400 மடங்கு மழை.. உடைந்த அணைகள்- 10 அடி வெள்ளம்.. 20,000 பேர் பலி- லிபியா பேரழிவு- 10 பாயிண்டுகள்!
பெங்காசி: 21-ம் நூற்றாண்டின் பெருந்துயரமாக லிபியா பெருவெள்ளத்தில் சுமார் 20,000 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
லிபியாவின் டேர்னா எனும் மாநகரையே பேய்மழை மயான பூமியாக்கிவிட்டிருக்கிறது.. மத்திய தரைக்கடல் இப்போது சடலங்களை தன்னுள் கொண்ட மனிதபுதை குழியாகி கிடக்கிறது.

லிபியா பேரழிவுக்கு என்ன காரணம்? 10 பாயிண்டுகள்:
1. 2011-ல் லிபியாவின் மக்கள் தலைவராக திகழ்ந்த கடாபி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இரு நாடுகளாக சிதறுண்டு போனது. இரு போட்டி அரசாங்கங்கள் நடைபெற்று வருகின்றன.
2. வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் ஞாயிற்றுக்கிழமையன்று டேனியல் புயல் சூறையாடியது. கனமழை கொட்டியது.
3. டேனியல் புயல் காரணமாக 24 மணி நேரத்தில் 400 மி.மீ (40 செ.மீ.) மழை கொட்டியது.
4. லிபியாவில் செப்டம்பர் மாதம் சராமரியாக வெறும் 1.5 மி.மீ மழைதான் பெய்யும். அதாவது 400 மடங்கு மழை அதிகமாக பெய்தது.
5. 400 மடங்கு கனமழை கொட்டியதால் வாதி டெர்னா ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த 2 அணைகள் உடைந்து ஒட்டுமொத்த ஆறும் பெரும் சுனாமியைப் போல டேர்னா நகருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது.
6. டேர்னாவில் 12 கி.மீ. தொலைவில் முதலில் இருந்த பலவீனமான அணை உடைந்தது. அந்த அணை நீர் மற்றொரு அணைக்குள் பாய்ந்து அந்த 2 அணைகள் ஒட்டுமொத்தமாக உடைந்து மொத்த தண்ணீரும் டேர்னா நகருக்குள் பாய்ந்தது.
7. 1,00.000 பேர் வசிக்கக் கூடிய டேர்னா நகரமே ஒட்டுமொத்தமாக வெள்ளத்தில் மூழ்கியது. டேர்னா நகரில் 10 அடி உயரத்துக்கு வெள்ளம் பாய்ந்தோடியது.
8. டேர்னா மாநகரில் இவ்வளவு பெரிய பேய்மழையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,000 முதல் 20,000 வரை இருக்கக் கூடும் என்கிறார் மேயர்.
9. வாதி டேர்னா ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உடல்கள் மத்திய தரைக்கடலுக்குள் புதையுண்டு போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
10. டேர்னாவில் அணைகள் இடிந்து விழுந்தது போர் விமானங்கள் பயங்கர சப்தங்களுடன் தாக்குதல் நடத்தியதைப் போல பூமியையே அதிரவைத்ததாக உயிர் தப்பியவர்கள் கூறி உள்ளனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications