Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பாகிஸ்தானை காப்பாற்ற பிரதமர் மோடி தேவை.." அழுது புலம்பும் பாக். இளைஞர்.. டிரெண்டாகும் வீடியோ

பிரதமர் மோடியை பாராட்டிப் பேசும் பாகிஸ்தான் இளைஞர் வீடியோ டிரெண்டாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானில் இப்போது பொருளாதார நிலை ரொம்பவே மோசமாக உள்ளது. இதற்கிடையே அங்குள்ள இளைஞர் ஒருவர் தங்களைக் காக்கப் பிரதமர் மோடி வேண்டும் என்று கூறும் வீடியோ இப்போது டிரண்டாகி வருகிறது.

Recommended Video

    Allah, Give Us Modi! Pakistan-னை Modi தான் காப்பாற்றனும்! அழுது புலம்பிய Pakistan இளைஞர்

    நமது அண்டை நாடான பாகிஸ்தானில் இப்போது மோசமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பிறகு இப்போது வரிசையாக இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

    இலங்கையில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.. அங்கு ஏற்பட்ட பொருளாதார குழப்பம் அரசியல் குழப்பத்திற்கும் வித்திட்டது. இந்த இரு நாடுகளைத் தொடங்கி வரிசையாகப் பல நாடுகளிலும் இதே நிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

     பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    இந்தச் சூழலில் இப்போது பாகிஸ்தானிலும் இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையும் கூட உச்சம் தொட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நிலைமையை அந்நாட்டு அரசு வெளிநாட்டு உதவிகளைக் கோரியிருந்தது. சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்தாலும், அது பல கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக, வருமானத்தை அதிகரிக்க வரி மற்றும் எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்த நிர்ப்பந்திக்கப்பட்டது.

     ஷெபாஸ் ஷெரீப் அரசு

    ஷெபாஸ் ஷெரீப் அரசு

    இதனால் அங்கு அனைத்து அடிப்படை பொருட்களின் விலை மேலும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.. இதற்கிடையே அங்குள்ள இளைஞர் ஒருவர் பிரதமர் மோடி குறித்து பேசும் பேச்சு இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல யூடியூபர் சனா அம்ஜத் அங்குள்ள மக்களிடம் அரசு குறித்து கருத்து கேட்கிறார். அப்போது தற்போதுள்ள ஷெபாஸ் ஷெரீப் அரசை கடுமையாக விமர்சிக்கும் இளைஞர் ஒருவர், நரேந்திர மோடி தங்கள் நாட்டை ஆட்சி செய்திருந்தால் தங்களாலும் நியாயமான விலையில் பொருட்களை வாங்கியிருக்க முடியும் என்று கூறுகிறார். இந்த வீடியோ தான் இப்போது வேகமாக பரவி வருகிறது.

     பிரிக்கப்பட்டிருக்கக் கூடாது

    பிரிக்கப்பட்டிருக்கக் கூடாது

    பாகிஸ்தானில் சில இடங்களில், "நீங்கள் உயிர் பிழைக்க வேண்டுமென்றால்.. பாகிஸ்தானை விட்டு வெளியேறுங்கள், இந்தியாவில் தஞ்சம் அடைய வேண்டும் என்றும் செல்லுங்கள்" என்று கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இது குறித்து சனா அம்ஜத் கேட்க ஒருவர், "நான் பாகிஸ்தானில் பிறந்திருக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.. பாகிஸ்தான் தனியாக பிரிக்கப்படாமல் இருந்திருக்க வேண்டும். அப்படியிருந்தால் எங்களால் நியாயமான விலையில் அடிப்படை பொருட்களை வாங்கியிருக்க முடியும். எங்கள் குழந்தைகளுக்கு தினசரி உணவை அளித்திருக்க முடியும்.

     குறைந்த விலையில் பொருட்கள்

    குறைந்த விலையில் பொருட்கள்

    பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிக்கப்படாமல் இருக்க விரும்புகிறேன். அப்படி பிரிக்காமல் இருந்திருந்தால் நாங்களும் ஒரு கிலோ தக்காளியை 20 ரூபாய்க்கும் சிக்கனை 150 ரூபாய்க்கும், பெட்ரோலை 50க்கும் வாங்கியிருப்போம். துரதிர்ஷ்டவசமாக இப்படித் தனி தேசமாக பிரிந்து சிக்கல்களை சந்தித்து வருகிறோம். நரேந்திர மோடியால் மட்டுமே மக்களை காக்க முடியும்.. மோடி நம்மை விட மிகவும் சிறந்தவர், அவரது மக்கள் அவரை மிகவும் மதிக்கிறார்கள், பின்பற்றுகிறார்கள்.

     நரேந்திர மோடி

    நரேந்திர மோடி

    நரேந்திர மோடி இருந்தால், நமக்கு நவாஸ் ஷெரீப் அல்லது பெனாசிர் அல்லது இம்ரான் தேவைப்பட மாட்டார்கள். மறைந்த முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் (பர்வேஸ்) முஷாரப் கூட தேவைப்பட்டிருக்க மாட்டார். எங்களுக்கு பிரதமர் மோடி மட்டுமே வேண்டும். ஏனென்றால் அவரால் மட்டுமே நாட்டில் இருக்கும் அனைத்து குளறுபடிகளையும் சமாளிக்க முடியும். இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது, நாம் மிக மோசமான நிலையில் உள்ளோம்.

     அத்தியாவசிய பொருட்கள்

    அத்தியாவசிய பொருட்கள்

    பாகிஸ்தானை இந்தியாவுடன் ஒப்பிட முடியாது.. எனவே, இரு நாடுகளையும் ஓப்பிடவே கூடாது.. மோடியின் ஆட்சியில் வாழ நான் தயாராக இருக்கிறேன்.. மோடி ஒரு பெரிய மனிதர், அவர் மோசமான மனிதர் அல்ல.. இந்தியர்களுக்கு நியாயமான விலையில் தக்காளி, சிக்கன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறது. இரவில் உங்கள் குழந்தைகளுக்கு உங்களால் உணவளிக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு எனது வலி புரியும். மோடியை நமக்குக் கொடுத்து நாட்டை ஆள வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று கண்ணீருடன் கூறினார்.

     உச்சத்தில் விலைவாசி

    உச்சத்தில் விலைவாசி

    பாகிஸ்தானில் இப்போது ஒரு லிட்டர் பால் 250 ரூபாய்க்கும் ஒரு கிலோ சிக்கன் 780 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப், பாகிஸ்தான் திவால் ஆகிவிட்டதாக கேள்விப்பட்டதாகவும் பாகிஸ்தானின் பொருளாதார நாசமாகி வருவதாகவும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+