Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆக்ரோஷமாக பேசிய ஜி ஜின்பிங்.. நடுவில் வந்த தொந்தரவு! டக்குனு அவர் செஞ்ச காரியம்! கிளம்பிய விவாதம்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீன கம்யூனிஸ்ட் மாநாட்டில் பேசிக் கொண்டு இருக்கும் போது ஜி ஜின்பிங் செய்த சிறு காரியம் விவாதத்தைக் கிளப்பி உள்ளது.

அண்டை நாடான சீனாவில் ஒற்றை கட்சி ஆட்சி முறையே இருக்கிறது. அங்குப் பல ஆண்டுகளாகவே அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகிறார்கள்.

இதன் காரணமாக அங்குத் தேர்தல் முறையும் இல்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தான் சீனாவின் அதிபர் தேர்வு செய்யப்படுவார்கள்.

 ஜி ஜின்பிங்

ஜி ஜின்பிங்

பொதுவாகக் கடந்த பல ஆண்டுகளாகவே சீனாவில் எந்தவொரு தலைவரும் இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருந்தது இல்லை. கட்சியைத் தாண்டி ஒருவர் வளரக் கூடாது என்றும் அது சர்வாதிகாரத்தில் முடிந்துவிடும் என்பதற்காகவே இந்த விதி உருவாக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த 2018ஆம் ஆண்டிலேயே ஜி ஜின்பிங் இந்த விதியை சத்தமில்லாமல் நீக்கிவிட்டார். இதனால் அடுத்த 5 ஆண்டுகளும் இவரே அதிபர் பதவியில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா

சீனா

சீனாவில் இப்போது மிகவும் ஆதிக்கம் செலுத்தும் தலைவராக ஜி ஜின்பிங் இருக்கிறார். ஏனென்றால் கடந்த 2012இல் ஆட்சிக்கு வந்த உடனே முதலில் கட்சிக்குள் தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவிகளைக் கொடுத்தார்.. அது மட்டுமின்றி ஊழல் ஒழிப்பு நடவடிக்கையும் அவர் தீவிரப்படுத்தினார். ஆனால், உண்மையில் தனது எதிர்ப்பாளர்களைச் சிறைக்கு அனுப்பவே இதை அவர் பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

 பேச்சு

பேச்சு

இப்போது சீனாவில் மிகப் பெரிய தலைவராக உருவெடுத்து இருக்கும் ஜி ஜின்பிங் செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் தான் அவர் இன்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் இன்று கலந்து கொண்டு பேசினார். அதை உலக நாடுகள் கூர்ந்து கவனித்தன. அப்போது அவர் ஹங்காங்- தைவான் விவகாரம், கோவிட் திட்டங்கள், வளர்ச்சி என பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

 செய்த செயல்

செய்த செயல்

சுமார் இரண்டு மணி நேரம் அவரது பேச்சு நீண்டது. அப்போது பேச்சுக்கு இடையே அவர் செய்த சிறு செயல் தான் பெரும் விவாதத்தைக் கிளப்பி உள்ளது. அதாவது ஜி ஜின்பிங் தனது பேச்சை அடிக்கடி நிறுத்தினார். சில நொடிகள் இடைவெளி விட்டு அவர் பேச்சைத் தொடர்ந்தார். தொண்டையை கரகரத்து கொண்டே அவர் பேச்சைத் தொடர்ந்தார். ஒரு முறை அவர் ஆக்ரோஷமாகப் பேசிக் கொண்டு இருந்த போது, பேச்சை நிறுத்திக் கொண்டு திடீரென தேநீரைக் கொஞ்சம் குடித்தார்.

 கிளம்பிய விவாதம்

கிளம்பிய விவாதம்

அவருக்குத் தொண்டையில் எதோ பிரச்சினை இருப்பது போலவே தெரிந்தது. இது நெட்டிசன்கள் மத்தியில் பெரிய விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. இது சிறு விஷயத்தைக் கூட சீன மக்கள் உற்றுக் கவனிப்பார்கள் என்று பிரபல ஆங்கில ஊடகவியலாளர் ஸ்டீவன் ஜியாங் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "சீன அரசியல் என்பது வெளிப்படையான விஷயத்தைக் காட்டிலும் மிகவும் நுட்பமான விஷயங்களைப் பற்றியது தான்

 ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

ஜி ஜின்பிங் அடிக்கடி தனது பேச்சை நிறுத்தியது அவரது ஸ்டாமினா குறித்த கேள்விகளை எழுப்புகிறது. இதை நான் மட்டுமில்லை சீன மக்களுக்கும் கவனித்து இருப்பார்கள்" என்றார். அவர் கூறியதை போலவே இந்த சிறு நிகழ்வைக் குறிப்பிட்டு இணையத்தில் பலரும் ஜி ஜின்பிங் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+