"இந்து மன்னர் தான் ஆள வேண்டும்".. நேபாளத்தில் கவிழும் கம்யூனிஸ்ட் ஆட்சி? இந்தியாவுக்கு ஜாக்பாட்
காத்மாண்ட்: அண்டை நாடாக உள்ள நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை தொடங்கி உள்ளனர். அதுமட்டுமின்றி இந்து மன்னர் ஞானேந்தர் ஷா தான் எங்கள் நாட்டை ஆள வேண்டும். ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி எங்களுக்கு வேண்டாம் என்று பல ஆயிரம் மக்கள் ரோட்டில் இறங்கி போராடி வருவது பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது. இதனால் விரைவில் நேபாளத்தில் ஆட்சி கவிழும் சூழல் உள்ளது. இதுதவிர நேபாளத்தில் மீண்டும் இந்து மன்னராட்சி ஆட்சி செய்யப்படுமா? அப்படியென்றால் இந்தியாவுக்கு அடிக்கும் ஜாக்பாட் என்ன? என்பது பற்றிய விபரம் வருமாறு:
அண்டை நாடாக நேபாளம் உள்ளது. இமயமலை அடிவாரத்தில் உள்ள நேபாளம் நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் முக்கிய இடமாகும். நேபாள பிரதமராக இருப்பவர் கேபி ஷர்மா ஒலி. இவர் நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) (Communist Party of Nepal -Unified Marxist - leninist) கட்சியை சேர்ந்தவர்.

நேபாளம் என்பது அளவில் மிகவும் குட்டி நாடாகும். இந்த நாட்டில் நீண்டகாலமாக மன்னராட்சி நடந்து வந்தது. கடந்த 2008 ம் ஆண்டில் மன்னராட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. அதன்பிறகு தேர்தல் முறையில் பிரதமர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் நேபாளம் அரசியல் என்பது குழப்பமான ஒன்றாகும். நிலையான ஆட்சி என்பது அங்கு இருந்ததே இல்லை. அதாவது ஒரு பிரதமர் கூட முழுமையாக 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்தது இல்லை.
17 ஆண்டில் 13 பிரதமர்
புரியும்படி கூற வேண்டும் என்றால் கடந்த 2008 ம் ஆண்டு தற்போது வரை 17 ஆண்டுகளில் 13 முறை பிரதமர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் அரசியல், கூட்டணி குழப்பம் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அங்கு பிரதமர் தொடர்ந்து மாறி கொண்டே வருகிறார். இப்படியான சூழலில் தான் தற்போது நேபாளத்தின் பிரதமராக கேபி ஷர்மா ஒலி உள்ளார். இவர் 3வது முறையாக பிரதமராக செயல்பட்டு வருகிறார்.
ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி
இவரது ஆட்சியின் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி என்பது ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்பது நேபாளத்தில் நடக்கும் ஊழல் மற்றும் பொருளாதார மந்த நிலை தான். இதனால் தற்போது கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் அவர்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த போராட்டம் என்பது தொடர்ந்து வருகிறது. இந்த போராட்டத்தை ஆர்பிபி எனும் ராஷ்ட்ரிய பிரஜாதன்ந்த்ர கட்சி முன்னெடுத்து வருகிறது.
மன்னர் ஞானேந்திர ஷா
இதற்கிடையே தான் நேபாள மக்கள் எங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி வேண்டாம். தேர்தல் முறை ஆட்சியாளர்கள் வேண்டாம். முதலில் இருந்ததுபோல் மன்னராட்சியே வேண்டும் என்று கூறி வருகின்றனர் போராட்டக்காரர்கள். இதற்கிடையே தான் நாட்டின் பல்வேறு இடங்களில் மன்னர் ஞானேந்திர ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ற மன்னர் ஞானேந்திர ஷாவுக்கு சுமார் 10ஆயிரம் பேர் வரவேற்று மலர் தூவினர். நாடு முழுவதும் சென்று ஞானேந்திர ஷா மக்களிடம் ஆதரவு கேட்டு வரும் நிலையில் விரைவில் அங்கு ஆட்சி மாற்றம் நிகழலாம் என்று சொல்லப்படுகிறது. அதோடு மீண்டும் அங்கு இந்து மன்னராட்சி என்பது ஞானேந்திர ஷா தலைமையில் நடக்குமா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்பு நடந்தது என்ன?
இந்த ஞானேந்திர ஷா என்பவர் இந்து மன்னர் ஆவார். இவரது அண்ணன் பிரேந்தர் பிர் பிர்க்ராம் ஷா தான் நேபாளத்தின் மன்னராக செயல்பட்டு வுந்தார். ஆனால் கடந்த 2002ம் ஆண்டில் அவரும், அவரது குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்டனர். அதன்பிறகு நேபாளத்தின் அரசியல் மாறியது. ஞானேந்திர ஷா எந்த பொறுப்பிலும் இன்றி நாட்டை 2005ம் ஆண்டு வரை நாட்டை வழிநடத்தினார். அதோடு மாவோயிஸ்ட்டுகளின் கொட்டத்தை அடக்கினார். உள்நாட்டு போர் போன்ற சூழல் ஏற்பட்டது. பலர் கொல்லப்பட்டதோடு, ஏராளமானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து அவர் 2006ம் ஆண்டில் மன்னராக ஞானேந்திர ஷா செயல்பட தொடங்கினார். அதன்பிறகு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பிறகு 2008 ம் ஆண்டில் மன்னராட்சிக்கு எதிராக புரட்சி வெடித்தது.
240 கால மன்னராட்சிமுடிவு
இதையடுத்து ஞானேந்திர ஷா தனது பதவியில் இருந்து இறக்கப்பட்டார். இதன்மூலம் 240 ஆண்டு கால மன்னராட்சி முறை நேபாளத்தில் நிறைவு பெற்றது. அதன்பிறகு தேர்தல் நடத்தப்பட்டு பிரதமர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 2008 ம் ஆண்டு முதல் இப்போது வரை 13 பேர் பிரதமராக மாறிவிட்டனர். இப்படி தொடர்ந்து ஆட்சி மாற்றம், குழப்பமான நிலையால் நேபாளத்தின் பொருளாதாரம் சரிவை சந்தித்தது.
அதேபோல் மக்களுக்கும் ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி ஏற்பட்டது. தற்போது மக்கள் உக்கிரமான நிலையில் மன்னராட்சி மீண்டும் வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஒருவேளை நேபாளத்தில் மன்னராட்சி வரும்பட்சத்தில் அது நம்நாட்டுக்கு பெரிய ஜாக்பாட்டாகும். ஏனென்றால் நேபாளம் என்பது சீனா மற்றும்
இந்தியாவுக்கு என்ன லாபம்?
இந்தியாவுக்கு முக்கியமான இடமாகும். இருநாடுகளுக்கு இடையே இந்த நேபாளம் அமைந்தது. நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி என்பதால் அவர்கள் சீனாவுடன் தான் நெருக்கமாக செயல்பட்டனர். இந்தியா உடனான உறவு என்பது ஏற்றம் - இறக்கத்துடன் தான் உள்ளது. இப்படியான சூழில் இந்து மன்னரான ஞானேந்திர ஷா தலைமையில் மன்னராட்சி வரும்போது அது நம் நாட்டுக்கு சாதகமாக அமையும். அதுமட்டுமின்றி நேபாளத்துக்கு நம் நாடு தொடர்ந்து பொருளாதாரம், மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகிறது. அவரது முன்னோர் காலத்தில் இருந்தே நம் நாட்டுடன் பலர் நெருக்கமாக செயல்பட்டனர். இதனால் ஞனேந்தர் ஷாவும் நம் நாட்டுடன் நெருக்கம் காட்டலாம். இதன்மூலம் நேபாளத்தின் வழியாக நமக்கு ஸ்கெட்ச் போடும் சீனாவுக்கு பதிலடி கொடுக்க முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications