அமெரிக்கா, இந்தியா ஜாக்கிரதை தேவை! சீனாவை புரட்டும் கொரோனா.. பேரழிவை ஏற்படுத்தும்! புதிய வார்னிங்
பெய்ஜிங்: சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. இதனிடையே உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உலகெங்கும் மீண்டும் கொரோனா பேரழிவை உருவாக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இப்போது மிக மோசமான கொரோனா அலை ஒன்று ஏற்பட்டுள்ளது. அங்கு அமலில் இருந்த ஜீரோ கோவிட் பாலிசி விலக்கிக் கொள்ளப்பட்ட உடன் வைரஸ் பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. இதனால் மற்ற உலக நாடுகளும் அச்சத்தில் உள்ளன.
ஏனென்றால் உலகின் இதர நாடுகளில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து இப்போது தான் மெல்ல மீண்டது. கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு, உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வந்தது.

சீனா
இந்தச் சூழலில் தான் சீனாவில் இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. அங்குள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளால், அதிலும் அவர்களில் பெரும்பாலானோருக்குத் தீவிர வைரஸ் பாதிப்பே ஏற்பட்டுள்ளது. சீனாவின் கொரோனா வேக்சின்கள் கொரோனா தீவிர பாதிப்பைக் கட்டுப்படுத்த தவறியுள்ளது. இதுவே வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரிக்கவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சீனாவில் இப்போது ஏற்பட்டுள்ள வைரஸ் பாதிப்பு, எங்கு மீண்டும் கடந்த 2019இல் ஏற்படுத்தியதை போன்ற ஒரு பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் உலக மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

ரொம்ப மோசம்
இதனிடையே சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து The HK Post எனப்படும் ஹாங்காங் போஸ்ட் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீன மக்கள் மற்றும் உலக நாடுகளிடம் உண்மையான நிலையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அங்கு பெய்ஜிங், ஷாங்காய் போன்ற முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் அட்மிட் ஆக இடம் கூட கிடைக்காத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், அங்குப் பள்ளிகளும் கூட மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2.5 கோடி பேருக்கு கொரோனா
நிலைமையைக் கட்டுக்குள் வைக்க முடியாமல் சீன அதிகாரிகள் திணறி வருகின்றனர். கொரோனா பரவ தொடங்கிய பின்னர், கடந்த 3 ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்ட மிக மோசமான அலையாகவே இது உள்ளது. அங்குத் தினசரி கொரோனா பாதிப்பு பல லட்சத்தை எட்டியுள்ளது. 2.5 கோடி மக்கள் உள்ள சீனாவின் பொருளாதார 1.25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்தாலும் கூட, சீன அரசு இதை மறுத்தே வருகிறது. கொரோனாவை சிறப்பாகக் கையாண்டு வருவதாகவே அவர்கள் கூறு வருகின்றனர்.

உண்மை நிலை
அதற்கேற்ப தினசரி கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களைப் பகிர்வதையும் சீன அரசு நிறுத்திக் கொண்டுள்ளது. சீன அரசு என்ன தான் மழுப்பலான செயல்களைச் செய்தாலும் கூட, சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவில் தெளிவாகவே தெரிகிறது. 140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் சுமார் 25 கோடி பேருக்குக் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது வரும் காலங்களில் மேலும் மோசமாகும் என்ற அஞ்சப்படுகிறது. சீனா கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட நிறுத்தியதும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்
2022-2023 கொரோனா அலை ஏற்பட்டால், உலகளவில் ஏற்படும் பாதிப்பு சிறியதாக இருக்காது என்று தொற்றுநோயியல் நிபுணர் எரிக் ஃபீகல்-டிங் கூறினார். சீனாவில் நடப்பது சீனாவுடன் நிச்சயம் நின்றுவிடாது என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் கொரோனா அலை ஏற்பட்டால், அதைத் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இப்போதே எடுக்கத் தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் அதிக மக்கள் தொகை உள்ளதால், கொரோனா பரவல் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் இதனால் கொரோனா பரவ தொடங்கும் முன்பே அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஜாக்கிரதையாக இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பேரழிவு
மாஸ்க், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளைப் பொதுமக்கள் வாங்கும் போக்கும் அதிகரித்துள்ளது. பொதுமக்களும் சரி, உலக நாடுகளும் சரி அடுத்த ஒரு கொரோனா அலை உருவாக வாய்ப்புள்ளதாக அஞ்சுகின்றனர். சீனாவில் இப்போது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் இந்த பாதிப்பை நாம் சரியாகக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அப்படியில்லை என்றால், இது உலகம் முழுவதும் அழிவை உருவாக்கலாம் என்றும் The HK Post தெரிவித்துள்ளது.

பொருளாதார பாதிப்பு
இப்போதுள்ள நிலையை வைத்துப் பார்க்கும்போது சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு சர்வதேச பொருளாதாரத்தில் எதிரொலிக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார். சீனாவின் இந்த நிச்சயமற்ற தன்மை உலக நாடுகள், குறிப்பாகச் சிறிய நாடுகள் மற்றும் சீனாவுடன் வணிக தொடர்பை வைத்துள்ள இந்தோனேசியா, சிலி போன்ற நாடுகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications