Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென் கொரியாவின் வான் எல்லைக்குள் நுழைந்த.. சீன, ரஷ்ய விமானங்கள்.. பதறிய அமெரிக்கா.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சியோல்: தென் கொரியாவின் வான் பகுதியில் திடீரென ரஷ்யா மற்றும் சீனாவின் போர் விமானங்கள் நுழைந்த சம்பவம் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது.

தென் கொரியாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் 1950ல் நடந்த கொரிய போரில் இருந்தே மோதல்கள் நிலவி வருகின்றன. இரண்டாம் உலகப்போரின் முடிவில் 1945ல் கொரியா ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்று இரண்டாக பிரிந்தது.

அடுத்த 5 வருடங்களில் இந்த பகுதிகள் ஒன்றாக இணைய வேண்டும். ஆனால் பனிப்போர் காரணமாக அமெரிக்கா - ரஷ்யா மோதிக்கொண்டு, கடைசியில் அது கொரிய போருக்கும் வித்திட்டது. போரின் முடிவில் ரஷ்யாவின் ஆதரவில் வடகொரியா என்ற நாடும், அமெரிக்காவின் ஆதரவில் தென் கொரியா என்ற நாடும் உருவானது.

வரலாறு

வரலாறு

அப்போதில் இருந்து வடகொரியா கம்யூனிச நாடாக இருந்து வருகிறது. அங்கு கிம் ஜோங் உன் குடும்பம் ஆட்சி செய்து வருகிறது. தென் கொரியாவில் அமெரிக்கா நடத்திய தேர்தல் மூலம் வலதுசாரி ஆட்சி முறை அமலுக்கு வந்தது. இதில் வடகொரியாவிற்கு சீனா, ரஷ்யா போன்ற கம்யூனிச நாடுகள் போரின் சமயத்தில் உதவி செய்தன. அதில் இருந்து வடகொரியா அமெரிக்காவிற்கு எதிராகவும், ரஷ்யா, சீனாவிற்கு நெருக்கமாகவும் இருந்து வருகிறது. இதே நிலைதான் தற்போதும் நீடித்து வருகிறது.

மோதல்

மோதல்

வரலாற்று ரீதியாகவே எப்போதும் வடகொரியா அமெரிக்கா உறவு சரியாக இருந்தது கிடையாது. தென் கொரியா அமெரிக்க ஆதரவு நாடாகவும், வடகொரியா சோவியத் உள்ளிட்ட கம்யூனிச நாடுகளின் ஆதரவாகவும் இருந்து வந்துள்ளது. கிம் ஜோங் உன் வடகொரியா அதிபரான பின் அமெரிக்கா வடகொரியா உறவு மிக மோசமான நிலையை எட்டியது. முக்கியமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் நடத்தி அமெரிக்காவிற்கு சவால் விட்டது. அணு ஆயுத ஏவுகணை உட்பட பல ஏவுகணைகளை சோதனை செய்து அமெரிக்காவிற்கு வடகொரியா நேரடியாக சவால் விட்டது. அமெரிக்காவும் வடகொரியாவை பல இடங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வந்தது. அமெரிக்காவில் டிரம்ப் அதிபரான பின் இரண்டு நாட்டு உறவு மிக மோசமான நிலையை அடைந்தது.

சோதனை

சோதனை

2020ம் வருட தொடக்கத்திலேயே டிரம்ப் வடகொரியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவேன் என்று குறிப்பிட்டார். என்னுடைய சீட்டிற்கு அருகில்தான் பட்டன் இருக்கிறது. அதை அழுத்தினேன் என்றால் உங்கள் நாட்டில் அணு குண்டு வெடிக்கும். உங்கள் நாட்டில் இருக்கும் அணு ஆயுதங்களை விட எங்களிடம் அதிகமாக இருக்கிறது, வடகொரியா எங்களிடம் மோத கூடாது. கவனமாக இருங்கள் என்று டிரம்ப் கடுமையாக எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் வெடிக்குமோ என்ற அச்சமும் பதற்றமும் நிலவியது. கடந்த சில வாரங்களாக வடகொரியா ஏவுகணை சோதனைகளை அதிகப்படுத்தி வந்தது. திடீரென அதிக தொலைவில் செல்லும் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்து வந்தது.

ஏவுகணை

ஏவுகணை

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிக தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளது. இந்த நிலையில் வடகொரியாவுக்கு அதன் நட்பு நாடான சீனா அறிவுரை சொல்ல வேண்டும். வடகொரியாவை ஏவுகணை சோதனை செய்வதில் இருந்து சீனா தடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்து வந்தது. இந்த நிலையில்தான் தற்போது அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென் கொரியாவின் வான் பகுதியில் திடீரென ரஷ்யா மற்றும் சீனாவின் போர் விமானங்கள் நுழைந்த சம்பவம் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது. 4 ரஷ்ய விமானங்கள், 2 சீன விமானங்கள் அமெரிக்காவின் நட்பு நாடான தென் கொரியாவின் வான் எல்லைக்குள் நுழைந்து உள்ளன.

சீனா

சீனா

சீனாவின் பாம்பர் ஜெட்கள், ரஷ்யாவின் ஏவுகணை தாங்கிய ஜெட்கள் தென் கொரியாவின் எல்லைக்குள் நுழைந்தது. இதற்கு பதிலடி தரும் விதமாக உடனே தென் கொரியாவின் ஜெட்கள் வானத்தில் பறந்தன. இதையடுத்து அங்கு "டாக் பைட் " நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் சீனா, ரஷ்யா விமானங்கள் அங்கிருந்து வெளியேறின. இதனால் நடுவானில் மிகப்பெரிய மோதல் தவிர்க்கப்பட்டது. சீனா - ரஷ்யா இணைந்து ஒருங்கிணைத்த சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு சீனா உறுதுணையாக இருக்கிறது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டிய நிலையில்தான் சீனா - ரஷ்யா தென் கொரியாவின் வான் எல்லைக்குள் ரெய்டு விட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+