Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடிய விடிய 7 மணி நேரம் டிராவல்.. கிளம்பிய இடத்திற்கே வந்த விமானம்.. நொந்துபோன பயணிகள்.. என்னாச்சு

ஜப்பானில் விமானம் ஒன்று மீண்டும் கிளம்பிய இடத்திற்கே வந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஜப்பானில் விடிய விடியப் பயணித்த விமானம் ஒன்று மீண்டும் கிளம்பிய இடத்திற்கே வந்துள்ளது. இதனால் பயணிகள் நொந்து போய்விட்டனர்.. அது ஏன்.. என்ன காரணம் என்பதை விளக்கமாகப் பார்க்கலாம்.

விமான போக்குவரத்து என்பது இப்போது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கொரோனா காலத்தில் இடையில் சில ஆண்டுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும் சீக்கிரமே அது மீண்டுவிட்டது.

நீண்ட தூரத்திற்கு வேகமாகச் செல்ல இப்போது இருக்கும் ஒரே ஆப்ஷன் விமானம் என்பதால் பலரும் விமான பயணத்தையே விரும்புகின்றனர். இதனால் விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

விமானம்

விமானம்

பாதுகாப்பு, சவுகரியம், வேகம் எனப் பல காரணங்களால் விமானத்தையே பொதுமக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அதேநேரம் காற்று மாசு உள்ளிட்ட காரணங்களால் விமானத்தை எதிர்க்கும் செயற்பாட்டாளர்களும் இருக்கவே செய்கிறார்கள். அதேபோல ஏர்போர்ட் அருகே இருப்பவர்கள் ஒலி மாசாலும் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது ஏர்போர்டை சுற்றி எப்போதும் விமானம் தரையிறங்குவது புறப்படுவது என்று இருக்கும். இதனால், அங்குச் சுற்றி இருப்பவர்களுக்கு விமானத்தில் இருந்து வரும் அதிக சத்தத்தை அவ்வப்போது கேட்க வேண்டி இருக்கும்.

கிளம்பிய இடத்திற்கே வந்த விமானம்

கிளம்பிய இடத்திற்கே வந்த விமானம்

இதைத் தடுக்கவும் சில நாடுகள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளன. அப்படியொரு நடவடிக்கையால் ஜப்பானில் விமானம் கிளம்பிய இடத்திற்கே திரும்பியுள்ளது. நேரக் கட்டுப்பாடுகளால் 300க்கும் மேற்பட்ட பயணிகளைக் கொண்ட விமானம் ஏழு மணி நேரம் பயணித்து மீண்டும் கிளம்பிய இடத்திற்கே திரும்பியுள்ளது. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று டோக்கியோவில் இருந்து ஃபுகுவோகாவுக்கு மாலை 6.30 மணிக்குக் கிளம்ப இருந்தது. இரண்டு மணி நேரம் பயணம் என்பதால் அது 8.30 மணிக்கு ஃபுகுவோகாவை அடைந்திருக்க வேண்டும்.

ஒலி மாசு

ஒலி மாசு

இருப்பினும், பல்வேறு காரணங்களால் விமானம் புறப்பட 90 நிமிடங்கள் ஆனது. முதலில் செல்லவிருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் விமானம் மாற்றப்பட்டது. பயணிகள், லக்கேஜ் என்று அனைத்தும் மாற்றப்பட்டது. இருப்பினும், விமான நிலையத்தை நெருங்கிய போது தான் அவர்களால் இரவு 10 மணிக்குள் ஏர்போர்டில் தரையிறங்க முடியாது என்பதை உணர்ந்துள்ளனர். 10 மணிக்கு வர முடியவில்லை என்றால் என்ன.. 10.15, 10.30க்கு தரையிறங்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், ஒலி மாசை தடுக்க இரவு 10 மணிக்கு மேல் ஃபுகுவோகாவில் எந்தவொரு விமானமும் தரையிறங்க அனுமதியில்லை.

என்ன காரணம்

என்ன காரணம்

இதனால் விமானத்தால் ஃபுகுவோகாவில் தரையிறங்க முடியவில்லை. ஜப்பான் ஏர்லைனிஸின் இந்த விமானம் முதலில் 4 நிமிடங்களுக்கு முன்பே செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதையும் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் விமானத்தால் ஃபுகுவோகாவில் தரையிறங்க முடியவில்லை. அன்றைய தினம் மற்றொரு ஜப்பானிய நகரான ஹனேடாவில் புயல் காற்று காரணமாக இங்கிருந்து புறப்படும் பல விமானங்கள் தாமதமாகின. இதனால் அங்கிருந்து வந்த விமானங்களுக்கு 10 மணிக்கு பிறகும் ஃபுகுவோகாவில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டன. இதுவும் சர்ச்சையானது.

அதிகாரிகள் விளக்கம்

அதிகாரிகள் விளக்கம்

இருப்பினும், வானிலை போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் தாமதமானதால் அந்த விமானங்களுக்கு அனுமதி தரப்பட்டதாகவும், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்திற்குத் தவிர்க்க முடியாத காரணம் இல்லை என்பதால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பல முறை கேட்டும் அதிகாரிகள் தரையிறங்க அனுமதி மறுத்ததால் வேறு வழியில்லாமல் அவர்கள் டோக்கியோவுக்கே திரும்பினர். முதலில் ஃபுகுவோகாவிற்கு அருகே இருக்கும் வேறு நகருக்கு விமானத்தைத் திரும்பி விடவே நினைத்துள்ளனர்.

7 மணி நேரம் பயணம்

7 மணி நேரம் பயணம்

இருப்பினும், அந்த சின்ன ஏர்போர்ட் பெரிய விமானத்தைக் கையாள முடியாது என்பதால் அந்த திட்டங்கள் கைவிடப்பட்டது. அடுத்த பிளனாக ஒசாகாவிற்கு அருகிலுள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கினர். இருப்பினும், அங்கு 355 பயணிகளுக்கு போதிய பேருந்து மற்றும் ஹோட்டல்கள் இல்லாததால் மீண்டும் விமானம் அங்கிருந்து கிளம்பியது. இதையடுத்து வேறு வழியில்லாமல் விமானம், சுமார் 7 மணி நேரம் பயணித்து மீண்டும் புறப்பட்ட ஏர்போட்டிற்கே திரும்பியது.

மற்றொரு சம்பவம்

மற்றொரு சம்பவம்

அதேநேரம் விமானம் மீண்டும் கிளம்பிய இடத்திலேயே தரையிறங்கியது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே, கடந்த வாரம், ஆக்லாந்திலிருந்து நியூயார்க்கிற்கு கிளம்பிய ஏர் நியூசிலாந்து விமானம், பாதி வழியில் மீண்டும் புறப்பட்ட ஏர்போர்ட்டிற்கே திரும்பியது. ஜான் எஃப். கென்னடி விமான நிலையத்தில் மிகப் பெரிய மின்தடை ஏற்பட்டது.. இதனால் அங்கு விமானங்களைக் கையாள முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் வேறு வழியின்றி விமானம் புறப்பட்டு சுமார் 16 மணி நேரம் கழித்து மீண்டும் ஆக்லாந்திலேயே தரையிறங்கியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+