கைதாகும் புதின்? "பிடி வாரண்ட்" எல்லாம் பலன் தருமா.. உலக நாடுகளுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் இதுதான்
உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் மீது பல்வேறு போர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகச் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. உலக நாடு ஒன்றின் தலைவருக்கு எதிராகவே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமர் புதன் கடந்தாண்டு பிப். மாதம் உக்ரைன் நாட்டிற்கு எதிராகப் போரைத் தொடங்கினார். இந்த போர் ஓராண்டைக் கடந்துவிட்ட போதிலும், இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா, உக்ரைன் நாடுகள் மட்டுமின்றி உலகின் பல நாடுகளும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் போர்க் காலத்தில் ரஷ்யப் படைகள் பல்வேறு விதிமீறல்களிலும் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

புதினுக்கு பிடிவாரண்ட்
இதனிடையே உக்ரைனில் நடக்கும் போர்க் குற்றங்களுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினே பொறுப்பு என்று குற்றம் சாட்டி நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றம் (ஐசிசி) ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. போர்க் காலத்தில் குழந்தைகள் கடத்தல் உள்ளிட்ட பகீர் குற்றச்சாட்டுகள் புதின் மீது வைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரஷ்ய அதிபர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா-பெலோவாவுக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புகார்கள்
ஆனால், வழக்கம் போல ரஷ்யா இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் முற்றிலுமாக மறுத்துள்ளது. மேலும், சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பை ரஷ்யா அங்கீகரிக்கவில்லை என்பதால் பிடி வாரண்ட் செல்லாது என்றும் ரஷ்யா கூறியுள்ளது. இருப்பினும், உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்களில் புதின் மீது குற்றம் சாட்டுவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக ஐநா கூறியுள்ளது. உக்ரைன் போர் தொடங்கியது முதலே அங்குப் போர்க் குற்றங்கள் நடந்ததாகவும் இதற்கு புதினே முக்கிய காரணம் என்றும் ஐநா தரப்பில் கூறப்படுகிறது.

குழந்தைகள்
உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாகக் குழந்தைகளை நாடுகடத்துதல் உள்ளிட்ட போர்க்குற்றத்திற்கு புதினே பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது. புதின் நேரடியாக அல்லது மற்றவர்களுடன் இணைந்து இந்த குற்றங்களைச் செய்திருக்கலாம்.. அல்லது அவர் தனது ராணுவ அதிகாரிகளைக் கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்றும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அந்தக் குழந்தைகளில் சிலர் ரஷ்யக் குடியுரிமையைப் பெற நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்றும் அக்குழந்தைகள் கட்டாயமாக வளர்ப்பு குடும்பங்களில் சேர்க்கப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

குழந்தை கடத்தல்
மேலும் கூறுகையில், "இதனால் வேறு வழியில்லாமல் அவர்கள் ரஷ்யாவில் நிரந்தரமாக இருக்கிறார்கள். முதலில் இப்படி இடமாற்றம் செய்வது தற்காலிகமானவை என்றே கூறினர். இருப்பினும், இப்போது வரை பெற்றோர் மற்றும் குழந்தைகள் சந்திக்க முடியவில்லை. அங்குப் பல சிரமங்கள் இருக்கிறது. இதனால் குழந்தைகள் தனியாக இருக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்படி ரஷ்யாவிற்கு வலுக்கட்டாயமாக 16,221 குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது போர்க் குற்றமாகவே கருதப்படும். இதில் ல்வோவா- பெலோவா இணை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

பரபர குற்றச்சாட்டுகள்
இது மட்டுமின்றி உக்ரைனில் நடந்த பலாத்காரம், சித்திரவதை தவிர, உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல் உள்ளிட்ட அனைத்திற்கும் ரஷ்யாவே பொறுப்பு என்று ஐ.நா விசாரணைக்குழு கூறியுள்ளது. குறிப்பாக புச்சா மற்றும் இசியம் பகுதிகளில் மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்களில் ரஷ்யா ஈடுபட்டதாகவும் அதில் காட்டமான கருத்துகள் கூறப்பட்டுள்ளது. முன்னதாக உக்ரைனின் கெர்சன் பகுதியில் மட்டும் ரஷ்யா 400 போர்க்குற்றங்களைச் செய்ததாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கைதாகும் புதின்?
இனப்படுகொலை, மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் போன்ற சர்வதேச சமூகத்திற்குக் கவலையை ஏற்படுத்தும் குற்றங்களைத் தான் சர்வதேச நீதிமன்றம் விசாரிக்கும். அதேநேரம் சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கைது செய்யும் அதிகாரம் எதுவும் சர்வதேச நீதிமன்றத்திற்கு இல்லை. இது மட்டுமின்றி ரஷ்யா சர்வதேச நீதிமன்றம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் இல்லை.. இதனால் ரஷ்யாவில் இருந்து எந்தவொரு நபரையும் ஆஜராக வைப்பதே கிட்டத்தட்ட முடியாத ஒன்று தான்.

ஒரே ஒரு வாய்ப்பு
புதின் ரஷ்யாவில் சர்வ வல்லமை பொருந்திய நபராக இருந்து வருகிறார். அங்கு உச்சபட்ச பதவியில் இருக்கும் புதினுக்கு எதிரிகள் யாருமே இல்லை. இதனால் அவர் சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாய்ப்பே இல்லை. புதின் ரஷ்யாவில் இருக்கும் வரை, அவர் கைது செய்யப்படும் அபாயம் இல்லை. ரஷ்யாவுக்கு வெளியே வந்தால், வேறு நாடு அவரை கைது செய்ய வாய்ப்பிருக்கிறது. இருப்பினும், எந்தவொரு நாடும் புதினை கைது செய்யாது என்றே கூறப்படுகிறது. மேலும், ஏற்கனவே, புதின் மீது பல சர்வதேச நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளதால்.. அவர் வேறு நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் குறைவாகும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications