமாலிய குடியரசின் சோமாலிலாந்துப பகுதியை இஸ்ரேல் சுதந்திரமாக அங்கீகரித்த அறிவிப்பை நாங்கள் ஏற்க மறுக்கிறோம்'' என கூறியுள்ளது.

சோமாலிலாந்தில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள நிலையில் முஸ்லிம் நாடுகளே அதனை அங்கீகரிக்க எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? என்று பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

அதாவது மத்திய கிழக்கு பிராந்தியத்தை எடுத்து கொண்டால் இஸ்ரேல் மட்டுமே யூத நாடாக உள்ளது. பிற நாடுகள் அனைத்தும் இஸ்லாமிய நாடுகளாகும். இதனாலே இஸ்ரேலுக்கும், பிற நாடுகளுக்கும் சுமூகமான உறவு கிடையாது. பாலஸ்தீனத்தின் காசா மீதான போருக்கும் இந்த இருபிரிவினர் இடையேயயான மோதல் தான் காரணமாகும்.

இப்போது சோமாலிலாந்தை அங்கீகரித்துள்ளதன் மூலமாக இஸ்ரேல் அந்த நிலப்பகுதியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. செங்கடல் வழியாக இந்திய பெருங்கடலை மத்தியதரைக் கடலுடன் இணைக்கும் பாப்-அல்-மண்டேப் ஜலசந்தி இதன் அருகே உள்ளது. இது எண்ணெய் வர்த்தகத்துக்கு முக்கிய வழித்தடமாகும்.

காசா போருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2023ம் ஆண்டு முதல் ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த பாதையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கப்பல்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர். வணிகக் கப்பல்கள் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதனால் இஸ்ரேல் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. ஏமன் ஹவுதிகளுக்கு இஸ்ரேலால் உடனடியாக பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆனால் சோமாலிலாந்தை கைக்குள் வைத்து அங்கு ராணுவ தளம் அல்லது விமான தளத்தை அமைத்தால் எளிதாக ஏமனுக்கு பதிலடி கொடுக்க முடியும்.

சோமாலிலாந்தும், ஏமனும் பக்கத்து பக்கத்து நாடுகள். இருநாடுகளுக்கு இடையே கடல் தான் உள்ளது. இதனால் சோமாலிலாந்தை நாடாக அங்கீகரித்து அங்கு ராணுவம் அல்லது விமான தளத்தை அமைக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது மத்திய கிழக்கு மற்றும்ஆப்பிரிக்க பிராந்தியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி எண்ணெய் வர்த்தகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் தான் பாகிஸ்தான் உள்பட இஸ்லாமிய நாடுகளும், ஆப்பிரிக்க ஒன்றியமும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+