உப்பை மட்டும் இப்படி ஸ்டைலா போட்டுட்டு.. கறியை ரூ.80000க்கு விற்கலாமா! நெட்டிசன்கள் கதறல்! என்னாச்சு
வாஷிங்டன்: உணவகம் ஒன்றில் ஒரு சின்ன பீஸ் ஸ்டீக் கறி ரூ.80,000, கூல் டிரிங்க்ஸ் ரூ.800க்கு விற்பனை செய்யப்படுவது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அது தொடர்பான போட்டோவும் டிரெண்டாகி வருகிறது.
இப்போது உலகில் டிரெண்டிங்கில் இருப்பது என்றால் அது உணவகங்கள் தான். விலையுயர்ந்த உணவகங்களுக்குச் சென்று அங்கு சாப்பிடுவதை வீடியோ எடுத்துப் போடுவது இப்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

இதனால் இதுபோன்ற உணவகங்களுக்கு எப்போதும் மவுசு அதிகம் தான். இது மாதிரியான ஹோட்டகளில் பொதுவாக உணவு விலை அதிகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பிரபல துருக்கி சமையல்காரர் நுஸ்ரெட் கோக்ஸி இதை அடுத்த லெவலுக்கே எடுத்துச் சென்றுவிட்டார்.
உப்பால் பிரபலமான செஃப்: சர்வதேச அளவில் இணையத்தில் டிரெண்டிகில் இருக்கும் செஃப்களில் ஒருவர் நஸ்ரெட் கோக்சே.. ஸ்டீக் உணவில் இவர் தனித்துவமான முறையில் உப்பைத் தூவுவார். கையை கொக்கு போல மடக்கி வைத்து இவர் உப்பு தூவுவது இணையத்தில் டிரெண்டிங் ஆனது. கடந்த 2017இல் இந்த உப்பு போடும் வீடியோ வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்தது. இதற்காகவே இவரை சால்ட் பே என்று இவரது ரசிகர்கள் அழைப்பார்கள். அதில் கிடைத்த புகழைக் கொண்டு அவர் நஸ்ர்-எட் என்ற விலையுயர்ந்த உணவகம் ஒன்றையும் ஆரம்பித்தார்.
12 படங்களை பார்த்தால் போதும்.. ரூ.1.6 லட்சத்தை அள்ளி கொடுக்கும் பிரபல நிறுவனம்! இது நல்லா இருக்கே
இந்த நஸ்ர்-எட் உணவகத்தில் அனைத்து பொருட்களின் விலையும் உச்சத்தில் தான் இருக்கும். அதிலும் சமீப ஆண்டுகளில் அனைத்து பொருட்களின் விலையும் அங்கே அதிகரித்துவிட்டதாக இணையத்தில் நெட்டிசன்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஹோட்டலில் இருக்கும் உணவின் தரம் அந்தளவுக்கு இல்லை என்றும் உணவின் தரம் சாதாரணமாக இருக்கும் போது, இந்தளவுக்கு விலையில் விற்பதில் அர்த்தமே இல்லை என்றும் பொதுமக்கள் விமர்சிக்கிறார்கள்.
உப்பு போட்டால் போதுமா: சமீபத்தில், எக்ஸ் தளத்தில் நெநெட்டிசன்கள் ஒருவர் நஸ்ர்-எட் உணவகத்திற்குச் சென்று தான் சாப்பிட்ட வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில் தங்கத் தாளில் சுற்றப்பட்ட உணவை அவர் ஸ்டைலாக கட் செய்கிறார். மேலும், மற்றொரு உணவையும் ஸ்டைலாக கட் செய்யும் அவர். பிறகுத் தனது ட்ரேட் மார்க் ஸ்டைலில் உப்பையும் போடுகிறார். இதற்கு அவருக்கு உதவிக்கு ஒருவர், சுற்றியும் இரண்டு பேர் என உதவியாளர்கள் வேறு இருந்துள்ளனர்.
மேலும், அந்த நபர் உணவின் விலையையும் பகிர்ந்துள்ளார். அங்கே 'கோல்டன் டோமாஹாக்' என்று அழைக்கப்படும் தங்கத் தாளில் சுற்றப்பட்ட அந்த உணவின் விலை ஜஸ்ட் 1000 டாலர். அதாவது இந்திய மதிப்பில் ரூ, 83,000. அதேபோல அவரது உணவகத்தில் ஒரு பாட்டில் ஸ்பிரைட் விலை 10 டாலராகும். அதாவது தோராயமாக இது ரூ.800 ஆகும். அந்த நாட்டிற்கு இந்த விலை ஓகே என்று நினைக்காதீர்கள். அங்கும் சந்தை மதிப்பை காட்டிலும் 10 மடங்கு அதிக விலைக்கே விற்கப்படுகிறதாம்.
கொந்தளிக்கும் நெட்டிசன்கள்: அவர் தனது பில்லையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அங்கே உணவு சுமாராகவே இருக்கும் நிலையில், இந்த ரேட்டிற்கு உணவை விற்பனை செய்யப்படுவது எல்லாம் ரொம்ப ஓவர் எனச் சாடியுள்ளனர்.
மேலும், தன்னை உலகின் தலைசிறந்த செஃப் என்று சொல்லிக் கொள்ளும் அவர் கத்தியைக் கையாள்வது கூட தவறாக உள்ளதாகப் பலரும் சாடி வருகிறார்கள். உணவைக் கட் செய்யும் முன்பு, கத்தியைச் சுத்தப்படுத்த வேண்டும் அதைக் கூட இந்த நபர் சரியாகச் செய்வதில்லையே என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications