உடம்பு நல்லா இருக்கு.. ஆனாலும் 50 ஆண்டுகள் மருத்துவமனையில் இருந்த நபர்! காரணத்தை கேட்டால் ஷாக்
லண்டன்: பிரிட்டன் நாட்டில் சீரியஸான பாதிப்பு எதுவும் இல்லாமலேயே ஒருவர் சுமார் 50 ஆண்டுகள் மருத்துவமனையில் இருந்துள்ளார். ஏன் அவர் இத்தனை காலம் மருத்துவமனையில் இருந்தார். இதன் பின்னணியில் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பொதுவாக நமக்கு எதாவது உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டால் தான் மருத்துவமனைக்குச் செல்வோம். ஆனால் இங்கே ஒருவர் சீரியஸான பாதிப்புகள் எதுவும் இல்லாமலேயே சுமார் 50 ஆண்டுகள் மருத்துவமனையிலேயே இருந்துள்ளார்.

சுமார் 52 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் அவர் வெளியே வந்துள்ளார். அவர் எதற்காக இத்தனை காலம் மருத்துவமனையில் இருந்தார். அவருக்கு என்ன சிக்கல் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சார்லஸ் எஸ்லர்: பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் சார்லஸ் எஸ்லர்.. பத்து வயது ஆகும் போது இவருக்கு லேசான கற்றல் குறைபாடு மற்றும் வலிப்பு நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இவர் அங்கிருந்த சார்லஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவமனைக்குச் சென்ற இவர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையிலேயே இருந்து வருகிறார்.
50 ஆண்டுகள்: இது தொடர்பாக அவரது சகோதரி மார்கோ கூறுகையில், "மருத்துவமனையை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வசிக்கச் சொன்னோம். ஆனால், அவன் கேட்கவே இல்லை. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் அளவுக்கு நிலைமை மோசம் இல்லை என்றாலும் எனது சகோதரன் மருத்துவமனையில் இருந்து வெளியே வரச் சம்மதிக்கவில்லை. இதனால் 50 ஆண்டுகளுக்கு மேல் அவன் மருத்துவமனையிலேயே இருந்தான்.
"ரத்த உறைதல்.." கொரோனா வேக்சின் பாதுகாப்பானதா? பக்க விளைவு ஏற்படுமா! மருத்துவர்கள் புதிய விளக்கம்
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கடந்தாண்டு அவனுக்கு 62 வயதில் தான் தனியாகத் தங்க பிளாட்டின் சாவியை என்னிடம் பெற்றுக் கொண்டான்" என்றார். கடந்த 50 ஆண்டுகளாக சார்லஸுக்கு சரியான இடத்தை கண்டுபிடிக்க அவர்கள் குடும்பத்தினர் கடுமையாக முயன்றுள்ளனர். இருப்பினும், அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வர மறுத்துவிட்டாராம்.
அவர் மட்டுமில்லை: இன்னும் கூட பிரிட்டன் நாட்டில் கற்றல் குறைபாடுகள் காரணமாகப் பல நூறு பேர் மருத்துவமனைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் அல்லது குடும்பத்திலிருந்து தனித்து சிகிச்சை மையங்களில் வாழ்கிறார்கள். பிரிட்டன் சட்டப்படி கற்றல் குறைபாடு இருப்பவர்கள் தங்கள் வீடுகளிலேயே வாழலாம் என்ற சட்டம் இருந்தாலும் அங்கு எதார்த்தத்தில் பலரும் இவரைப் போலத் தான் ஆண்டுக்கணக்கில் மருத்துவமனைகளில் இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
52 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக வெளியே வந்துள்ள சார்லஸ் கூறுகையில், "50 ஆண்டுகள் நான் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்போது தான் ஒரு வழியாக நான் வெளியே வந்துள்ளேன். இனிமேல் என்னால் ஜாலியாக எங்கு வேண்டுமானாலும் வெளியே செல்ல முடியும். பிடித்த ஹோட்டலில் சென்று பிடித்த உணவைச் சாப்பிட முடியும். எனக்கு ஃபிஷ் மற்றும் சிப்ஸ் பிடிக்கும். இப்போது தான் என்னால் விருப்பம் போல அதைச் சாப்பிட முடிகிறது" என்றார்.
சட்டச் சிக்கல்கள்: அவரை மருத்துவமனையில் இருந்து வெளியே கூட்டி வரச் சட்ட ரீதியாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடித்தாக சார்ல்ஸ் சகோதரி தெரிவித்துள்ளார். சுமார் 14 ஆண்டுகள் போராடியதாகவும் இதற்காக பல்வேறு பிரிவுகளில் இருந்தும் அனுமதி பெற வேண்டி இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications