கோல்டன் ஆஃபர்.. அலட்டிக்கொள்ளாத இந்தியா! சுகோய்-57E வரமா? சாபமா?
டெல்லி: ரஷ்யாவின் 5ம் தலைமுறை விமானமான சுகோய்-57E மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும், இன்னும் இந்த விமானங்களை வாங்குவது குறித்து இந்தியா ஏதும் வாய் திறக்கவில்லை.
இதற்கான காரணம் என்ன? இந்தியா ஏன் மௌனம் சாதிக்கிறது? ஆண்டாண்டு காலமாக ரஷ்யா நம்பகமான கூட்டாளியாக இருந்தும், சுகோய்-57E விஷயத்தில் அமைதி ஏன் என்பது குறித்து இந்த செய்தி விவரிக்கிறது.

வெறும் காட்சிப் பொருள்
ரஷ்யாவின் ஆஃபரை இந்தியா ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, சுகோய்-57E இன்னும் நம்பும்படி நிரூபிக்கப்படவில்லை. அவ்வளவு ஏன் இந்த விமானம் இன்னும் பொது வெளியில் கூட காட்சிப்படுத்தப்படவில்லை. சமீபத்தில் மலேசியாவில் LIMA 2025 எனும் பெயரில் விமான கண்காட்சி நடைபெற்றது. இதில் சுகோய்-57E இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விமானம் காட்சிப் பொருளாக மட்டுமே இருந்து. வானில் பறக்க கூட இல்லை.
இந்தியாவின் கவனம்
இது ஆசிய நாடுகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்கள் அதிக அளவில் வியாபாரம் ஆவது ஆசியாவில்தான். அந்த வரிசையில் SU -57E ஆசிய நாடுகளிடையே போட்டிப்போட்டுக்கொண்டு வாங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. இப்படி மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இருக்கும்போது, ரஷ்யா அதற்கு தீணி போட்டிருக்க வேண்டும், தவறிவிட்டது. இந்தியா இதை கவனிக்காமல் இல்லை. வானத்தில் பறக்காத சாகசங்கள் நிகழ்த்தாத ஒரு விமானத்தை எப்படி வாங்க முடியும்?
இத்தனைக்கும் இந்த விமானத்தை தயாரிக்கும் ரஷ்ய நிறுவனமான ரோசோபோரோனெக்ஸ்போர்ட், 2025ம் ஆண்டில் SU-57E விமானத்தை ஒரு நாடாவது புக் செய்திருக்கும் என்று கூறியிருந்தது. இந்தியாவும் இந்த விஷயத்தில் சைலன்டாக இருந்ததால் சுகோய்-57E விமானத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
ரஷ்ய தயாரிப்பா இப்படி?
அமெரிக்காவின் F-22, F-35 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களுக்கு போட்டியாக SU-57E இருக்கும் என்று சொல்லப்பட்டாலும், ஆரம்பமே இப்படி சொதப்பலாக இருந்தால் எப்படி? ரேடாரில் எளிதில் சிக்காது, R-37M போன்ற நீண்ட தூர வான்-வான் ஏவுகணைகளை இதில் கொண்டு போக முடியும் என பல சிறப்பம்சங்கள் இந்த விமானத்திற்கு இருந்தாலும், விமானத்தை கண்ணுலையே காட்டலையே! எனவே இந்தியா இதன் மீது ஆர்வம் காட்டாமல் இருக்கிறது.
கழன்றுக்கொண்ட இந்தியா
SU-57E விமானத்தை தயாரிக்கும் பணியில் ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்னரே ரஷ்யா இறங்கியது. அப்போது இந்த திட்டத்தில் எந்தெந்த நாடுகள் பங்கேற்க விரும்புகிறதோ அவையெல்லாம் பங்கேற்கலாம் என அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. எனவே இந்தியாவும் திட்டத்தில் இணைந்திருந்தது. ஆனால் சொன்ன தேதியில் திட்டத்தை முடிக்காதது, அதிக செலவு உள்ளிட்டவை காரணமாக 2018ல் இந்தியா இதிலிருந்து கழன்று கொண்டது
கோல்டன் ஆஃபர்
திட்டத்தில் இருக்கும் நாடுகளுக்கு SU-57E விமான தயாரிப்பு தொழில்நுட்பம் வழங்கப்படும். ஆனால், இந்தியா பாதிவரை பயணித்திருந்தது. இருப்பினும் தொழில்நுட்பத்தை வழங்க ரஷ்யா தற்போது முன்வந்திருக்கிறது. இதை 'கோல்டன் ஆஃபர்' என்றும் சொல்லலாம். ஆனால் லாபம் இல்லாமல் ரஷ்யா இதை செய்யாது. எனவே இதன் பின்னணியில் ஏதாவது சிக்கல் இருக்குமோ என்கிற காரணத்தாலும் இந்தியா அமைதியாக இருக்கிறது. இதுதான் இரண்டாவது காரணம்.
இந்தியாவுக்கு தேவை
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மோதல் போக்கு எழுந்திருக்கிறது. மட்டுமல்லாது சில ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவுக்கும் நமக்கும் பஞ்சாயத்து உருவானது. இப்படி சுற்றி பிரச்சனையாய் இருக்கும் நேரத்தில் நம்மை வலிமைப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக விமானப்படையில் கூடுதல் பலம் வேண்டும். இப்போது ரஃபேல் விமானங்கள் இருக்கின்றன. இது 4.5ம் தலைமுறையை சேர்ந்தது. உலகமே 5ம் தலைமுறை விமானங்களை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் நிலையில், நாம் மட்டும் அமைதியாய் இருந்தால் எப்படி?
இந்நிலையில்தான் நம்முடைய ஆயுத பாட்னரான ரஷ்யா சுகோய்-57E எனும் 5ம் தலைமுறை போர் விமானத்தை கொடுக்க முன் வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications