ஐரோப்பாவை தொடர்ந்து... ஆசிய நாடுகளிலும் தொடரும் புர்கா தடை.. என்ன காரணம்?
கொழும்பு: பல்வேறு ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து, இலங்கையிலும் பொது இடங்களில் புர்கா அணியத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் பெண்கள் புர்கா என்று அழைக்கப்படும் ஒரு வகை ஆடைகளையே பொது இடங்களில் அணிவார்கள். இஸ்லாம் மத்தின் கலாச்சாரத்தைப் பின்பற்றும் வகையில் இந்த உடையை அவர்கள் அணிந்து வருவதாக கூறப்படுகிறது.
இருப்பினும், பயங்கரவாதிகள் பலரும் புர்கா உடையை அணிந்து கொண்டு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் புர்கா என்பது தேசியப் பாதுகாப்பு தொடர்பான பிரச்னையாக சில நாடுகளில் உருவெடுத்துள்ளது.

இலங்கையில் தடை
அண்டை நாடான இலங்கையில் பொது இடங்களில் புர்கா அணிய தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று சர்ச்சுகள், ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் வெளிநாட்டினர் உள்ளிட்ட 253 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் புர்காவை அணிந்து வந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனாலேயே அங்கு புர்கா தற்போது தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள்
புர்காவுக்கு தடை விதிக்கும் முதல் நாடு இலங்கை இல்லை. ஏற்கனவே பல்வேறு நாடுகளிலும் புர்கா உடைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு ஐரோப்பாவின் பிரான்ஸ் நாட்டில் முதல்முதலாக கடந்த புர்கா அணிய தடை விதிக்கப்பட்டது, அதன் பின்னர் டென்மார்க், ஆஸ்திரியா, நெதர்லாந்து, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளும் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்குத் தடை விதித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு, சுவிட்சர்லாந்தில் அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராகவே புர்கா உடைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் வாக்களித்தனர்.

ஆப்பிரிக்க நாடுகள்
அதேபோல 15 மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை உள்ளடக்கியுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூக கூட்டமைப்பும் கடந்த 2015ஆம் ஆண்டு புர்கா அணிய தடை விதித்தது. இந்த நாடுகளில் சுமார் 18.15 கோடி இஸ்லாமியர்கள் உள்ளனர். இருப்பினும், கடந்த 2015ஆம் ஆண்டு புர்கா அணிந்து வந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், பலர் உயிரிழந்தனர். இதன் காரணமாக புர்கா அணிய அந்த நாடுகள் தடை விதித்துள்ளன.

Array
வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இதுவரை புர்கா தடை குறித்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அதேபோல ஆசிய நாடுகளில் சீனா, இலங்கை தவிர மற்ற முக்கிய நாடுகளில் புர்காவிற்கு தடை விதிக்கப்படவில்லை. இந்தியாவிலும் தற்போது வரை புர்கா தடை பற்றி எவ்வித விவாதமும் நடத்தப்படவில்லை.

காரணம் என்ன?
ரஷ்யா, துருக்கி, பிரான்ஸ், இத்தாலி என உலகம் முழுவதும் தற்போது வரை 26 நாடுகளில் புர்கா அணிய கட்டுப்பாடுகள் அல்லது முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் பாலின சமத்துவம், பெண் விடுலை உள்ளிட்டவை காரணமாக சில நாடுகளில் மட்டுமே புர்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகளில் பயங்கரவாதிகளின் தாக்குதல்களைக் காரணம் காட்டி, தேசியப் பாதுகாப்பு காரணமாகவே புர்கா உடை தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications